May 21, 2019

காரைக்கால் அம்மையார்

Image result for காரைக்கால் அம்மையார்


மூன்றே மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரான இவரின் பெருமையைப் பற்றி பலரும் அறிந்து சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
.
புனிதவதி என்று பெயர் சூட்டப்பட்டு பெரும் சிவபக்தையாக காரைக்காலில் வாழ்ந்து வரும் காலத்தில் பரமதத்தன் என்பவரை, பெற்றோர் மணமுடித்து வைத்தனர். சிவனடியாருக்கு சமர்பித்த மாம்பழத்தை, தம் கணவருக்காக
கடவுளிடத்தில் வேண்டி பெற்றதை கண்ணாறக் கண்டு அதிசயத்த பரமதத்தன், தமது மனைவி தெய்வ அம்சம் பொருந்தியவர் என உணர்ந்து, அவர்களிடம் தமக்கிருந்த இல்லற உறவை அறுத்தார். வேறு பெண்ணை திருமணம்
செய்து அவர்களுக்கு பிறந்த பெண்ணுக்கு புனிதவதி என்று பெயர் சூட்டி தமது மரியாதையை செலுத்தினார்.
.
இதை உணர்ந்த புனிதவதியார், கணவனுக்கில்லாத அழகும் இளமையும இனி தேவையில்லை என்றுணர்ந்து, சிவபூதகண வடிவமான பேயுருவை வேண்டிப் பெற்றார்.
.
எம்பெருமானை இசையால் துதித்து பாடல்கள் இயற்றுவதில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் எழுதிய பாணியை ஒட்டியே பிற்கால தேவாரப் பாடல்களும் புனையப்பட்டது. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மாலை, அற்புத திருவந்தாதி, முதலிய இலக்கியங்களை புனைந்து தமிழுக்கு பெருமை சேர்த்தார்.

இறைவன் இருக்கும் திருக்கையிலாயத்தை காலால் தடம் பதித்தால் புனிதம் கெட்டு விடுமென்று தலையால் ஏறிச்சென்று தரிசித்தார். இறைவனே இவரை தமது அன்னை என்று உரைக்கும் பேறு பெற்றார். வரமாக, பிறவாமை வேண்டுமென்று இறைஞ்சி, இறைவனின் தாண்டவத்தின் பொழுது அம்மையார் அவர் அடியின் கீழ் பணிந்து பாடிக்கொண்டிருக்கும் வரம் கேட்டு உய்ந்தார். திருவலங்காட்டில் தமது நடனத்தை தரிசித்து பாடிக்கொண்டிருக்க அருள் செய்தார் எம்பெருமான்.

இவரது புகழ் உணரப்பட்டு வாழ்ந்த பெருவாழ்வை நினைவு கொள்ளும் வண்ணம் இன்று கரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.

ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment