பாண்டிய நாடு பெற்ற முத்துக்களில் ஒருவர் குலச்சிறை நாயனார். குலமென்றும் குணமென்றும் பாராமல் சிவனடியார்கள் என்று கூறி வருவோர்க்கும், ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும் பெரியோர்க்கும் அமுதளித்தும் பெருமைப் படுத்தியும் சிவ வழிபாட்டின் வழி நின்றவராயிருந்தார்.
.*
சிவபெருமானின் உயர்வை தாங்கிப் பிடிக்கும் சைவம் எனும் வழியை தனதாக்கிக் கொண்டதோடன்றி அதன் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபாட்டார். பாண்டி நாட்டு மன்னன் நேடுமாற பாண்டியனுக்கு பிரதம அமைச்சராக பணியாற்றி வந்தார். பாண்டிய மன்னன் அந்நாட்களில் சமணக் கொள்கைகளை பெரிதும் மதித்து, சமண மதத்தை தழுவியிருந்தார்.
.
அவரின் துணைவியார் மங்கையர்கரசியார் சைவத்தின் பால் வழுவாமல் நின்றிருந்ததால், குலச்சிறையார், மங்கையர்கரசியாரின் துணை கொண்டு பாண்டி நாட்டில் சமணர்களின் வீழ்ச்சிக்கு பெரிதும் காரணமானார்.
.
திருஞானசம்பந்தர் பெருமானை மதுரைக்கு வரவேற்று, சைவக் கொள்கைகளை பரப்புதற்கு காரணமானர். சம்பந்தரின் கொள்கையாலும் தனக்கு வந்த பேரிடரிலிருந்து தமைக் காத்த சம்பந்தரின் அருட்கொடையாலும் சைவத்தின் பெருமையை
நன்கு உணர்ந்த பாண்டிய மன்னன், பின்னாட்களில் குலச்சிறையாருக்கு பெரிதும் துணை நின்றார். குலச்சிறையார், மன்னரின் ஆதரவையும், மங்கையர்கரசியாரின் உதவியுடனும், பெருகி வந்த சமண கொள்கைகளையும் பொய்வாதம் செய்யும் சமணவாதிகளையும் இல்லாதொழித்து, திரு நீற்றின் மகிமை பாண்டி நாடெங்கும் செழிக்கச் செய்தார்.
.
சுந்தரமூர்த்தி நாயனாரும், ஒட்டக்கூத்தரும் பெருநம்பி என குலச்சிறையாரைக் குறிப்பிட்டு, அவர் சைவத்திற்கு ஆற்றியபெரும் பங்களிப்பை பாராட்டிப் பாடியுள்ளார்கள்.
.
இறையனாரின் நாமத்தில் சித்தம் பரிகொடுத்து, பெருவாழ்வு வாழ்ந்த நாயனார், புவியுலகை நீத்த பிறகு, எம்பெருமானார் பாதமலரடியை அடைந்து பேரின்பம் பெற்றார்.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment