March 23, 2019

கணநாதர்


Image result for கணநாதர் நாயன்மார்


சீர்காழியில் அந்தணர் குலத்திலே பிறந்து பெருமானுக்கு திருத்தொண்டாற்றியவர். சீர்காழியில் வழங்கி வரும் இறைவன் திருத்தோனியப்பரிடம் அன்பு மிகக் கொண்டு திருப்பணி செய்து வந்தார்.
தமை நாடுபவரை அவரவரின் விருப்பத்திற்கும் திறனுக்கும் ஏற்றவாறு மலர் பறித்தல், மாலை கட்டுதல், திருமஞ்சனத்திற்கு உதவுதல், அலகிடுதல், மெழுக்கிடுதல், விளக்கு ஏற்றுவது, கோவிலை கூட்டுவது, திருமுறை எழுதுதல், ஓதுதல், நந்தவனம் அமைத்தல் என வகுத்து, அவற்றை அவர்களுக்கு முறையே பயிற்றுவித்து, அவர்களை அடியார்களாக மாற்றும் பெரும்பணி செய்து வந்தார். இல்லற தர்மம் சிறப்புற பேணி அடியார்களை வழிபட்டு வந்தார்.

எப்பொழுதும் திருஞ்சானசம்பந்தரை வணங்கி, வழிபட்டு வந்த பலனாக ஜீவகாலம் முடிந்ததும், கைலாயமடைந்து கணங்களுக்கு நாதர் ஆனார் என்கிறது பெரியபுராணம்.
'அடியார்க்கும் அடியாராகிய கணநாத நாயனார்' என்று திருத்தொண்டத்தொகையில் குறிப்பிடுகிறார் சுந்தரர்.

ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment