காலத்தின் கதியோடு
இயைந்தும் இணைந்தும்
குதித்தோடும் இளமைத் தமிழும்,
தமிழனும் தோற்றதில்லை!
குதித்தோடும் இளமைத் தமிழும்,
தமிழனும் தோற்றதில்லை!
சாதிமதங்கள் மறந்து
தமிழ் நுகரும் முதிர்ச்சியில்,
வேற்றுமை இல்லா ஒற்றுமை மலரும்
தமிழ்மணம் புவியெங்கும் கமழும்.
தமிழ் நுகரும் முதிர்ச்சியில்,
வேற்றுமை இல்லா ஒற்றுமை மலரும்
தமிழ்மணம் புவியெங்கும் கமழும்.
கற்கால சுவடுகள், சிற்பங்கள்,
பழம்பெருமை பறைசாற்றும் சித்திரங்கள்,
தொன்மொழி தமிழ்மொழி எனும் சான்றுகள்,
கலாச்சாரத்தை கண்ணாய் காக்கும் உயர் பண்பு,
இத்தனை பெருமைகளுடன்;
பழம்பெருமை பறைசாற்றும் சித்திரங்கள்,
தொன்மொழி தமிழ்மொழி எனும் சான்றுகள்,
கலாச்சாரத்தை கண்ணாய் காக்கும் உயர் பண்பு,
இத்தனை பெருமைகளுடன்;
பண்பின் சிகரங்களாக
நட்பின் இலக்கணங்களாக
தனிமனித ஒழுக்கத்தில்
தப்பற்றவர்களாக
தமிழெனன்றும் சொல்லி
தலை நிமிர்ந்து வெல்லுவோம்
நட்பின் இலக்கணங்களாக
தனிமனித ஒழுக்கத்தில்
தப்பற்றவர்களாக
தமிழெனன்றும் சொல்லி
தலை நிமிர்ந்து வெல்லுவோம்
-ShakthiPrabha
(Posted in eluthu dot com in 2018 for a contest)
(Posted in eluthu dot com in 2018 for a contest)
பண்பின் சிகரங்களாக
ReplyDeleteநட்பின் இலக்கணங்களாக
தனிமனித ஒழுக்கத்தில்
தப்பற்றவர்களாக
தமிழெனன்றும் சொல்லி
தலை நிமிர்ந்து வெல்லுவோம்/ நம்புவோம்
நம்பிக்கை ஒன்று தான் நிம்மதி தருகிறது.
Deleteசமீப காலங்களில் தொலைக்காட்சி விவாதங்கள் போன்ற சமூகத் தொடர்பு தளங்களில் தமிழ் மொழி பற்றி உரக்கப் பேசுவோர் 'ழ' 'ல' உச்சரிப்பில் பயிற்சி பெறாமல் இருப்பது ஒரு மொழியின் மேன்மையை எவ்வளவு சாதாரணாமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று புரிவதில் வருத்தமே மேலோங்குகிறது.
ReplyDeleteஉண்மை தான் சார்.
Deleteநன்றி ஜீவி சார், gmb Sir.
ReplyDelete