October 08, 2019

லலிதா சஹஸ்ரநாமம் (990 - 1000) (with English meanings) Concluding Part


Related image
Shiva-shakthiyaikya RoopiNi


சிவசக்த்யைக  ரூபம்


அப்யாசாதிஷய ஞாதா
ஷடத்வாதீத ரூபிணீ
அவ்யாஜ கருணா மூர்த்தி:;
அஞ்ஞான த்வாந்த தீபிகா;
ஆபால கோப விதிதா;
சர்வானுல்யங்க்ய ஷாசனா;
ஸ்ரீசக்ர ராஜ நிலயா;
ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரீ;
ஸ்ரீ ஷிவா;
ஷிவ-ஷக்த்யைக்ய ரூபிணீ;
லலிதாம்பிகா;



()
அப்யாஸ = அப்பியாசம் - பயிற்சி
அதிஷய = ஏராளமான - அதிகமான 
ஞாதா = அறியப்படும் பொருள் - புரிந்து கொள்ளப்படுதல்


#990 அப்யாசாதிஷய ஞாதா = முறையாக செய்யப்படும் அபரீமிதமான பயிற்சியால் அறியப்படுபவள்  (தவறாத முறையான பயிற்சியாலன்றி அறிய அரிதானவள்) 



()
ஷட = ஆறு
அத்வா = பாதை
அதீத = அப்பாற்பட்டு
ரூபிணீ = வடிவம் தாங்கிய

#991 ஷடத்வாதீத ரூபிணீ = ஆறு-பாதைகளுக்கும் அப்பாற்பட்ட ரூபம் தாங்கியவள் * 

* வர்ண, பத, மந்த்ர, புவன, தத்வ, கலா என்பன முக்தியை நோக்கிய பயணத்திற்கான ஆறு அத்வாக்கள்(பாதைகள்)



()
அவ்யாஜ= உண்மையான -  நம்பகத்தன்மையுள்ள
கருண = கருணை
மூர்த்தி = ரூபம்

#992 அவ்யாஜ கருணா மூர்த்தி:; =  பாரபட்சமற்ற பெருங்கருணையின் வடிவானவள். 



()
அஞ்ஞான = அஞ்ஞானம்
த்வாந்த = இருள்
தீபிகா = ஒளி = விளக்கு

#993 அஞ்ஞான த்வாந்த தீபிகா; = அஞ்ஞானமெனும் இருளை நீக்கும் ஒளிவிளக்காக சுடர்விடுபவள் 



()
ஆபாலம் = சிசுக்கள் உட்பட
கோப = இடையன்(இடைச்சி) - மேய்ப்பவள் = பாதுகாப்பவள் * 
* ஜீவர்களை மேய்ப்பவள் - பாதுகாப்பவள் இறைவி என்பது புரிதல். 
விதிதா = புரியக்கூடிய - உணரக்கூடிய - புரிந்த

#994 ஆபால கோப விதிதா; = குழந்தைகளாலும் உணர்ந்துகொள்ளக்கூடிய   இரட்சகி 



()
சர்வ = எல்லாமும் - அனைத்தும்
அன் = (அது அல்லாத) 
உல்லாங்க்ய = மீறுதல் - கீழ்படியாமை
ஷாசன = ஆணை - சாசனம்

#995 சர்வானுல்யங்க்ய ஷாசனா; = அவள் ஆணைக்கு உட்பட்டே அனைத்தையும் இயங்க வைக்கும் அதிவல்லமை பெற்றவள் (எவராலும் அவள் ஆணையை மறுக்கவும் மீறவும் முடியாதவள்) 



()
ஸ்ரீசக்ர = ஸ்ரீசக்கரம் (பிரபஞ்சத்தையும், மனித சரீரத்தையும் பிரதிபலிக்கும்
மஹாமேருவின் யந்த்ர வடிவம்)
நிலய = நிலையம் - குடியிருக்கும் கோவில் 

#996 ஸ்ரீசக்ர ராஜ நிலயா; = பேரரசியாக மஹாயந்திரமான ஸ்ரீசக்கரத்தில் வீற்றிருப்பவள்



#997 ஸ்ரீமத் த்ரிபுரசுந்தரீ; = ஸ்ரீ திரிபுரசுந்தரியாக அருளுபவள் *
* பிரபஞ்ச ஆக்க, இயக்க ஒடுக்கத்திற்கு காரணமான சுந்தரி. 




#998 ஸ்ரீ ஷிவா; = சதானந்த பரிபூரணமான சிவனுமானவள் 




#999 ஷிவ-ஷக்த்யைக்ய ரூபிணீ; =  சிவ-சக்தி ஐக்கியத்தின் ஸ்வரூபமானவள் *

*சிவன் எனும் பரமாத்மாவின் ஆதிசக்தியாக உள்ளுரைபவள் சக்தி.  ஆதிசக்தியான ஆற்றல் இன்றி பிரபஞ்சம் உருவாவதில்லை. சிவன் என்றும் சக்தி என்றும் பிரிவு இல்லை. சிவசக்தியாக பிரியாது இணைந்திருப்பதே பிரம்மத்தின் உண்மை நிலை. சிவன் சச்சிதானந்தம்.  சச்சிதானந்தத்தை உணர்வது சக்தி நிலை. உணர்வின்றி உணரப்படும் பொருளில்லை. உணரப்படும் பொருளின்றி உணர்வில்லை. 



#1000 லலிதாம்பிகா; = அவளே ஸ்ரீ லலிதாம்பிகா - தேவி லலிதாம்பிகையாகி உலகெல்லாம் ரக்ஷிப்பவள் *
* இதுவரை சொல்லியும் கேட்டும் வந்த இத்தனை பெருமைக்கும் காரணமான ஸ்ரீ லலிதாம்பிகா. 




இத்துடன் வாக்தேவிகளால் இயற்றப்பட்ட ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் முடிந்தது. வாக்தேவிகளுக்கும் இதனை எடுத்தியம்பிய ஸ்ரீ ஹயக்ரீவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரங்களை பணிந்து, அன்னை லலிதாம்பிகா-தேவி அனைத்துலக ஜீவராசிகளுக்கும் தனது இன்னருளையும் கருணையையும் வழங்க பிரார்த்திப்போம். 


Related image



சமஸ்க்ருத வார்த்தைகளுக்கு பதம் பிரித்து பொருளறிந்து நாமங்களின் பெருமையை உணர ஒரு சிறு முயற்சி. 
✾♣️✾♣️✾♣️   sanskritdictionary.comspokensankrit.org , and Manblunder.com .  முதலிய தளங்கள் உதவியாக அமைந்தது. மிக்க  நன்றி.  🙏✾♣️✾♣️✾♣️ 

✾♣️✾♣️✾♣️





Lalitha Sahasranama (990 - 1000) 



Related image
Sri. Shiva- Shivashakyaikya RoopiNi 


Shiva-Shakthyaika Roopam



Abhyaasaathishaya gnathA;
Shadadhvaatheetha roopiNI;
Avyaaja karunaa moorthi:;
Agnaana dvaantha deepikA;
Abaala gopa vidhithA;
Sarvanullangya ShasanA;
Shri Chakra Raja nilayA;
Shrimath Thripura sundarI;
Shri Shiva;
Shiva-shakthi-ayikya roopiNI;
LalithambikA;



()
abhyas = practise - repeated practice
Athishaya = superior - excessive - abundant
Gnaatha = Known - to be comprehended

#990 Abhyaasaathishaya gnathA; = She who can be known by excessive, 
constant and continous  practice. (Not an easy goal) 




()
Shada = six
Advan = path
atheetha = beyond
RoopiNi = is in the form of

#991 Shadadhvaatheetha roopiNI; = She whose form transcends the six paths of worship  *

*VarNa, padha, manthra, bhuvana, thathva, kalaa are mentioned as six paths towards liberalisation.




()
avyaaja = true - genuine
karuNa = compassion
Moorthi = form

#992 Avyaaja karunaa moorthi:; = Who is the ultimate form of abundant,
impartial compassion and love. 




()
Agyaana = Ignorance
Dvaantha = Darkness
Deepika = Lamp - Light 

#993 Agnaana dvaantha deepikA; = She who is the bright light that drives away the
darkness of Ignorance. 



()
Abaalam = including infants 
Gopa = Cowherd - Guardian* 
*Here goddess is understood to be the guardian and guide of Jivas
VidhithA = understood - perceived - known 

#994 Abaala gopa vidhithA; = Who is understood and perceived as a "guardian"
even by naive children. 




()
sarva = every
an = (not) (as prefix) 
ullangya = to transgress - disobey
Shasana = command

#995 Sarvanullangya ShasanA; = She whose command cannot be disobeyed



()
Shri-chakra  = Mystical diagram of  MahamEru (It represents the cosmos and human body)
Nilaya = place of residence 

#996 Shri Chakra Raja nilayA; = Queen of the universe, whose abode is the Divine.Shri-Chakra. (who sits in Shri.chakra  and rules the cosmos) 



#997 Shrimath ThripurasundarI; = She who is divine Sri.TripuraSundari *

*Beautiful divine mother, who  conceptualises, expands and contracts,  the cause of cosmos. 




#998 Shri Shiva; =  Who is the supreme bliss, benignant Sri.Shiva. 



#999 Shiva-shakthi-ayikya roopiNI; = Who is in the form of union between Shiva and  Shakthi *

*Shakthi is the dormant energy of Shiva which manifests as creation. Without primordial energy, creation is impossible. The two entities are  so intertwined, that question of their seperate existence does not arise. Pure consciousness is Shiva and realisation of pure consciousness is Shakthi. 

Thanks and Credit: Manblunder.com 



#1000 LalithambikA; = All the glory and praise is for the divine mother who is  Devi Sri.Lalithambika (revealing her Glorious name) 


We complete discussing magnificient composition of Vaag Devis on Devi Lalithambika. We bow to Lord Sri. Hayagreeva who disclosed these sacred names of divine Mother.

Let Sri. Lalithambika bless every being and nonbeing with her  ever flowing compassion and grace. 

Devi. Lalithambika
Related image



This was a novice and humble attempt to analyse the sanskrit meanings word-by-word for better understanding and clarity of Mother's divine names. 
✾♣️✾♣️✾♣️ I profusely thank the websites I used for reference  sanskritdictionary.com, spokensankrit.org , and Manblunder.com 🙏✾♣️✾♣️✾♣️ 




✾♣️✾♣️✾♣️


6 comments:

  1. Replies
    1. Thanks for following. I intend makign this a price-free e-book to be downloaded.

      Next I plan to write tamizh translation for a book called "Encyclopedia of Upanishads" which was written by my grandfather. Book covers 108 upanishads and it may take years. I plan to do chapter by chapter upload as seperate e-books for every upanishads.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Request to start lalitha Thrisathi in tamil meaning

    ReplyDelete