October 07, 2019

லலிதா சஹஸ்ரநாமம் (976-989) (with English meanings)

Goddess Lalita. Image Source- www.shalinshreeyantra.com
Sri.Lalithambika sits on the Bindu of Srichakra as "ThrikoNaga" and rules the Universe


No photo description available.
Sri.Hayagreeva  discussing Lalithambika's glory with Sage AGasthya:  PIC CREDIT: Suganthi Ravi
விபூதி விஸ்தாரம்


த்ரிபுராம்பிகா;  
தசமுத்ர சமாராத்யா;  
த்ரிபுராஸ்ரீ வஷங்கரீ;
ஞான முத்ரா;
ஞான கம்யா; 
ஞான ஞேய ஸ்வரூபிணீ; 
யோனி முத்ரா;
த்ரிகண்டேஷீ; 
த்ரிகுணா; 
அம்பா;
த்ரிகோணகா; 
அனகா; 
அத்புத சாரித்ரா; 

வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ; 


#976 த்ரிபுராம்பிகா;  = திரிபுராம்பிகையாக அவதரித்தவள் * * 

*திரிபுராம்பிகை ஸ்ரீ சக்கரத்தின் எட்டாவது ஆவர்ணத்தை ஆளும் தேவதை. 

* 'த்ரிபுரா' எனும் சொல் மூன்று நகரம் (அறியாமையின் உருவகம்) அல்லது மூன்று உலகம் குறிக்கும் சொல் என்பதை முந்தைய நாமங்களில் பார்த்தோம். அவற்றை ஆளும் அம்பிகை என்றும் புரிதல் சரியானதே. இருப்பினும், அத்தகைய பொருளை முன்பே அறிந்ததினால், திரிபுராம்பிகை என்பவள், எட்டாம் ஆவர்ண அவதார தேவதையாக புரிந்து கொள்வதும் முறையே. மும்மைகளை தன் ஆட்சிக்கு உட்படுத்தும் அதி சூக்ஷ்ம தேவதை. (முக்குணங்கள், படைப்பின் மூன்று நிலைகள், மூன்று உலகங்கள் முதலியன) ஒன்பதாவது ஆவர்ணத்தில் இவளே அனைத்தையும்உள்ளடக்கிய லலிதையாக அருள்பாலிக்கிறாள். 



()
தஷ = பத்து
முத்ரா = யோக, நாட்டிய, ஆன்மீக, சாஸ்திரங்கள் கூறும் முத்திரைகள்.
கைவிரல்களைக் கொண்டு முத்திரைகளைப் பிரதிபலிக்கிறார்கள் * 

* முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை  என்ற பொருளாகும். 


#977 தசமுத்ர சமாராத்யா =  பத்து-முத்திரைகளின் அபினய-சமிக்ஞைகளினால் துதிக்கப்படுபவள் 



()
த்ரிபுராஸ்ரீ = ஸ்ரீ சக்கரத்தின் ஐந்தாம் ஆவர்ண(பிரிவு) தேவதை
வஷங்கர் = கட்டுப்படுத்துதல்

#978 த்ரிபுராஸ்ரீ வஷங்கரீ; = (ஐந்தாம் ஆவர்ண-தேவி) திரிபுராஸ்ரீயை தனது ஆளுகைக்கு உட்படுத்துபவள்




#979  ஞான முத்ரா; = ஞான முத்திரையின் வடிவானவள் (சின் முத்திரை) 



()
கம்யா = அடையக்கூடிய - அடைய சாத்தியப்படுதல்

#980  ஞான கம்யா; = ஞானத்தினால் அடையப்பெறுபவள் 




()
ஞான = அறிவு
ஞேய = அறியப்படும் பொருள்
ஸ்வரூபிண் = வடிவம்

#981  ஞான ஞேய ஸ்வரூபிணீ; = அறிவின் வடிவாகவும் அறியப்படும் பொருளாகவும் இருப்பவள் 




#982 யோனி முத்ரா;   யோனி-முத்திரையானவள் (முத்திரைகளுள் ஒன்று) 



()
த்ரிகண்ட = பத்தாம் முத்திரை
ஈஷீ = ஈஸ்வரீ

#983 த்ரிகண்டேஷீ; = 'த்ரிகண்டா' எனும் பத்தாம் முத்திரையை ஆளுபவள் 




#984 த்ரிகுணா; = முக்குணங்களாக பரிமளிப்பவள் (ராஜஸ, தாமஸ, சத்துவ குணங்கள்)



()
அம்பா = அன்னை

#985 அம்பா; =  அம்பிகை - அன்னையாகி அருளுபவள் 




()
த்ரிகோண = முக்கோணம் 

#986 த்ரிகோணகா; = திரிகோணத்தில் உறைபவள் ( ஸ்ரீசக்கரத்தின் மைய்யப்பகுதியின் திரிகோணத்து பிந்து) 



()
அகா = அழுக்கு - பாபங்கள் 
அனாகா = பரிசுத்தம்

#987 அனகா; =   மாசற்றவள் 


()
அத்புத= ஆச்சரியம்
சாரித்ர= சரித்திரம் 

#988 அத்புத சாரித்ரா; = அதியற்புத சரித்திரப் பெருமை வாய்ந்தவள் 


()
வாஞ்சிதார்த்த = இச்சை - விருப்பம்-  ஆசை
ப்ரதாயின் = வழங்குதல் 

#989 வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ; = (பக்தர்களின்) அபிலாஷைகளை பூர்த்தி செய்பவள் 



(விபூதி விஸ்தாரம் முற்றிற்று)


Lalitha Sahasranama (976 - 989) 

Image result for Mudras
Mudras

Vibhoothi Visthaaram

ThripuraambikA;
DashaMudhra samaaradhyA; 
Thripuraashree vashankarI; 
Gnana MudhrA;
Gnana gamyA; 
Gnana gnEya SwaroopiNI; 
Yoni MudhrA; 
TrikhandeshI; 
TriguNa; 
AmbhA; 
TrikoNagA;
AnaghA; 
AdbuthA CharithrA; 
Vanchithaartha pradhayinI; 




#976 TripuraambikA; = Who has manifested as Goddess TripuraambikA * * 

* Tripuraambika is presiding deity of eighth avarNa (division) in Sri. Chakra.

* We have seen in earlier naamas, that Tripura refers to triads. Tripuraambika may also mean she who controls  three cities (or lokas) which personifies ignorance.  Therefore we have the assumption that this naama would mean the eight presiding deity of SriChakra.

As Tripuraambika she is extremely subtle and governs all the threesomes in the cosmos (three attributes, three cities, three gods, three states of consciousness etc) . In Ninth AvarNa, she stands mighty and high as Lalithambika to bestows grace. 



()
Dasha = ten  
Mudra = Ritualistic, spiritual, yogic or dance gestures or representations made predominantly using hands and fingers 
Dashamudhra = ten-mudras 
Samaraadhan = gratification  

#977 DashaMudhra samaaradhyA; = Who is worshipped by ten-mudra gestures. *




()
Thripuraashree = Presiding deity of Fifth aavarNa (division)
Vashankar = commands 

#978 Thripuraashree vashankarI; = Who administers and controls
 Thripuraashree (fifth avarna's deity)




#979 Gnana MudhrA; = Who is in the form of Gnaana Mudhra (Chin Mudra) 




()
Gamya = Attainable - can be approached

#980 Gnana gamyA; Who is attainable through Gnaana 





()
Gnaana = Knowledge
GnEya = to be known  - having to be known
Swaroopin= in the form of 

#981 Gnana gnEya SwaroopiNI; = Who is in the form of Knowledge and the known




#982 Yoni MudhrA; = Who personifies Yoni-Mudhra 



()
Trikanda = Tenth Mudra 
IshI = Lord - Ishvari 

#983 TrikhandeshI; = Who rules the Tenth Mudra, Trikanda





#984 TriguNa; = Who is in the form of 'three qualities' (Rajasa, Thamasa, Sathva) 





#985 AmbhA; = She who is Ambaa, the divine Mother.



()
TrikONaka = Triangle

#986 TrikoNagA; = Who dwells in TrikONa ( innermost triangle of Shri.Chakra, where she dwells in the bindhu) 




()
aghaa= Sin - impurity
Anaghaa = without sin

#987 AnaghA; = Who is pure - flawless.



()
Adbutha = remarkable- wonderful
Charithra = History

#988 AdbuthA CharithrA; = Whose history is astounding. 


()
Vanchithaartha = Desired- wished
Pradhayin = to bestow 

#989 Vanchithaartha pradhayinI; = Who grants the wishes of her devotees



(End of Vibhoothi Visthaaram) 

No comments:

Post a Comment