சோழ வளநாட்டில் திருத்தலையூர் எனும் நல்லூரில் அந்தணர் குலத்தில் பிறந்த நாயன்மார், சிவனை சிந்தையினால் தழுவியிருத்தலும், அவன் நாமம் ஓதியிருத்தலுமே பெரும் செல்வமெனக் கருதி வாழ்ந்தார். வேத சாஸ்திரங்களிலும் அற நெறிகளிலும் புலமையும் அறிவும் பெற்றிருந்தவர் ஸ்ரீருத்ரத்தை மிகுந்த சிரத்தையும் அன்பும் மேவ ஓதி வந்தார். ஸ்ரீருத்திரம் ஜபித்து வந்ததால் இவர் உருத்திர-பசுபதி என்ற காரணப்பெயரால் சிறப்புற்றார்.
அனுதினமும் இரவென்றும் பகலென்றும் கருதாது தாமரைத் தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்று, கைகளை உயர்த்திக் குவித்து ஈசனைத் தவிர வேறெவரையும் வேறொண்றையும் மனத்தினாலும் தீண்டாது, ஸ்ரீருத்திரம் ஜபித்து வந்தார். பெரும் கருணை கொண்ட ஈசன், மகிழ்ந்துருகி இவருக்கு சிவலோகப் பிராப்தியருளி, இறைவனின் திருவடி நிழலில் தங்கியிருக்கும் பெரும் பேற்றை நல்கினார்.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment