Showing posts with label bhakthi. Show all posts
Showing posts with label bhakthi. Show all posts

December 11, 2017

லலிதா சஹஸ்ரநாமம் ( 126 - 131) with English Meanings




பக்த அனுக்ரஹம்

ஶாங்கரீ;

ஸ்ரீகரீ;
சாத்வீ;
ஶரச்சந்திர நிபானனா;
ஶாதோதரீ;
ஶாந்திமதீ;


# 126  ஶாங்கரீ = இறைவன் சிவனின் ரூபமான ஶங்கரனின் மனையாள்

() ஸ்ரீ = தனம் - செல்வம் 

கர = காரணமான - நிகழ்த்துதல்


# 127 ஸ்ரீகரீ = செழிப்பையும் வளத்தையும் உண்டாக்குபவள்

# 128 சாத்வீ = நற்பண்புகளின் இலட்சணமானவள்

() ஶரத் = இலையுதிர்காலம் - இலையுதிர்காலத்திற்கானவை

ஶரச்சந்திர = இலையுதிர்காலத்தின் சந்திரன்
நிப = ஒற்றுமை - சாயல்
ஆனன = முகம்


# 129 ஶரச்சந்திர நிபானனா = இலையுதிர்கால்த்து பூரண சந்திரனின் சோபையை போன்று ஜொலிக்கும் முகமுடையாள்

() ஶாதோதர = மெலிந்த இடை

#  130 ஶாதோதரீ = மெல்லிடையாள்

() ஶாந்திவ = கருணை - சாந்தம் 

மதீ = அறிவு


#  131 ஶாந்திமதீ = அன்பையே தனது இயல்பாக கொண்டவள்

( பக்த அனுக்ரஹத்தை பிரதிபலிக்கும் பெயர்கள் நிறைவுற்றது. இனி "நிர்குண" ரூபத்தை குறிக்கும் நாமாக்களை பார்க்கலாம். நிர்குண ரூபத்தை குறிக்கும் வகையில் அடுத்த சில பதிவுகளை குறிக்கும் படங்கள் எதுவும் வெளியிடப்படாது )


Lalitha Sahasranama (126-131)

Bhaktha Anugraha

Shaankari;

Shreekari;
Saadhvi;
Sharachchandra nibhaananana;
Shathodhari;
Shanthimathi;




# 126 Shaankari = Who is the Consort of Shankar (Form of Lord Shiva)


() Shree = wealth
Kara = to cause or bring about


# 127 Shreekari = She who confers prosperity

# 128 Saadhvi = She who is Virtuous

() Sharad = Autumn
Sharachchandra = Moon during Autumn
niba = to resemble - similar 
Aanan = face



# 129 Sharachchandra nibha-ananana = Whose face is like glowing full-moon during autumn


() Shaathodar = slender waist

# 130 Shathodari = Who flaunts tender waist

() Shaanthiva = beneficent- kind
mathi = intellect


#  131 Shanthimathi = Who is pleasant and peaceful in nature

(We complete names representing her role as "bhaktha- anugraha", next few sets would talk on "nirguna" or formless attributes. I would be refraining from posting any pictures until I complete names reflecting "nirguna" characteristics of Divine Mother)

November 30, 2017

லலிதா சஹஸ்ரநாமம் (112 - 116) also with English meaning

(பக்த அனுக்ரஹம்)


பவானீ;

பாவனா கம்யா;
பவாரண்ய குடாரிகா;
பத்ர ப்ரியா;
பத்ர மூர்த்தி;


() பவா = சிவன் - சிவனின் வடிவம் 


# 112 பவானீ = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி


(வேறு)
() பவா = செல்வம்


# 112 பவானீ = நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்


() பாவனா = சிந்தனை - ஒருமுகப்படுத்துதல் -கற்பனை

கம்யா = அடையக்கூடியது - சாத்யமாவது


# 113 பாவனாகம்யா = ஒருமுகப்படுத்திய தியானத்தால் உணரப்படுபவள், புத்திக்கு புலப்படுபவள்

() பவ = உலக வாழ்வு - சம்சார சாகரம்

ஆரண்ய = பெருங்காடு
குடாரிகா = கோடாரி


# 114 பவாரண்ய குடாரிகா = கடக்க அரிய பெருங்காட்டை கோடாரியால் அழிப்பது போல் உலக வாழ்வென்ற பெருவனத்தை அழித்து, பயணத்தை எளிதாக்குபவள்

(பிறப்பு-இறப்பு என்ற தளைகளை அறுத்து, முக்திக்கு வழி வகுப்பவள் )


() பத்ர = காருண்ய - கனிவான - அருள் நிறைந்த

ப்ரியா= பிரியமான - பிடித்தமான


# 115 பத்ரப்ரியா = அனுகூலமான யாவற்றிற்கும் அபிமானி

() பத்ர = மகிழ்ச்சியான - மங்களமான

மூர்த்தி = வடிவம்


# 116 பத்ரமூர்த்தி = வளம் செழிக்கும் நற்பேறுகளின் உருவகமானவள்

(பக்த அனுக்ரஹம் தொடரும்)


Lalitha Sahasranama (112-116)

(Bhaktha Anugraha)

Bhavani;

Bhavana gamya;
Bhavaranya kutarika;
Bhadra priya;
Bhadra moorthy;


() Bhava = Lord Shiva - Form of Lord Shiva - prosperity
Bhavani = Wife

# 112 Bhavani = Who is the consort of Lord Shiva
(also)
# 112 Bhavani = She who brings prosperity

() Bhavana = thinking - imagining - concentrating
gamya = discernible - can be attained


# 113 Bhavanagamya = Who can be perceived by deep meditation and contemplation

() Bhava = in this context means worldy existence
araNya = forest
kutaari = axe


# 114 BhavaraNya kutaarika = Who is like axe severing the wild forest of Samsara 
(Samsara or worldly existence refers to materialistic quests - cycle of birth and death)


() Bhadra = blessed - gracious -kind
priya = fond of - has liking to


# 115 Bhadra priya = Who favours everything auspicious (bestows happiness)

() Bhadra = prosperous- fortune - auspicious
moorthy = form = represented form


# 116 Bhadramoorthy = Who is the incarnation of Grace and Virtue

(to continue with Bhaktha Anugraha)


August 02, 2015

ஆழ்வார்கள் - பகுதி 3

பொய்கை ஆழ்வார் அந்தாதி வடிவில் பாடிய 100 பாசுரங்களில் திருவரங்கத்து பெருமானைக் குறித்தும் பாடியுள்ளார்.

அரங்கனுக்கும் ஆழ்வாருக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றல்ல. கர்ப்ப காலம் தொட்டே இருந்திருக்கிறது. அதற்கு முன்பும் இருந்திருக்கிறது. தாயின் கர்ப்பத்தில் தோன்றிய சான்றுகள் இல்லாத பொய்கையில் பிறந்தவருக்கு ஏது கர்ப்ப காலம்?!

கர்ப்ப காலம் என்பது காலத்தின் முன்னோடியாக படைத்தலுக்கு முன் இருந்த ஒடுக்க காலத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் போலும்.

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான்
இன்றுமறப்பனோ ஏழைகாள் -அன்று
கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கணடேன்
திருவரங்கமேயான் திசை 

என்பது ஆழ்வாரின் பாசுரம்.


ஒன்றுமே மறக்கவில்லை. எப்பொழுதும் அவர் மறக்கவில்லை என்ற உறுதிகூறுகிறார். கர்ப்பகாலம் தொட்டே இருந்த சம்பந்தம். காலத்தின் சக்கர சுழற்சிக்கும் அப்பாற்பட்டு நிற்கும் உறவு.






என்னால் இந்த அழகனை எப்படி மறக்க முடியும்! எப்படிப் பட்ட அழகனை? ஓத நீர்வண்ணன்- ஆழியில் வெள்ளப்பெருக்கெடுக்க ஏற்படும் குளிர்வண்ணம் கொண்டவனை ஒரு போதும் மறந்து அறியேன். கர்ப்பத்தில் இருக்கும் காலத்தேயே மறந்தறியாதவன், இன்று மறப்பேனோ! 

அன்று தொட்டே கைதொழுதேன், கண்டேன். திருவரங்கத்து உறை கொண்டிருக்கும் அவனை நோக்கி கை கூப்பித் தொழுதேன்.

திருவரங்கத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆழிமேல் பள்ளி கொண்ட பெருமானை, கருவரங்கத்து உள்ளே ஏறக்குறைய அதே போல் சயனித்த நிலையில் கைகூப்பி நின்று பக்தன், குழந்தையாய் தன்னை பாவித்து பாடுவது பாசுரத்தின் அழகு.


(இனி பூதத்தாழ்வாரைப் பற்றி சிறுகுறிப்புகள் பகிர்வோம்)


July 24, 2015

ஆழ்வார்கள் - பகுதி 2



திருக்கோவிலூரில் பொய்கையாழ்வார் பெருமாளின் தரிசனம் பெற்றது உன்னத நிகழ்வாகும். பக்தவத்ஸலனான விஷ்ணு, தம் அடியவர்க்கு அருளும் பொருட்டு, நிகழ்த்திய இத்திருவிளையாடல் பெரும் நெகிழ்ச்சிக்குறிய சம்பவமாக குறிக்கப்பட்டுள்ளது.  க்ஷேத்திரங்கள் பல தரிசித்து கொண்டே வந்து திருக்கோவிலூர் வந்தடைகிறார் பொய்கையாழ்வார். திருக்கோவிலூரில் உலகளந்த பெருமானாய் விஷ்ணு கோவில் கொண்டுள்ளார். 

பெருக்கெடுத்தோடும் தென்பண்ணை ஆற்றைக் கண்டதும் பெருமானின் பாற்கடலுடன் ஒப்பிட்டார் ஆழ்வார். பெருமாளின் திருவுருவம் நினைந்து பக்திப் பெருக்கெடுக்க உருகுகிறார். உடனே பச்சைமாமலை போல் மேனியுடன் மணிமாலைகள் அணிந்த மார்புடன் எழிலுருவாய் திருமாலை தரிசிக்கிறார். அவர் பரவசத்தில் உருகி நேரம் கடப்பதறியாமல் அங்கேயே நின்று விடுகிறார். 

பின்னர் தன் இயல்புக்கு திரும்பிய ஆழ்வார், இரவாகிப் போனதை உணர்கிறார். பலத்த காற்றும் பெருமழையும் சூழ, அருகே தென்பட்ட ஆசிரமத்துக்கு செல்கிறார். மிருகண்டு முனிவரால் அமைக்கப்பட்டிருந்த அவ்வாசிரமத்தில் யாரும் தென்படவில்லை.  

ஒருவருக்கு படுக்க இடம் அளவெடுத்தாற்ப் போல் இருந்தமையால் களைப்பாறி சற்றே ஓய்வெடுக்க முற்பட்டார். அங்கே திருமாலின் திருவுளப்படி, பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார். மழைக்கு இடம் வேண்டி ஆசிரமக்  கதவைத் தட்ட,  இருவருக்கு உட்கார இடமிருப்பதால், இருவருமாக அமர்ந்தபடி பரந்தாமன் பாடல்களில் லயித்திருந்தனர். 

மீண்டும் கதவு தட்டப்பட்டு, பேயாழ்வாரும் அங்கு வந்து இணைகிறார். மூவருக்கு நிற்க மட்டுமே இடம்.  ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்ள முடியாத காரிருள். மூப்பெரும் ஆழ்வார்களை ஒருங்கே இணைத்த இறைவன், தம் திருவிளையாடலைத் தொடர்ந்தார். 

நிற்க தாராளமாய் இடமிருந்தும், மூவரும் நெருசலுக்கு உட்பட, தம்முடன் இன்னும் ஒரு நபர் இருப்பதை உணர்ந்தனர். மூன்று பேர் மட்டுமே நிற்க முடிந்த இடத்தில் எப்படியோ நான்காமவரும்  இருக்கக் கண்டார். மின்னலொளியில், நான்காம் நபரின் திருமுகம்..

திவ்யமான பேரழகுடன் விளங்கியதைக் கண்டனர். உடனே இறைவனை உணர்ந்து பாடல்கள் பல பாடி துதித்தனர். 

தம்முடன் தங்கியிருந்த இறைவனைக் காண,  இருள் விலகி, கதிரவனின் வெளிச்சம் விளங்க வேண்டி, உடனே பொய்கை ஆழ்வார் இவ்வுலகை திருவிளக்க்காகவும், ஆழ்கடலை நெய்யாகவும், கதிரவனின் ஒளியை திரி கொண்ட தீபமாக பாவித்து 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று

எனப் பாடி துதித்தார்.

(இருளை நம் அறியாமைக்கும், பந்த பாசத்திற்கும், சுடரை முக்திக்கும் பக்திக்கும் ஒப்பிட்டு விளக்கலாம். )

(தொடர்வோம்) 

March 02, 2012

மரணத்திற்கு முன் சரணம்



இரு தினங்களுக்கு முன் பொதிகைத் தொலைகாட்சியில் வரும் "கண்ணபிரான் கதையமுதம்" நிகழ்ச்சியில் மிகவும் எளிமையான தத்துவம் ஒன்றை விளக்கினார் வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள்.

கீதையில் கண்ணன்

"என்னை நினைத்திரு...
மரண காலத்திலும் என்னை நினைத்திரு..
அப்படி நினைப்பவன் என்னையே வந்தடைகிறான்
"  என்கிறார்.


மரணத்தின் வாயிலில் நமக்கு பெருமானை நினைக்கும் பாக்கியம் கிட்டுமா என்றே தெரியவில்லை. முன்னமே இக்கருத்தினையொட்டி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மரணம் என்பது எப்படி எங்கு எந்த சூழ்நிலையில் நம்மை வந்தடையும் என்பதே புதிர். அத்தருணத்தில் நாம் சிந்தனையற்று இருக்கலாம். கேளிக்கையில் திளைத்திருக்கலாம். கைகால் விழுந்து கோமாவில் இருக்கலாம். மரணபயத்தில் பீடித்து இருக்கலாம். உற்றார் உறவினரின் நினைவில் நெகிழ்ந்திருக்கலாம். பாசத்தில் கட்டுண்டு இனி இவர்களை எங்கு காண்பேன் என்று கலங்கி இருக்கலாம்.

எத்தனையோ எண்ணற்ற நினைவுகளும் பயங்களும் வந்து போகும் நேரத்தில் இறைவனை நினைக்கும் பக்குவம் சிறந்த பக்தனுக்கே வருவது குறைவு. சாமான்யனுக்கு சொல்லவும் வேண்டுமா? சதா சர்வ காலம், இறைத் தியானத்தில் இல்லாத ஒருவன் இறுதி நேரத்தில் எவ்வாறு நினைக்க முடியும். இப்படி எல்லாம் சந்தேகம் எழுகிறது. போதாத குறைக்கு, இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்சையில் வாழ்வின் பாதி காலம் கழிந்து விடுகிறது.

நம்மை போன்றவர்களுக்காகவே ராமானுஜர், திருகச்சி நம்பிகளிடம், வரதராஜ பெருமானாக விளங்கும் ஸ்ரீமன்நாராயணனுக்கு கேள்வி அனுப்பினர். திருக்கச்சி நம்பிகளிடம் இறைவன் தினமும் பேசி உபதேசம் அளிப்பார். ராமானுஜர் அனுப்பிய ஆறு கேள்வியில் ஒன்று தான் "மரணத் தருவாயில் இறைவனை நினைப்பது அவசியமா?"

அதற்கு இறைவன்,. "உடல் நன்றாக இருக்கும் பொழுது நினைத்தாலே போதுமானது. என்னைச் சரணம் என்று பற்றியவனை அவனது இறக்கும் தருவாயில், நான் நினைத்து என்னிடம் சேர்த்துக்கொள்வென்" என்றாராம். அதாவது அவனை சரணம் என்று அடைந்துவிட்டால் நமக்காக அவனே நம்மை நினைத்து தன்னிடம் சேர்த்துக்கொள்கிறேன். என்னே கருணை!

"எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே." 

 என்றார் பெரியாழ்வார்.

மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன். 

 அப்படியெனில் மானின் மேல் இறுதிநாட்களில் மட்டுமே ஆசை வைத்த ஒரே செயலுக்கு ஏன் இறைவன் ஜடபரதரை மானாய் பிறக்கச் செய்தார்? இதற்குத் தான் வேளுக்குடி அவர்கள் சொன்ன விளக்கம் என்னை பெரிதும் நெகிழச்செய்தது.

பரதர் பக்தியோகம் கொண்டு பக்திபூண்டார். தம் முயற்சியினூடே பக்தியில் திளைத்திருந்தார். பக்தியோகத்தைத் தாண்டி எவன் ஒருவன் சரணாகதி என சரணம் கொள்கிறானோ, அதாவது, என்னை இட்டுச் செல்வதும் நீயே, உன்னையே சரணம் அடைந்தேன், என்று முழுவதுமாய் சரண் அடைந்தவனை இறைவன் இறுதிகாலத்திலும் உடல் நலிந்தோ, ஆசை மேலிட்டோ அவன் நினைக்காது போயினும் கூட தாமே நினைத்துச் சேர்த்துக்கொள்கிறார்.

பக்தி பூணுவோம். அதனையும் தாண்டி அந்த பக்தியைத் நமக்கு அருளவும் அவனையே சரணமும் அடைவோம்.