October 02, 2019

Lalitha Sahasranama (876 - 900) (தமிழிலும்)

Image result for Goddess granting boon
Veeraa (The Valorous) 

விபூதி விஸ்தாரம் 


நிராமயா;
நிராலம்பா;
ஸ்வாத்மா ராமா;
சுதாஸ்ருதி:;
சம்சார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா;
யக்ஞப்ரியா;
யக்ஞ கர்த்ரீ
யஜமான ஸ்வரூபிணீ;
தர்ம தாரா;
தனாத்யக்ஷா;
தன-தான்ய விவர்தினீ
விப்ரப்ரியா
விப்ர ரூபா;
விஷ்வ ப்ரஹ்மண காரிணீ;
விஷ்வக்ராஸா;
வித்ருமாபா;
வைஷ்ணவீ;
விஷ்ணு ரூபிணீ;
அயோனி:;
யோனி நிலயா;
கூடஸ்தா; 
குலரூபிணீ;
வீரகோஷ்டிப்ரியா;
வீரா;
நைஷ்கர்ம்யா;





()
ஆமய = வியாதி - பிணி
நிராமய = விடுபட்ட 

#876 நிராமயா; =  நோய் பிணி முதலியவற்றிற்கு அப்பாற்பட்டவள் (அதனால் பாதிக்கப்படாதவள்) 


()
ஆலம்ப = துணை - சகாயம்

#877 நிராலம்பா=   எதனையும் சார்ந்திராதவள் (அவளே ஆதாரம், அடிப்படை) 



()
ஸ்வாத்மன்  = சுயம்  - தானாக - தனியே நிற்கும் அகம்
ஆராம = மகிழ்தல் 

#878 ஸ்வாத்மா ராமா; = தன்னுள் மகிழ்பவள் ( அவளின் மகிழ்ச்சி எதனையும் சாராதது) 



()
சுதா = அம்ருதம்
ஸ்ருதி = பொழிதல் - சொரிதல்

#879 சுதாஸ்ருதி:; = தேனாக சொரிபவள் - அம்ருதத்தை  வர்ஷிப்பவள் (சஹஸ்ராரத்தில் அம்ருதத்தை பொழிபவளாக சதானந்தத்தை அருள்வதாக "சுதாசாரபிவர்ஷிணீ" என்று முந்தைய நாமங்கள் குறிப்பிடுகின்றன) 


()
சம்சார = லோகாயதமான வாழ்வு - பொருள் சார்ந்த உலகம்
பங்க = மண் - அசுத்தம் - சகதி
நிர்மக்ன = மூழ்கியிருத்தல்
சமுத்தரண = களைதல் - நீக்குதல் 
சம்சார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா;

#880 சம்சார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா =  நிரந்தரமற்ற சம்சார சேற்றில் உழலும் ஜீவனை,  சகதிலிருந்து தூக்கி நிறுத்திக் காப்பதில் வல்லவள்  



()
யக்ஞம் = வேள்வி

#881 யக்ஞப்ரியா; = வேள்விகளில் விருப்புள்ளவள் (யாகங்கள், அதன் சம்பிரதாயங்கள்) 




#882 யக்ஞ கர்த்ரீ; = வேள்விகள் புரிபவள் 



()
யஜமான = கர்த்தா - வேள்விக்கு காரணமான எஜமானர்
ஸ்வரூபிணீ = ரூபம் தாங்கிய

#883 யஜமான ஸ்வரூபிணீ; = (வேள்வி) கர்த்தாவாக விளங்குபவள் 



()
தர்ம = தர்மம் (வாழ்வை முறைப்படுத்தும் அற நெறிகள்) 
ஆதார = ஆதாரம்

#884 தர்ம-ஆதாரா; = தர்மத்தின்  ஆதாரமாக திகழ்பவள் 


()
தன = பொருள் - செல்வம்
தனாத்யக்ஷ = பொருளாளர்

#885 தனாத்யக்ஷா; = செல்வத்தை பாதுக்காக்கும் பொக்கிஷதாரி (பிரபஞ்சதைக் காப்பவள் ..பிரபஞ்சமே உயர் செல்வமென கருதப்படுகிறது) 


()
தன = செல்வம்
தான்ய  = தானியம்
விவர்தன் = அதிகரித்தல் 

#886 தன-தான்ய விவர்தினீ = ஐஸ்வர்யத்தையும் தானியக் களஞ்சியங்களையும் அபிவிருத்தி செய்து,  சுபீட்சம் அளிப்பவள் 



()
விப்ர = அறிவாளி - கல்விமான்

#887 விப்ரப்ரியா = அறிஞர், பண்டிதரிடம் பிரீதியுள்ளவள் *

*ஆன்ம அறிவை பெற்றவரே அறிஞர் என்பது புரிதல் 



#888 விப்ர ரூபா;  = அறிஞர், ஞானியர் வடிவில் இருப்பவள் *

*ஆன்ம அறிவை பெற்றவரே அறிஞர் என்பது புரிதல் 



()
விஷ்வ = பிரபஞ்சம்
ப்ரஹ்மண = சுழற்சி
காரிண் = நடத்துபவள் 

#889 விஷ்வ ப்ரஹ்மண காரிணீ; = பிரபஞ்சத்தின் சுழற்சி சக்கரத்தை நிகழ்த்தும் காரணகர்த்தா (சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற சுழற்சியை நிகழ்த்துபவள் )


()
க்ராஸ = விழுங்குதல் - அழித்தல்

#890 விஷ்வக்ராஸா; = பிரபஞ்சத்தின் விழுங்குபவள் i.e ஒடுக்குபவள் 


()
வித்ரும = பவழம்
ஆபா = ஒளிர்தல்

#891 வித்ருமாபா; = பவழத்தைப் போல் ஜ்வலிப்பவள் *

* செந்தூர நிறத்தவள் என்று முந்தைய நாமங்கள் பறை சாற்றுகின்றன (சிந்தூராருண விக்ரஹாம்) 



#892 வைஷ்ணவீ; = விஷ்ணுவின் ஆற்றல் சக்தியாகியவள் 



#893 விஷ்ணு ரூபிணீ; = விஷ்ணு வடிவானவள் 



()
யோனி = மூலம் - துவக்கம்

#894 அயோனி:;  = மூலமற்றவள் (அவளே முழுமூலம்) - அனாதி (ஆதியற்றவள், சாஸ்வதமானவள்) 



()
யோனி = மூலம் - ஆதி
நிலய = இருத்தல்

#895 யோனி நிலயா; = ஆதிமூலமாக நிலைபெற்றிருப்பவள் 





#896 கூடஸ்தா; = நிலையானவள் - மாறுதலுக்கு உட்படாதவள்



()
குல = நற்பண்புகள் ஒழுகும் குலம், பரம்பரை
ரூபிணீ = வடிவம் 

#897 குலரூபிணீ; = நற்பண்புகளுடன் கூடிய குலத்தாரின் வடிவில் இருப்பவள்  *

*குல எனும் சொல் கௌல மார்க்கத்தையும் குறிப்பதால், கௌல மார்க்கத்தின் பிரதிநிதி என்று மீண்டும் வலியுறுத்துவதாக அர்த்தம் கொள்ளலாம். 



()
வீரகோஷ்டி = வீரர்களின் குழு, கோஷ்டி

#898 வீரகோஷ்டிப்ரியா; = வீரம் நிறைந்தவர்களின் கூட்டணியை, சபையை விரும்புபவள் 



#899 வீரா;  = கொற்றம் நிறைந்தவள் 



()
நைஷ்கர்ம்யா = செயலின்மை - செயலற்ற  

#900 நைஷ்கர்ம்யா; = செயலை விலக்கியிருப்பவள் (லயம் என்ற ஒடுக்க நிலை ) *

* பற்றற்ற  நிலையினால், செயல்- அதன் விளைவு முதலியவற்றால் பாதிக்கப்படாதவள், அதற்கு அப்பாற்பட்டவள், என்றும் புரிதல். 


(தொடரும்) 



Lalitha Sahasranama (875 - 900)


Vibhoothi Visthaaram 



NiraamayA;
NiraalambA;
Swaathmaa raamA;
Sudhasruthi:;
Samsaara panka nirmagna samuddharaNa paNdithA;
Yagna PriyA;
Yagna KarthrI;
Yajamana swaroopiNI;
Dharma dhaarA;
dhanaadhyakshA;
dhana-dhaanya vivardhanI;
vipra priyA;
vipra roopA;
vishva brahmaNa kaariNI;
VishvagraasA;
VidhrumaabhA;
VaishnavI;
Vishnu RoopiNI;
Ayoni:;
Yoni NilayA;
KootasthA;
Kula-roopiNI;
Veeragoshti PriyA;
VeerA;
NaishkarmyA ;




()
Aamaya = sickness
Niramaya = free from illness

#876 NiraamayA;= She who is beyond illness and disease 



()
aalamba = Support

#877 NiraalambA; = She who is not dependant (needs no support she is the foundation and support) 



()
Svaathman = One's own self
aarama = delight 

#878 Swaathmaa raamA; = She delights in her ownself ( emphasizing her independant nature) 



()
Sudha = Nector
Sruthi = fall of, flow

#879 Sudhasruthi:; = She who is the flow of nector (the eternal bliss which is referred earlier naama "Sudhasaarabhi varshini in Sahasrara chakra)




()
Samsaara = worldly existence
Panka = Mud- dirt - slush
Nirmagna = to sink 
SamudharaNa = eradicate - remove - lift 
paNditha = is skilled


#880 Samsaara panka nirmagna samuddharaNa paNdithA; =  She who is skilled in rescuing those who are sunk in the dirty slush of impermanent worldly existence



#881 Yagna PriyA; = Who is fond of yagnas (rituals and sacrifices)



#882 Yagna KarthrI; = Who is does the yagna  (rituals and sacrifices)



()
Yajamana = Sacrificer (who performs yagna) - the host 
SwaroopiNi = in the form of - embodied 

#883 Yajamana swaroopiNI; = She who is in the form of the performer of yagna



()
Dharma = Ethics - morality
Adhaara = Support - foundation 

#884 Dharma-adhaarA; = Who is the basis of Dharma i.e codes for righteous way of life



()
Dhana = wealth
Dhanaadhyaksha = treasurer

#885 DhanaadhyakshA; = Who is the treasurer of the wealth (caretaker of universe, which is the treasured wealth) 



()
Dhana = wealth
Dhaanya = richness grains ie crops 
Vivardhan = to increase

#886 Dhana-dhaanya vivardhanI; = Who increases riches and produce




()
Vipra =  learned 

#887 Vipra priyA; = Who is fond of scholars, wise. *

*Those scholars and wise who has won over the self





#888 Vipra roopA; = Who is in the form of learned and wise * 

* Scholars and wise are those who has conquired self



()
Vishva = Cosmos 
BrahmaNa = Rotation
KariN = causing - effecting- doing

#889 Vishva brahmaNa kaariNI; = Who causes the functioning(rotation) of the universe
(Cycle of creation, sustenance and dissolution to go around )




()
Graasa = swallow - devour

#890 VishvagraasA; = Who consumes the universe (who swallows, destroys) 



()
vithruma = Coral
aabha = to shine

#891 VidhrumaabhA; = She who shines like coral * 

* Her complexion is mentioned as red (sindhooraruNa vigrahaam)



#891 VaishnavI; = Who is the energy of Vishnu



#892 Vishnu RoopiNI; = Who is in the form of Vishnu 



()
Yoni: = Origin - source

#893 Ayoni:; = Who is without Origin - is eternal 



()
Yoni = Source - Origin
Nilaya = to stay

#894 Yoni NilayA; = Who is abode of origin (abode of entire creation and its source)



#896 KootasthA; = Who is stable - unchanging



()
kula = noble family or race
Roopini = is in the form of 

#897 Kula-roopiNI; = Who is the personification of noble ancestory *

*Kula may also mean "Kaula path" which reinforces that she is the embodiment of Kaula path. 



()
Veeragoshti = assembly of brave men 

#898 Veeragoshti PriyA; = Who is fond of assembly of valorous



#899 VeerA; = Who is valiant 



()
NaishKarmya = inactivity 

#900 NaishkarmyA ; = Who withholds action (stage of inactivity-dissolution or laya) *

*Naama also means, she who is not affected by action because of non-attatchment  


* 900 * Naish karmya - She who does not have attachment to action


(to Continue) 

No comments:

Post a Comment