தெய்வமெனக் கருதி
நெஞ்சகத்தே உயர்த்திப் போற்றாவிடினும்
செய்த பாவத்தின் வினையென்றே தூற்றாதே!
நெஞ்சகத்தே உயர்த்திப் போற்றாவிடினும்
செய்த பாவத்தின் வினையென்றே தூற்றாதே!
நஞ்சகத்தே புகட்டி பிஞ்சதனை புறம்வீசி
பஞ்சமா பாதகந்தான் சேர்க்காதே!
பஞ்சமா பாதகந்தான் சேர்க்காதே!
பள்ளிப் பருவத்தில்
துள்ளி விளையாடும் சேயவளை
எள்ளி நகையாடுமே ஊரெனவே - புறந்
தள்ளி வைத்து படிப்பதனை தடுக்காதே!
துள்ளி விளையாடும் சேயவளை
எள்ளி நகையாடுமே ஊரெனவே - புறந்
தள்ளி வைத்து படிப்பதனை தடுக்காதே!
ஆணுக்கொரு நீதியும் இணை
பெண்ணுக்கு இன்னொன்றென்றே
மாற்றிப் பேசாதே.
பெண்ணுக்கு இன்னொன்றென்றே
மாற்றிப் பேசாதே.
- ShakthiPrabha
காலம்மாறி விட்டது மேடம்
ReplyDeleteஆம். இத்தகு செயல்களும் அணுகுமுறையும் வெகுவாக குறைந்து விட்டது.
Delete