விபூதி விஸ்தாரம்
திவ்ய கந்தாத்யா;
சிந்தூர திலகாஞ்சிதா;
உமா;
ஷைலேந்திர தனயா;
கௌரீ;
கந்தர்வ சேவிதா;
விஸ்வ கர்பா;
ஸ்வர்ன கர்பா;
ஆவரதா;
வாகதீஸ்வரீ;
()
திவ்ய = தெய்வீகம்
கந்த = நறுமணம்
கந்தாதக = நறுமணம் கொண்ட
#631 திவ்ய கந்தாதத்யா = தெய்வீக நறுமணம் கமழத் திகழ்பவள்
()
சிந்தூர = குங்குமம்
திலக = திலகம் ( நெற்றியில் இடும் குறியீடு)
அஞ்சித = அலங்கரித்தல்
#632 சிந்தூர திலகாஞ்சிதா = சிந்தூர திலகத்தால் நெற்றியை எழிலுற அலங்கரித்தவள்
#633 உமா = பார்வதி தேவி (சிவபெருமானின் துணைவி) *
* உமா எனும் நாமம் , சிருஷ்டி, லயம், ஸ்திதி உணர்த்தும் ( உ...ம்...அ ) ( அதாவது அகார உகார மகாரத்தை குறிக்கும் ௐ )
()
ஷைல = மலை
இந்திர = தலைவன்
தனய = புதல்வன் / புதல்வி
#634 ஷைலேந்திர தனயா = மலையரசனின் புதல்வி (ஹிமவானின் புதல்வி)
#635 கௌரி = செந்நிறமுடையவள் (வெளிர்)
#636 கந்தர்வ சேவிதா = கந்தர்வர்களால் வணங்கப்படுபவள் *
* கந்தர்வர்கள் இசை நாட்டியத்தில் வல்லுனர்கள். கோவில் சிற்பங்கள் ஓவியங்களிலும் புராண இதிஹாசங்களிலும் பேசப்பட்டிருக்கிறார்கள். தேவலோகத்திற்கும் பூலோகத்திற்கும் இடைப்பட்ட லோகங்களில் வசிப்பவர்கள். இயற்கை எழில் கொஞ்சுமிடங்கள், பூக்கள், நறுமணம் வீசும் சுத்தமான இடங்களில் கந்தர்வர்கள் விஜயம் செய்வதாக நம்பிக்கை உண்டு.
()
விஷ்வ = பிரபஞ்சம்
கர்ப = கர்பம் - கரு உருவாகி கர்பம் திரித்தல்
#637 = விஷ்வ கர்பா = பிரபஞ்சத்தை தனது கருவில் சுமந்தவள் . அகில லோகங்களுக்கும் அன்னை.
()
ஸ்வர்ண (சுவர்ண) = பொன் - ஹிரண்ய (பொன்)
கர்ப = கரு
#638 ஸ்வர்ண கர்பா = (ஹிரணய கர்பத்திலிருந்து வெளிவந்த) பிரபஞ்சத்தின் முதற்பிறப்பு - பிரபஞ்ச வம்சாவளியின் மூலம்
()
வரத = வரம் தருதல் - உபகாரி
அவரத = வரமருளாத - அபகாரம் செய்தல் (தீவினையாளர்களுக்கு)
அவரத் = தவறிழைத்தல்
அவர = தடுத்தல் - தள்ளி வைத்தல்
#639 அவரத = தீவினையாளர்களை தண்டிப்பவள்
()
வாக (வாச) / வாக்ய = பேச்சு = குரல் = மொழி (அதனைச் சார்ந்து) - வாக்கு
#640 வாகதீஸ்வரீ = வாக்கின் அதிபதி
(தொடரும்)
Lalitha Sahasranama (631 - 640)
Vibhoothi Visthaaram
Divya Gandhadya;
Sindhoora thilakanchitha;
Uma;
Shailendra thanaya;
Gowri;
Gandharva Sevitha;
Vishwa Garbha;
Swarna Garbha;
avaradha;
Vaagadeeshvaree;
()
Divya = Divine
Gandha = Scent
Gandhadhaka = having fragrance
#631 = Divya Gandhadhya = She who has heavenly fragrance
()
Sindhura = vermilion - kumkum (as widely known)
Thilaka = mark on the forehead - bindi (as widely known)
anchitha = adorned
#632 Sindhoora thilakanchitha = Who beautifully decorates her forehead
with vermilion
#633 Uma = Parvathi (Wife of Shiva) *
*Uma also refers to the creation, destruction and sustenance (U M A) respectively. ie. representation of "A U M " - Om)
()
Shaila = mountain
Indra = the chief -leader
thanaya = son / daughter
#634 Shailendra Thanaya = Who is the daughter of the king of mountains
(daughter of Himavan)
#635 Gowri = Whose complexion is Very fair
#636 Gandharva SEvitha = Who is revered and worshipped by Gandharwas *
*Gandharvas are heavenly beings skilled in music and dance. They are portrayed in temple sculptures and paintings and are extensively mentioned in puranas and epics. They are believed to reside or frequent places that are abundant with natural beauty and fragrance.
()
Vishva = universe
Garbha = to conceive - pregnancy
#637 = Who conceives the entire cosmos in her womb - Mother of the totality
()
Swarna = Gold - hiranya (Gold)
Garbha = Foetus - embryo
#638 Swarna Garbha = Who is the first born (born from Hiranya Garbha) -
Primary cause - Origin of the lineage
()
Varadha = benefactor - to confer boon
Avaradha = who does not benefit or confer (to the those who are evil)
avaradh = to commit mistake
avara = hinder - keeping out
#639 Avaradha = Who punishes those who are at fault
()
Vaga (Vacha) / Vagya = Speech - voice - language (pertaining to)
#640 Vagadeeshwari = Who rules over Speech
(to Continue)
Thanks and reference:
Spokensanskrit.com
manblunder.com
A humble attempt to discuss meanings word by word - ShakthiPrabha
Superb...
ReplyDeleteThankyou very much for following.
ReplyDelete