March 25, 2019

கணம்புல்லர்

Image result for கணம்புல்லர்


இருக்குவேளூர் என்ற ஊரின் தலைவராக வாழ்ந்தார் கணம்புல்ல நாயனார். பெரும் பொருட்செல்வத்துக்கும் சிவபெருமான் அருட்செல்வத்துக்கும் பாத்திரமானவர். அன்றாடம் ஊர் கோவிலில் திருவிளக்கு ஏற்றி பணி செய்து ஆண்டவன் திருவடி பற்றியிருந்தார். நாளடைவில் செல்வம் குன்றி வறுமை புகுந்தது. வளத்தையெல்லாம் விற்று ஊரை விட்டு சிவஸ்தல யாத்திரை மேற்கொண்டார். ஒவ்வொரு ஊராக பயணித்து திருவிளக்கு ஏற்றியவர் தில்லையை வந்தடைந்தார். மேற்கொண்டு பயணிக்காமல் தில்லையிலேயே தங்கி திருப்பணியைத் தொடர்ந்தார்.

தில்லையிலிருக்கும் திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோவிலில் திருவிளக்கிட்டு வந்தார். வறுமை விடாது துரத்த, செல்வமெல்லாம் கரைந்தது. தம்மிடத்திலிருக்கும் மிச்ச பொருட்களையெல்லாம் விற்று, திருப்பணி தொடர்ந்தவணணமிருந்தார். விற்கவும் பொருளின்றி செல்வம் சற்றும் ஒட்டாமல் விட்ட நிலையில், யாசிக்க உளம் இடம்கொடாமல் கணம்புல் என்ற வகைப் புல்லை அறுத்து அதனை விற்று காசாக்கி விளக்கேற்றி வந்தார்.

அன்றொரு நாள் கணம்புல்லை வாங்க ஆளின்றி போனது. துயரத்தை உள்ளத்தில் வைத்து, எப்படியும் விளக்கேற்றியே தீருவது என்ற உறுதியுடன், கணம்புல்லையே திரியாக்கி விளக்கேற்றினார். ஆனால் குறிப்பிட்ட ஜாமம் வரை திருவிளக்கு எறிய புல்லின் அளவு போதாது போகவே, அன்பு மேலிட்டு கொண்ட கொள்கையில் வழுவாதவர், தனது முடியையே காணிக்கையாக்கி விளக்கை எரிக்கத் தொடங்கினார்.

விளக்கேற்றினால் இம்மையிலும் மறுமையிலும் இருள் நீங்கி ஒளி கூடும் என்று நம்பியவர் எப்பாடு பட்டாவது தமது கடமையெனக் கொண்ட திருவிளக்குப் பணியை சிரமேற்கொண்டு செய்தார். பெருமான் ரிஷப வாகத்தில் சிவ சக்தியாக காட்சியளித்து அவர் நினைந்த வண்ணமே நலம் நல்கி, பெருங்கருணை புரிந்து ஜீவமுக்தியும் சிவலோக பிராப்தியும் வழங்கியருளினார்.

கணம்புல்லை எரித்து திருப்பணியாற்றியதால் கணம்புல்லர் என்று பொற்றப்பட்டார்.

ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment