Sadhashiva Kutumbini |
விபூதி விஸ்தாரம்
நாத ரூபிணீ;
விஞ்ஞான கலனா;
கல்யா;
விதக்தா
பைந்தவாசனா
தத்வாதிகா
தத்வமயீ
தத்வமர்த்த ஸ்வரூபிணீ
சாமகானப்ரியா
சௌம்யா
சதாஷிவ குடும்பினீ
சவ்ய-அபசவ்ய மார்கஸ்தா;
சர்வாபத்-விநிவாரிணீ
ஸ்வஸ்தா;
ஸ்வபாவ மதுரா;
தீரா;
தீர சமர்சிதா;
சைதன்யார்க்ய சமாராத்யா;
சைதன்ய குசுமப்ரியா;
சதோதிதா
சதா-துஷ்டா
தருணாதித்ய பாடலா
தக்ஷிணா தக்ஷிணாராத்யா;
தரஸ்மேர முகாம்புஜா
கௌலினீ கேவலா;
()
நாத = நாதம்
#901 நாத ரூபிணீ; = நாத வடிவானவள் *
*சிருஷ்டியின் முதல் நாதம். ஓம்காரம். ஒடுக்க நிலையில் இருந்த அரூபமான சிவசக்தி, சிருஷ்டியை நோக்கி எழுப்பும் ஆதி நாதம்.
()
விஞ்ஞான = அறிவு - ஞானம் - விஞ்ஞானம்
கலனா = நிகழ்த்துதல் - உந்துதல்
#902 விஞ்ஞான கலனா; - உயர் ஞானத்தை , மெய்யறிவை தூண்டுபவள், அதனை விழிக்கச் செய்பவள் *
*மெய்யறிவே முதலறிவு, உயர் அறிவு, பேரறிவு. அதனின்று கிளைத்தது மற்றவற்றின் கல்வி ஞானங்கள்.
#903 கல்யா; = மங்களகரமானவள் - நலம் நல்குபவள் - (படைத்தல் புரிய) தயாராகியிருப்பவள்
#904 விதக்தா = நிபுணத்துவம் நிறைந்தவள்- பேரறிவாளி (பிரபஞ்சத்தை சிருஷ்டிகும் பேரறிவு)
()
பைந்தவ = பிந்து (புள்ளி - பொட்டு)
ஆசன = இருக்கை
#905 பைந்தவ-ஆசனா = மஹாமேருவின் பிந்துவில் வீற்றிருப்பவள் *
மஹாமேருவின் பிந்த உச்சியில் நடுநாயகமாக அமர்ந்து அரசாள்கிறாள். ஸ்ரீசக்கரம் மஹாமேருவை பிரதிபலிக்கும் யந்திரம். புருவங்களுக்கு மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்கப்படும் ஒளிக்கு பிந்து என்று பெயர்.
()
தத்வ = சத்தியம் - தத்துவம் (படைப்பின் மூல தத்துவங்கள் சாங்கிய முறைப்படி இருபத்தி நான்கு)
அதிக = அதிகமான - தாண்டிய
#906 தத்வாதிகா = தத்துவங்களைக் கடந்து நிற்பவள் (படைப்பின் மூலமாக சொல்லப்படும் சாங்கிய தத்துவங்கள்)
()
மயீ = உள்ளடக்கி இருத்தல் - கொண்டிருத்தல்
#907 தத்வமயீ = தத்துவமயமானவள் - தத்துவமானவள்
()
தத் = அது
த்வம் = நீ
அர்த்த= அர்த்தம்
ஸ்வரூபிண் = வடிவம்
#908 தத்வமர்த்த ஸ்வரூபிணீ = "தத்-தவம்-அசி" என்ற மஹாவாக்கியத்தின் பொருளானவள் *
*தத்-தவம்-அசி என்றால் நீயே அதுவாகியிருக்கிறாய், ஜீவனே பிரம்மம் எனும் ஜீவ-பிரம்ம ஐக்கிய நிலையை குறிக்கும் வாக்கியம்.
()
சாமகான = சாம வேதங்களின் கானம் (வேத மந்திரம்)
#909 சாமகானப்ரியா = சாமவேத பாராயணத்தில் பிரியமானவள் *
*சாமவேதம் இசையுடன் கூடிய வேத பாராயணம்.
#910 சௌம்யா = வெண்மதியைப் போன்று இதமானவள்; எழிலானவள்
()
குடும்பினீ = குடும்பத் தலைவி - மனைவி
#911 சதாஷிவ குடும்பினீ = சதாசிவனின் பத்தினி
* பிரபஞ்ச தோற்றத்திற்கு காரணமான பரம்பிரம்மம், ie சதாசிவன். அவரே பிரபஞ்ச உயிர்களின் தந்தை. லலிதாம்பிகையே தாய். பரமபுருஷனின் பத்தினி.
()
சவ்ய = வலம் சார்ந்த
அபசவ்ய = வலமிருந்து இடம் நகரும் - இடம் சார்ந்த
மார்க்க = மார்க்கம்
ஸ்தா = இருத்தல்
#912 சவ்ய-அபசவ்ய மார்கஸ்தா; = வலம் சார்ந்த வழிபாட்டு முறையிலும், வலம் சாராத இட வழிபாட்டு முறையிலும் பிரசன்னமாகியிருப்பவள் *
* வேத வழிபாட்டு முறையை வலம் சார்ந்ததென்றும் (வலக்கை யாக யக்ஞசங்களில் உபயோகிப்பதனால்), தாந்திரீக முறையை இடம் சார்ந்ததென்றும் ( இடக்கை உபயோகத்தினால்) என்றும் அறிகிறோம்
Thanks and credit: https://www.manblunder.com/articlesview/lalitha-sahasranamam-912
()
சர்வ = ஒவ்வொரு
ஆபத் = ஆபத்து
விநிவாரிணீ = நீக்குதல்
#913 சர்வாபத்-விநிவாரிணீ = (பக்தர்களின்) அனைத்து இடர்களையும் களைபவள்
#914 ஸ்வஸ்தா; = தன்னில், தன் இயல்பு நிலை இருப்பில் நிறைவுகாண்பவள்
()
ஸ்வபாவ = குணம்
மதுர = இனிமை
#915 ஸ்வபாவ மதுரா; = இனிமையான இயல்புடையவள்
()
தீர = வீரம்- ஆற்றல்- அறிவு
#916 தீரா; = கொற்றம் நிறைந்தவள் - அறிவுமயமானவள்
()
சமர்ச்சிதா = போற்றப்படுபவள்
#917 தீர சமர்சிதா; = சிறந்த பண்டிதர்களால், அறிவாளிகளால் போற்றப்படுபவள்
()
சைதன்ய = சுத்த சைதன்யம் - பெருவுணர்வு - தூய உணர்வு
அர்க்ய = அர்பணிப்பு - காணிக்கை
சமாராத்யா = திருப்திபடுத்துதல்
#918 சைதன்யார்க்ய சமாராத்யா; = சுத்த சைதன்யமாகிய பெருவுணர்வின் அர்பணிப்பில் திருப்தி அடைபவள்
()
குசும = மலர்
#919 சைதன்ய குசுமப்ரியா; = சைதன்யமாகிய வாடா மலரிடத்தில் விருப்பமுள்ளவள் *
* சைதன்யம் மலராக உருவகப் படுத்தப்பட்டுள்ளது.
()
சதா = எப்பொழுதும்
உதித = தோன்றியிருத்தல் - எழும்பியிருத்தல்
#920 சதோதிதா = நித்தியமாக உதித்திருப்பவள் - எழுந்தொளிர்பவள்
(பண்டிதர்களின் மனதில் எழுந்தருளியிருப்பவள்)
()
துஷ்ட = நிறைவுடன் - சந்தோஷத்தல்
#921 சதா-துஷ்டா = எப்பொழுதும் மகிழ்ந்திருப்பவள்
()
தருண = இளைய
ஆதித்ய = சூரியன்
தருணாதித்ய = உதய சூரியன்
பாடல = இளஞ்சிவப்பு
#922 தருணாதித்ய பாடலா = உதய சூரியனின் இளஞ்சிவப்பு நிறத்தினள்
()
தக்ஷிண = வலம் சார்ந்த - தக்ஷிணாசாரம் வலம் சார்ந்த வழிபாட்டு முறையை பின்பற்றுவோர்
அதக்ஷிண = வலம் அல்லாத = வாமாசாரம் - இடம் சார்ந்த வழிபாட்டு முறையை பின்பற்றுவோர்
ஆராத்யா = வழிபடுதல்
#923 தக்ஷிண-அதக்ஷிணாராத்யா; தக்ஷிணாசாரம் மற்றும் வாமாசாரம் பின்பற்றுவோரால் வழிபடப்படுபவள்
()
தக்ஷிண = திறனாளி - அறிவாளி
அதக்ஷிண = அஞ்ஞானி
#923 தக்ஷிண-அதக்ஷிணாராத்யா; அறிவாளிகளாலும் அஞ்ஞானிகளாலும் (அனைவராலும்) வழிபடப்படுபவள்
()
தர = முகிழ்க்கும்
ஸ்மேர = புன்னகத்த
முக = முகம்
அம்புஜ = தாமரை
#924 தரஸ்மேர முகாம்புஜா = அலர்ந்த அழகிய தாமரையைப் போன்ற புன்னகை தவழும் முகத்தினள்
()
கௌலினி = கௌல மார்க்கம் (லலிதாம்பிகையை துதிக்கும் மார்கங்களில் ஒன்று)
கேவலா = பிரம்ம ஞானம்
#925 கௌலினீ கேவலா; = கௌலமார்க்கத்தின் வழிபாட்டின் மூலம் அடையும் பிரம்ம ஞானமாக ஒளிர்பவள்
(தொடரும்)
Lalitha Sahasranama (901 - 925)
Vibhoothi Vishthaaram
Naadha RoopiNI;
Vignaana kalanA;
KalyA;
VidhagdhA;
BaindhavaasanA;
ThathvadhikA;
ThathvamayI;
Thatvamartha SwaroopiNI;
Saamagaana PriyA;
SowmyA;
Sadashiva KutumbinI;
Savya-apasavya-maargasthA;
Sarvaapad-vinivaariNI;
SwasthA;
Swabhaava MadhurA;
DheerA;
Dheera smarchithA;
Chaithanyargya samaaradhyA;
Chaithanya KusumapriyA;
SadhodhithA;
Sadhaa-thushtA;
Tharunadhithya paatalA;
Dakshina DakshinaradhyA;
Dharasmera mukhambujA;
Kaulini kEvalA;
()
Naadha = sound
#901 Naadha RoopiNI; = Who is in the form of "Sound" *
*Here the name rightly refers to the first primeval unmanifest sound moving towards creation. The sound which is the source of creation, highest form of Sound. (The Omkaara)
()
Vignaana = Knowledge - wisdom - science
Kalanaa = causing- impelling
#902 Vignaana kalanA; = She who causes, awakens the Supreme knowledge *
*Supreme knowledge is knowledge of brahman, from which every other knowledge springs up.
#903 kalyA; = Who is Benevolent, Auspicous - ready or prepared for (to take up creation) *
#904 VidhagdhA; = Who is sharp, skilled - Who is a scholar (skilled to take up creation)
()
Baindhava = bindu (dot-spot)
aasana = seat
#905 Baindha-avaasanA; = Who is seated in the bindu of MahamEru *
* Summit of MahaMeru is where she is seated as the queen of the universe. Srichakra's central point is known as bindu.(sriChakra represents Mahameru) Bindu is also the spot where naadis merge at Agnya Chakra (spot between the brows)
Thanks and Credit : https://www.hinduwebsite.com/24principles.asp
()
Thatva = state of truth - Basic principles (24 in number as per samkhya philosphy)
adhika = is more - exceeding
#906 ThathvadhikA; = Who transcends Thatvas (Elements or principles of creation)
()
mayee = composed of - consisting of
#907 thathvamayI; = She who is the thatvas (the reality)
()
Thath = That
Tvam = you
artha = meaning
Swaroopin = is the form
#908 Thatvamartha SwaroopiNI; = She is embodiment of the meaning of sacred words
"thath-tvam-asi" (thou art that) which enlightens the unity of Jiva and Parabrahma *
*Thath-tvam-asi" broadcasts the non-duality aspect self and the Supreme brahman in the highest realised state .
()
saamagana = Songs/Hymns from Saama vEdha
#909 Saamagaana PriyA; = Who is fond of chantings of Saama VEdha (Saama Vedha chantings are melodious musical)
#910 SowmyA; = Who is cool, gentle and lovely like the moon
()
KutumbinI = Spouse
#911 Sadashiva KutumbinI; = Who is the consort of Lord SadaShiva
*It should be remembered he fathers the entire creation. She is the mother of creation.
()
savya = right handed
apasavya = from left to right - moving to left - left sided
maarga = Path
Sthaa = stays put
#912 Savya-apasavya-maargasthA; = Who is present in both right and left paths leading to beatitude *
*Right handed method of worship is Vedic method (where right hand is used for rituals) and left handed is Tantric method of worship (where left hand is used for worship practices)
Thanks and credit: https://www.manblunder.com/articlesview/lalitha-sahasranamam-912
()
Sarva = Every
aapad = Misfortune-Calamity
vinivaariNa = restraining
#913 sarvaapad-vinivaariNI; = Who protects every misfortune and danger
(protects those who believe in her and worship her)
#914 SwasthA; = Who is self-abiding and contented in her own natural-state
()
Svabava = Character
Madhura = Sweet
#915 Swabhaava MadhurA; = Whose inherent nature is pleasant.
()
Dheeraa = Strong - courageous - wise
#916 DheerA; = Who is strong, brave and wise
()
Samarchithaa = is worshipped
#917 Dheera smarchithA; = Who is praised and glorified by Scholars
()
Chaithanya = Pure consciousness
Argya = Oblation - Libation - Water offered as offering towards god
Samaaradhan = gratification
#918 Chaithanyargya samaaradhyA; = She who accepts the self (pure consciousness)
as Oblation towards her worship.
()
Kusuma = flower
#919 Chaithanya KusumapriyA; = Who is fond of the eternal flower, the "Chaitanya" *
*Chaitanya is compared to a flower
()
Sadha = ever- eternally
Udhitha = aRisen - ascended
#920 SadhodhithA; = Who shines ever ascended (in the minds of scholars)
()
Thushta = Satisfied - pleased
#921 Sadhaa-thushtA; - Who is ever contented and happy
()
TharuNa = young
Aadhithya = Sun
TharuNadhiya = newly risen sun
Paatala = Pale red (pink)
#922 Tharunadhithya paatalA; = She who is pale-red(pink), like the young-rising sun
()
Dakshina = those who follow right handed worship (dakshinaachaara)
Adakshina = left handed worshippers (vamachaara)
Aaradhya = To worship
#923 Dakshina-adakshinaradhyA; Who is revered by those who follow dakshinachara and vaamaachara cults.
()
Dakshina = skilled
Adakshina = ignorant
#923 Dakshina-adakshinaradhyA; = Who is worshipped by both knowledgeable and the ignorant.
()
Dhara = to break
SmEra = Smiling
Mukha = Face
Ambuja = Lotus
#924 Dharasmera mukhambujA; = Whose has a beautiful smile of full bloomed lotus.
()
Kaulini = pupils of kaulIni method (left handed shaktha rituals)
Kevala = Isolated - pure (here the self) -ultimate knowledge
#925 Kaulini kEvalA; = Who is in Kaulini worship which ultimately results in Kevala knowledge
(to Continue)
No comments:
Post a Comment