March 23, 2019

லலிதா சஹஸ்ரநாமம் (485- 494) (With English meanings)

Image result for வதனத்வயா



யோகினி ந்யாஸம்


அனாஹதாப்ஜ நிலயா;
ஷ்யாமாபா;
வதனத்வயா;
தம்ஷ்ரோஜ்வலா;
அக்ஷ-மாலாதி தரா;
ருதிர சம்ஸ்திதா;
கால ராத்ர்யாதி ஷக்த்யூக வ்ருதா;
ஸ்னிக்தௌதன்ன ப்ரியா;
மஹா வீரேந்த்ர வரதா;
ராகின்யம்பா ஸ்வரூபிணீ;

() அனாஹத = அனாஹத சக்கரம் எனும் இதயச் சக்கரம், பச்சை நிறமுடைய
   நான்காம் குண்டலினி சக்தி கேந்திரம்.
   அப்ஜ = தாமரை

#485 அனாஹதாப்ஜ நிலயா = அனாஹத சக்கரத்தில் நிலைத்திருப்பவள்.

() ஷ்யாம = கருமை - கரும்பச்சை

#486 ஷ்யாமாபா = கரும்பச்சை நிறத்தவள்

() த்வயா = இருமை - இரட்டை - இரண்டு

#487 வதனத்வயா = இரு முகம் கொண்டவள்

() தம்ஷ்ரா = பெரிய பற்கள் - தந்தம்
   உஜ்வலா = மின்னுதல்

#488 தம்ஷ்ரோஜ்வலா = தந்தத்தைப் போன்ற பெரிய பற்களை பிரகாசிப்பவள்

() அக்ஷமாலா = ஜப மணிகளாலான மாலை.
  ஆதி = முதலியவை - போன்றவை (இவ்விடத்தில் பொருந்தி வரும்     அர்த்தங்கள் )
  தரா = கொண்டிருத்தல்


#489 அக்ஷ-மாலாதி தரா = ஜபமணிகளாலான மாலைகளை தரித்தவள் (ருத்ராக்ஷம் போன்ற ஜபமாலைகள் பலவும்) *

* அக்ஷ என்றால் எழுத்துக்கள் என்றும் பொருளுணரப்படுவதால், அக்ஷ என்பது சமஸ்க்ருத மொழியின் 'அ' முதல் 'க்ஷ' வரையிலான  எழுத்துக்களையும் குறிப்பதென்பதால், அவ்வெழுத்துக்களால் அணியப்பட்ட மாலை என்பதும் சிலரின் கருத்து.


() ருதிர = உதிரம் = ரத்தம்
   ஸம்ஸ்தித் = இருத்தல்

#490 ருதிர சம்ஸ்திதா = உதிரத்தில் உறைந்திருந்து வழி நடத்துபவள்

() காலராத்ரி = அனாஹத சக்ர யோகினியை சூழ்ந்துள்ள பனிரெண்டு    சக்திகளுள் ஒருவள்
  ஆதி = முதலியவை - போன்றவை (இவ்விடத்தில் பொருந்தி வரும் அர்த்தங்கள் )
  யுக = குழு
  ஷக்த்யுக = சக்திகளின் குழு
  வ்ருதா = சூழப்பட்ட

#491 கால ராத்ர்யாதி ஷக்த்யூக வ்ருதா = காலரத்ரி முதலிய சக்திகளால் சூழப்பட்டவள் *

* அனாஹத சக்கரத்தின் யோகினி பனிரெண்டு இதழ் கொண்ட தாமரையால் பிரதிபலிக்கப்படுகிறாள். ஒவ்வொரு இதழும் ஒரு சக்தி ஸ்வரூபத்தால் ஆளப்படுகிறது. பனிரெண்டு சக்திகளால் சூழப்பட்டு, அவர்களை ஆள்பவளும் ஆகிறாள்.


() ஸ்னிக்த = கொழுப்பு நிறைந்த = கொழுப்புடன் கூடிய
    ஓதன = சமைத்த அரிசி - அரிசிச்சோறு                                       
    ஔதன = பால் மடி - (அதனின்றுபெறப்படும் நெய், வெண்ணை முதலிய
    பொருட்களையும் குறிக்கும் )

#492 ஸ்னிக்தௌதன ப்ரியா = நெய்யுடன் கூடிய (அல்லது கொழுப்பு சத்து நிறைந்த) அன்னத்தை விரும்பி ஏற்பவள்

() மஹாவீர = வலியவர்கள் - வீரன் - வீரத்தனம்
   இந்த்ர = முதலாவதான - பிரதான - மேலான

#493 மஹாவீரேந்திர வரதா = வீரர்களுக்கு அற்புத அரிய வரங்கள் அருள்பவள் *

* மஹாவீரேந்திர என்ற சொற்பதத்திற்கு, புலனின்பங்களை வெற்றி கண்ட ஞானிகள், யோகிகள் என்ற ஆழ்ந்த பொருள் உணரலாம்.

() ராகின்யம்பா = ராகினி என்ற அம்பிகை - அனாஹதத்தை ஆளும் ராகினி என்ற    யோகினி

#494 ராகின்யம்பா ஸ்வரூபிணீ = ராகினி என்ற யோகினி தேவதை (அனாஹத சக்கர தேவதையின் பெயர்)

( மேற்கண்ட நாமங்கள் ராகினி என்ற யோகினியின் புறத்தோற்றம், இயல்பு முதலியவைகளை தியானிக்கிறது )


தொடரும்


Lalitha Sahasranama (485 - 494)

Yogini Nyasam

(Naamas enumerating yOgini Raakini, described as the presiding deity of anaahatha chakra)

Anaahathabja Nilaya;
Shyaamabha;
Vadhanadvaya;
Dhamshtrojvala;
Aksha-maaladhi dhara;
Rudhira Samsthitha;
Kalarathryadhi Shakthyuga Vrutha;
Snigdoudhana priya;
Mahaa-veerendra varadha;
Rakinyamba Swaroopini ;


()
Anaahatha = Anaahatha Chakra - The Heart chakra which is the fourth primary chakra, is Green in color
abja = Lotus

#485 Anahathabja nilaya = Who resides in Anaahatha Chakra

() Shyaama = Dark Green - dark color

#486 Shyamabha = Who is dark green in complexion

() Dvaya = two - double

#487 Vadhanadvaya = Who has two faces

() Dhamshtra = large tooth - tusk
   ujvala = to shine

#488 Dhamshtrojvala = Whose big teeth shines radiantly *
*  Her teeth are large like tusks

() Akshamala = Garland made of rosary beads
   adhi = et caetera ie. etc - and so on (in this context)
   dhara = to possess - carry

#489 Aksha-maaladhi dhara = Who wear garlands of rosary beads etc  (and the like ) *
* Another school of thought is that, Akshamala here refers to beads representing sanskrit
alphabets "a" to "ksha" . Aksha also means letters or alphabets.

() Rudhira = blood
    Samsthith = sitting - resting - placed

#490 Rudhira Samsthitha = Who presides over blood in the body.

() Kalarathri = one of the twelve deity surrounding the yogini who presides over anaahatha
   Adhi = et caetera ie. etc - and so on (in this context)
   yuga = team
   Shakthyuga = team of shakthis
   Vrutha = Is surrounded by

#491 kaalarathryadhi shakthyuga vrudha = Who is surrounded by shakthis like Kalarathri*
* In Anahatha, presiding yogini is represented by 12 petalled lotus, each petal is represented by a shakthi . Twelve shakthis surround her.

() Snigdha = greasy - glutinous - fat                                                           
   Odhana = coocked Rice
   Audhana = udder ( Can refer to butter / ghee and byproducts of milk obtained from 
    udder)

#492 snigdoudana priya = Who likes offerings made of rice mixed with ghee (or fatty substance)

() Mahaveera = great hero = strong men
   Indra = Chief - first of the kind- best

#493 Mahaveerendra varadha = Who great boons to great warriors. *
* Deeper meaning associates 'mahaveerendra' to mean adepts or saints who won over
worldly desires.

() Rakinyamba = Deity or yOgini representing anaahatha chakra

#494 Rakinyamba Swaroopini = She is in the form of deity Rakini *

( * This set of naamas talks about yOgini Rakini, her appearance and nature)

(to continue)

No comments:

Post a Comment