திருவம்பர் என்பது சோழபெருநாட்டிலுள்ள நல்லூர். இவ்வூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் சோமாசிமாற நாயனார். சிவமந்திரம் அன்போடு ஓதி வெள்விகள் யாகங்கள் வளர்த்து ஈசனிடம் மிகுந்த அன்புகொண்டொழுகினார். மந்திர ஜபங்கள் , நித்திய வழிபாடுகள் எதுவும் குற்றமற்றவராக புரிந்து நல்வாழ்வு வாழ்ந்திருந்தார். எக்குலமாயினும், எக்குணம் கொண்டிருந்தாலும், சிவனடியார்கள் என்று இறைவன் பெயரை அன்புடன் ஓதுவார்க்க்கு திருவமுது செய்வித்து பணிந்தார். புகழின் மயக்கத்தில் வீழாமல் பயனெதுவும் கருதாமல் கர்மயோகம் செய்து காம க்ரோதம் முதலிய குணங்களை விட்டொழித்தவராய் விளங்கினார்.
.
இந்த நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் திருவடிகளை பக்தியுடன் பணிந்து அதனால் மேலும் சிறப்புற்று ஈடு இணையில்லா சிவபதம் அடைந்தார்.
.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment