May 09, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (572 - 582) (with English meanings)

Image result for Supreme mother lalitha beautiful 

விபூதி விஸ்தாரம் 

பரா-ஷக்தி;
பரா-நிஷ்டா;
ப்ரக்ஞான கண ரூபிணீ;
மாத்வீ பான லசா;
மத்தா;
மத்ருகா வர்ண ரூபிணீ;
மஹா கைலாச நிலயா;
ம்ருணால ம்ருது தோர்லதா;
மஹானீயா;
தயா மூர்த்தி;
மஹா சாம்ராஜ்ய ஷாலினீ;

() 
பரா = அதி உன்னத - மிக உயர்ந்த 

#572 பரா-ஷக்தி = ஒப்புயர்வற்றவள்-  உன்னத சக்தியாக விளங்குபவள் - இறைவி 

()
நிஷ்டா = ஆதாரம் - மூலம் 
நிஷ்டா = உறுதியான பக்தி

#573 பரா-நிஷ்டா = ஜகத்தின் ஆதாரம் - அடையக்கூடிய லக்ஷியத்தின் சிகரம் 
#573 பரா-நிஷ்டா =  உறுதியான பக்தியால் அடையக்கூடியவள்

()
ப்ரக்ஞான = ஞானம் 
கன = செறிவான- கனமான
ப்ரக்ஞான கன = அடர்ந்த ஞானம் - ஞானத்தையன்றி வேறொன்றுமிலாத

#574 ப்ரக்ஞான-கன ரூபிணீ = சம்பூரண  ஞானவடிவானவள் 

() 
மாத்வீ = உற்சாகம் தரக்கூடியது - மதுபானம் போன்ற... * 
(இவ்விடத்தில் மது என்பது களிப்பத் தரக்கூடியதான அம்ருத நிலையைக் குறிக்கும்)
பான = பானம் - பருக்ககூடியது
லசா = களிப்பு - பெருமகிழ்ச்சி 

#575 மாத்வீ பான லசா =  பெருமகிழ்ச்சி   நிலையான ஆனந்தானுபவத்தினால் களிப்படைந்திருப்பவள் *
(இவ்விடத்தில் அம்ருதத்திற்கு ஒப்பான பெருமகிழ்ச்சி நிலையில் நிலைத்திருப்பவள் என்று கொள்வதே தகும்) 

() 
மத்தா = ஆனந்தத்தில் மிதத்தல் ( போதை என்ற புரிதில் இங்கு பொருந்தாது) 

#576 மத்தா = பெருமகிழ்ச்சிக் களிப்பில் ஆழ்ந்திருப்பவள்  (ஆனந்தானுபவம்)
(இவ்விடத்தில் இப்பொருள் கொள்ளுதல் தகும்) 

()
மாத்ரிரு)கா = அம்பிகை - பெண் கடவுள் 
மாத்ரு(ரி)கா  =  எழுத்து - அகரவரிசை
வர்ண =  நிறம் - இயல்பு

#577 மாத்ருகா வர்ண ரூபிணீ = அன்னையின் வடிவினள் - அம்பாள்- அம்பிகை
#577 மாத்ருகா வர்ண ரூபிணீ =  அகர எழுத்துக்களாகியிருப்பவள் (எழுத்து, சொல் அதன் சப்தம் .`ie. சப்த ப்ரம்மம்) 
#577 மாத்ருகா வர்ண ரூபிணீ = ஆதாரம் ஆகியவள் - பிரபஞ்சத்தின் ஆதாரம்; அன்னை
#578 மஹா கைலாச நிலயா = கைலாசத்தில் நிலை கொண்டிருப்பவள் (தனது நாதனுடன்) 

()
ம்ருணால= தாமரைத் தண்டு
ம்ருது= ம்ருதுவான
தோர்லதா = கொடி போன்ற கை

#579 ம்ருணால ம்ருது  தோர்லதா = தாமரைத் தண்டினையொத்த ம்ருதுவான கொடி போன்ற இளங்கரங்களை உடையவள் 

#580 மஹானீயா = போற்றுதற்குறியவள் 

#581 தயா மூர்த்தி = பரிவே வடிவானவள்

ஷாலினி =  உரிமையுடைய - சொந்தம் கொண்டாடும்

#582 மஹா சாம்ராஜ்ய ஷாலினீ = பிரபஞ்சமெனும் பெரும் சாம்ராஜ்யத்தின் பேரரசி - அதனை தனதாக்கியவள் 

( தொடரும்) 



Lalitha Sahasranama (572 - 582) 

Vibhoothi Visthaaram

Para-Shakthi;
Para-Nishta;
Pragnaana ghana roopiNi;
Maadhvee paanaa lasaa;
Maththa;
Mathruka varNa roopini;
Mahaa Kailasa Nilayaa;
MriNala mrudhu dhorlatha;
Mahaaneeya;
Dhaya moorthi;
Maha Saamrajya Shalini;

()
Paraa =Highest point or degree -  Supreme 


#572 Paraa-Shakthi = Who is the Supreme power
#572 Paraa-Shakthi = Who is the Supreme Goddess - Supreme driving force

()
Nishta = Firm Devotion 
Nishta = grounded or resting on - the source 

#573 Paraa-Nishta = She who is attainable by unswerving devotion 
#573 Paraa-Nishta = She who is the attainable Supreme goal

()
Pragnaana = knowledge - wisdom
ghana = dense - mass
Pragnaana-Ghana = nothing but knowledge 

#574 Pragnaana-Ghana roopiNi = Who is the quintessence of pure Wisdom 

()
Maadhvi = Intoxicated drink *
(here to be taken as nector of bliss i.e. amrut) 
paana = drink - beverage
lasaa = dancing - playing -sporting

#575 Madhvee pana lasaa = She who is in the state of  bliss ( i.e Samaadhi )
(here to be taken as state of bliss i.e. nector or amrut of bliss)

#576 Maththa = Who is intoxicated - overjoyed  - blissful

()
Matrka = The Divine Mother
Matrka = Alphabets
varNa = colour - nature 

#577 Matruka varNa roopiNi = Who is the Divine Mother
#577 Matrka varNa roopiNi = Who is in the form of alphabets (and its sound..
ie. shabhdha brahmam) 
#577 Matrka VarNa roopiNi = Who is the foundation the basis i.e the Supreme mother 
of universe


#578 Mahaa Kailasa Nilaya = Who resides in Great Maha Kailash (with her lord) 

()
MriNaal = Root of Lotus 
mrudhu = Gentle - soft
Dhorlathika = arm creepers (arms like creepers) 

#579 MriNaala Mrudhu Dhorlatha = Whose arms are as tender and soft as lotus-stalks 

#580 Mahaaneeya = Who is praiseworthy 

#581 Dayaa Moorthi = Personification of Mercy 

()
Shalini = endowed - possessing 
Maha Saamrajya = Greatest empire 

#582 Mahaa Samrajya Shalini = She who is the empress of the universe 
(which is the greatest empire) 

(to Continue) 

A humble effort  to understand word by word - ShakthiPrabha 

No comments:

Post a Comment