February 20, 2019

இடங்கழி நாயனார்

Image result for இடங்கழி நாயனார்


நாயன்மார்கள் பலரை சோழநாட்டினராகவே நாமும் காண்கிறோம். இடங்கழியாரும் கொடும்பாளூரில் சிறப்பாட்சி புரிந்தவர். சிவனுக்கும் அவனது அடியார்க்குமேயன்றி வேறு எவர்க்கும் அடிபணியாதவர் . சைவத்தின் வளர்ச்சிக்கும் அன்றாட கோவில் திருப்பணிகள் தடையின்றி நடப்பதற்கும் ஆவன செய்தார்.

சிவனடிருக்கு உணவிடுவதை தம் பணியென கொண்ட அடியார் ஒருவர், அமுது படைக்க தானியம் இன்றிப்போகவே செய்வதறியாது வருந்தி, மன்னரின் நெற்கிடங்கில் களவாடினார். பிடிபட்ட அடியாரும் மன்னனிடம் தாம் திருடியதற்கான காரணத்தை உரைக்க, மிக்க மெச்சிய மன்னன், இவரன்றோ சிறந்த அடியார் என்று பாராட்டி, ஊரெங்கும், மன்னனின் நெற்பண்டாரமும் மட்டுமன்றி நிதியும் கூட சிவனடியார்களுக்காக எவரும் கவர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தார்.

பக்தியின் எல்லை விரியும் பொழுது உலக நாட்டத்திற்கான பற்றும் குறைந்து வரும். உலகத்தின் பார்வைக்கு பொன்னாகவும் பொருளாகவும் அருளாகவும் தெரியும் தன சம்பத்துக்கள் பக்தர்களுக்கோ ஒரு பொருட்டாகாது. ஈசனுக்கோ அல்லது அவன் அடியவருக்கோ அல்லாத பொருள் தேங்கி கிடந்தும் பயனென்ன? இப்புவியின் பிறப்பும் சிறப்பும் தனமும் அவன் அருளியது அவனுக்கே சென்று சேர்வதற்காக பணிக்கப்பட்டவை என்பதே பக்தர்களின் எண்ணமாயிருக்கும். அரச போகத்திலும் செருக்கிலும் திளைத்த பேரரசர்கள் மத்தியில் இப்படியும் ஒரு அரசர். அதனால் நாயன்மாராக உயர்ந்தார்.

திருநீரின் மகிமை தழைக்க நெடுங்காலம் சிறந்த ஆட்சிபுரிந்து முக்தி அடைந்தார்.

.

ஓம் நமச்சிவாய 

No comments:

Post a Comment