விபூதி விஸ்தாரம்
ஆத்ம வித்யா;
மஹா வித்யா;
ஸ்ரீ வித்யா;
காம சேவிதா;
ஸ்ரீ ஷோடஷாக்ஷரி வித்யா;
த்ரிகூடா;
காமகோடிகா;
கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதா ;
()
வித்யா = விஞ்ஞானம் - அறிவு
#583 ஆத்ம வித்யா = ஆத்ம ஞானமாகியவள்
#584 மஹா வித்யா = உன்னத ஞானமானவள் (பிரம்ம ஞானமெனும் சுயத்தை பற்றிய அறிவாகி இருப்பவள்)
#585 ஸ்ரீ வித்யா = ஸ்ரீ வித்யையின் (லலிதாம்பிகை) வடிவானவள் *
*ஸ்ரீ வித்யா உபாசனையாக விளங்கும் பஞ்சதசி மந்திரமாக விளங்குபவள்.
#586 காம சேவிதா = மன்மதனால் வணங்கப்படுபவள்
()
ஷோடஷ = பதினாறுடைய (பதினாறு எண்ணிக்கை கொண்ட)
அக்ஷர = அக்ஷரம் - எழுத்துக்கள்
#587 ஸ்ரீ ஷோடஷாக்ஷரீ வித்யா = ஷோடஷி என்னும் உயர்ந்த தத்துவமாக இருப்பவள் *
*ஸ்ரீ வித்யா வழிபாட்டு முறைகளில் ஷோடஷி எனும் சக்தி வாய்ந்த மந்திரம் பதினாறு அக்ஷரங்கள் கொண்டதாகவும் பஞ்சதசியை விட சூக்ஷுமமாக கருதப்படும் மந்திரோபாசனை ஆகும்.
()
த்ரி = மூன்று - மூன்றான - முப்பகுதிகள் கொண்ட
கூட = பரிமாணம் - முக்கியத்துவம்
#588 த்ரிகூட = மூன்றாக i.e முத்தன்மையுடையதாக பரிமாணிப்பவள் *
* சிருஷ்டி ஸ்திதி லயம் ; அ-உ-ம்; சத்துவம், ராஜசம், தாமசம் எனும் முக்குணங்கள்; முப்பகுதிகள் கொண்ட பஞ்சதசி மந்திரம்; விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகள், என்று நம்மால் அடுக்க முடிந்த உயர்ந்த தத்துவங்கள் பலவும் மூன்றாக வகுக்கத் தகுந்தவை.
()
காம = இச்சை - ஆசைகள் ( அல்லது ) காமேஷ்வரன் எனும் இறைவன் சிவன் *
கோடி = உயர்ந்த இடம் - முடிவு
#589 காமகோடிகா = ஆனந்தத்தின் நிறைவானவள் (ஆசைகளுக்கு அப்பாற்பட்ட பூர்ணானந்தம்)
#589 காமகோடிகா = சிவனின் அங்கமானவள் (அர்த்தனாரி எனும் சிவசக்தி ஐக்கியம் , அன்னிலையின் அபின்னம் )
* காமேஷ்வரன் எனும் நாமம், காமத்தை கடந்தவர், அதற்கு அப்பாற்பட்டவரான இறைவன் சிவனாரைக் குறிக்கும். சக்தியானவள் சிவத்துடன் இணைகையில் இரண்டறக் கலந்து இச்சைக்கு அப்பாற்பட்ட ஆனந்த, அபின்ன நிலையில் அறியப்படுகிறாள். சகுண பிரம்மத்தின் ஆரம்ப நிலை என்று உணரலாம்.
()
கடாக்ஷ = கடைக்கண் பார்வை - க்ஷண நேரப் பார்வை
கிங்கரீ = சேவகிகள் - சேவைபுரியும் பெண்கள்
பூத = உடல் தாங்கும் உயிர்
கமலா கோடி = தாமரை - தாமரையில் பிறந்த - செல்வம் - ஸ்ரீ லக்ஷ்மி
கமலா கோடி = கோடி லக்ஷ்மிகள்
சேவிதா = துதிக்கப்படுபவள்
#590 கடாக்ஷ கிங்கரீ பூத கமலாகோடி ஸேவிதா = தனது கடாக்ஷத்திற்கு ஏங்கும் கொடி லக்ஷ்மிகளால் ஆராதிக்கப் படுபவள்
#590 கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதா = கடைக்கண் பார்வையாயின் சமிக்ஞையாலேயே கோடி லக்ஷ்மிகளால் உபசரிக்கப் பெறுபவள்
(தொடரும்)
Lalitha Sahasranama (583 - 590)
Vibhoothi Visthaaram
Atma vidhya;
Mahaa Vidhya;
Shri Vidhya;
Kaama Sevitha;
Shri shodashakshari vidhya;
Trikoota;
Kaama kOtika;
Kataksha kinkari bhootha kamala kOti SEvitha;
()
Vidhya = science - knowledge
#583 Atma Vidhya = She who is the Science of "The Self"
#584 Mahaa Vidhya = She who is the Greatest knowledge (of "The Self")
#585 Shri vidhya = she who is the Divine knowledge of Goddess Lalitha i.e. Shrividhya Worship *
*Panchadasi mantra pertaining to Shri-vidhya worship
#586 Kaama Sevitha = Who is worshipped by Kamadeva (God of love - Manmatha)
()
Shodasha = consisting of sixteen
akshar = Syllable
#587 Shri Shodashakshari Vidhya = She who is the exalted knowledge of Shodashi *
*Shodashi is the powerful mantra worshipping Shri vidhya (Lalithambika) . Shodashi is superior to panchadashi(panchadasi)
()
Thri = third- three parts
koota = prominence
#588 Thrikoota = She who is projects as trilogy *
*Everything can be segregated as set of three. Creation-sustinenance-dissolution; A-U-M; Tri gunas Sathva, Rajas and Tamas; panchadasi (15) mantra as three parts; Stages of consciousness Waking, Dreaming and Deep sleep..
()
Kaama = desire - want / or / Shiva as Kameshwar
koti = heighest point - end - edge or point
#589 Kaama Kotika = Who is fulfilled and tranquil (beyond desires)
#589 Kaama kOtika = Who is part of Shiva ( as union of Shiva-shakthi) *
*Kameshwar refers to shiva i.e. who is dispassionate. Shakthi during her union with Shiva is said to be at the highest dispassionate origin as Saguna Brahmam.
()
Kataksha = Glance - quick look
Kinkari = Female attendants - servants
bhootha = being(s)
Kamala = lotus = lotus born = wealth =Shri Lakshmi
Kamala kOti = Millions of Lakshmis
Sevitha = worship
#590 Kataksha Kinkari bhootha kamala kOti SEvitha = Who is worshipped by millions of lakshmis who pine for her mere glance. (or)
#590 Kataksha Kinkari bhootha Kamala Koti Sevitha = Who by here mere glance is attended by millions or Lakshmis (Goddesses of wealth)
(to Continue)
A Humble effort to meditate meaning word by word - ShakthiPrabha
A Humble effort to meditate meaning word by word - ShakthiPrabha
அருமை
ReplyDeletethankyou very much
ReplyDelete