September 25, 2019

Lalitha Sahasranama (776 - 800) (தமிழ் மற்றும் ஆங்கில விளகத்துடன்)


Image result for Mandhara flowers red coral tree
Madhara Flower (Indian coral tree)





Vibhoothi Visthaaram 

Mandhaara Kusuma priyA;
Veera-AraadhyA;
Viraad RoopA;
VirajA;
VishvathO-mukhI;
Prathyag roopA;
ParaakashA;
PraaNadhA;
PraaNa RoopinI;
MaarthaaNda bhairava-aaradhyA;
ManthrinI Nyastha Raajyadhu:;
TripurEshI;
JayathsEnA;
Nisthrai guNyA;
ParaaparA;
Sathya-Gnanaanandha roopA;
Saamarasya paraayaNA;
KapardhinI;
KalamaalA;
Kaamadhukh;
Kaama RoopinI;
Kalaa nidhi;
Kaavya kalA;
RasagnA;
Rasa shEvadhI;

()
Mandhaara  = Mandhara flowers ( botanical name: Erythrina Indica 
                               Common Name: Indian coral tree)*
Kusuma =   flower - blossom
Priya = is fond of 

#776 Mandhaara-Kusuma-PriyA = She who is fond of Mandhara Flowers *

*Mandhara flower in sanskrit refers to Indian coral tree and is not the same Mandhara flower (மந்தாரை) referred in other languages (Tamil or malyalam) Indian coral tree is also regarded as tree of paradise.


()
Veera = Heroic - courageous
Aaradhya = is worshipped 

#777 Veera-aradhyA = Who is worshipped by the brave warriors *

* Courageous referred to those who has won the Ego, realised self and those who never fear. 


()
Viraad/Viraaj/Viraat = Cosmic - Universal(Gigantic) 
Roopa= Form 

#778 Viraad RoopA = Who has cosmic form (Macro) 

()
Raja = Dust - impurities
Vi = without 

#779 VirajA = She who is blemishless 

()
Vishwatah = in all directions  - everywhere
Mukha = Face

#780 ViswathOmukhi = She who has face in all directions (who has faces everywhere, who is represented by every face in the universe, ie omnipresent ) 

()
Prathyancha / Prathyagra = inward - inner - interior
Roopa = Form

#781 Prathyag-RoopA = Whose form is visible within (as inward self)  ie. realised within 

()
Para = another 
Parama = Supreme
Aakash = Ether - space

#782 ParakaashA = Who is the supreme space (ether)  (Subtlest cosmic form)


()
PraaNa = Life force - breath 
Dha = To give

#783 PraaNadhA = Who gives life


#784 PraaNa RoopiNi  = Who is the embodiment of PraaNa 

()
MaarnthaaNda-Bhairava = One of the sixtyfour Bhairavas * 
Aaradhya = to worship 

#785 MaarthaaNda-bhairava-AraadhyA = Who is worshipped by MarthaaNda-Bhairava

*Bhairavas are referred as Ashtanga bhairavas.They are grouped  as eight under each category (64 bhairavas) . There are also other interpretations, sources and explanations  from various scriptures about Bhairava.

()
ManthriNI = Minister - Name of One of her ministers
Nyastha  = fixed - applied
Rajya = Kingdom

#786 ManthriNi Nyashta RaajyadhOo = Who has entrusted the rule of the 'universal kingdom' to Manthrini 

()
Tripura = Three lokas
Ishi = Master (Mistress)

#787 TripurEshI  = Who rules Three lokas (tripura) *

* Tripura was the city governed by Asuras which was destroyed by Lord shiva (ignorance personified as cities). TRipura may also refer  to the three lokas of Brahma Vishnu and Shiva. 


()
Jayat - Jayati = To win or conquer 
Sena = Army 

#788 JayathSEna = She who has army which is ever-victorious 

()
Nis = Mostly prefixed to mean "away from" or "out of "
GuNa = Qualities
TriGuna = Three gunas viz Sathva, Rajasa , Tamasa

#789 Nisthrai GunYa = Who is beyond (devoid of) TriguNa (Sathvika Rajasa and Tamasa) 

()
Paraa = Superior- absolute
Aparaa = Inferior

#790 Para-aPara  = She who is both Para and Apara (inferior here means knowledge which is hidden in case of lower manifestations) *

#790 ParAparA = She who is parapara *

*Brahman with highest knowledge is paraa, as it continues to manifest its attributes become less pure. As Para it has highest attribute, as Apara it is inferior. Third form is para-para, which is neither superior nor inferior (Manifestations referring to midway hierarchy, or.. inferior deities with attributes)

()
Sathya = Truth
Gnaana = Knowledge
Aanandha = Bliss 

#791 Sathya Gnaanaanandha RoopA = Who is the embodiment of truth knowledge and bliss. 

()
Paraayana = devoted to- absorbed in
Saamarasya = Yoga - unification - in union and harmony

#792 Saamarasya ParaayaNA = Who is absorbed in union and harmony(with Shiva)    (equipoised with Shiva. Nama talks on highest union of Purush  and prakruthi )

()
Kapardin =  Having braided or knotted hair ie. Shiva

#793 KapardhinI = Wife of Shiva (Kapardin) 

()
Kalaa = art (Art forms)
Maala = Garland

#794 KalaamalA = Who wears all forms of Art as a Garland (all art forms  decorate her, praise her) 

()
Kaamadhuk = Bestower of desires
Kaamadhuk = Source of prosperity (of desires)

#795 Kaamadukh = Who grants desires 

#796 Kaama RoopiNi = Who takes any desirable form ( any form at will) 

()
Nidhi = Treasure - reservoir 

#797 Kala Nidhi = Who is the treasure-house of Arts (source from which forms of arts has sprung)

()
Kavya = Poetry
Kala = Art 

#798 Kavya-KalA = Who is the source poetic skills 

()
Rasa = Sentiment - Bhava - essence *
Gna = Gyaan -   Knowing

* Saundarya lahari states eight rasas. Natya shastras emphasise on eight rasas
which includes Love, Laughter, Anger, Compassion, Hatred, Wonder, Courage and Fear


#799 RasagnA = She who has knowledge of these bhavas (who is skilled to control  these rasas)


()
Sheavdhi = Treasury - Jewel 

#800 Rasa ShevadhI = She who is the treasury of Rasas (sourcE) 


(to Continue) 

லலிதா சஹஸ்ர நாமம் (776  - 800 ) 

64 Art forms


விபூதி விஸ்தாரம்

மந்தார குசுமப்ரியா;
வீர-ஆராத்யா;
விராட்ரூபா;
விரஜா;
விஷ்வதோமுகீ;
ப்ரத்யக்-ரூபா;
பராகாஷா;
பராகாஷா;
ப்ராணதா;
ப்ராண-ரூபிணீ;
மார்த்தாண்டபைரவ-ஆராத்யா;
மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதூ:;
த்ரிபுரேஷீ;
ஜயத்சேனா;
நிஸ்த்ரைகுண்யா;
பராபரா;
சத்ய-ஞானானந்த ரூபா;
சாமரஸ்ய பராயணா;
கபர்தினீ;
கலாமாலா;
காமதுக்;
காமரூபிணீ;
கலா நிதி;
காவ்யகலா;
ரசக்ஞா;
ரச-ஷேவதி;

()
மந்தாரா = மந்தார (மலர்கள்)  (botanical name: Erythrina Indica 
                     Common Name: Indian coral tree) *
குசும = பூ  - மலர்
ப்ரியா = ப்ரியமான

#776 மந்தார-குசும-ப்ரியா = மந்தார மலர்களை விரும்புபவள்

* சமஸ்க்ருதத்தில் மந்தார மலர் "Indian Coral tree" வகையை குறிக்கிறது.  நாம் தமிழில் குறிப்பிடும் மந்தாரை வேறு. 


() 
வீர = வீரம் - துணிவு
ஆராத்யா = போற்றப்படும்

#777 வீர-ஆராத்யா =  வீரர்களால் ஆராதிக்கப்படுபவள்  *

* பெருந்துணிவோடு அகங்காரத்தை வென்று ஆத்ம நிறைவை பெற்றவர்களை இங்கு வீரர்கள் என்று குறிப்பிடத்தகும். 

()
விராட்(d) / விராஜ் / விராட்(t) = அண்டம் - உலகளாவிய
ரூப = ரூபம்

#778 விராட் ரூபா = பிரபஞ்சத்தை ரூபமாகக் கொண்டவள் (மஹா ரூபம்)

()
ரஜ = அசுத்தம் - தூசு
வி = தவிர்த்த - இல்லாமல்

#779 விரஜா = அப்பழுக்கற்றவள் 


()
விஷ்வத: = எல்லா திக்குகளிலும் - எங்கும்
முக = முகம்

#780 விஷ்வதோமுகீ = எத்திக்கும் நீக்கமற முகம் தாங்கியிருப்பவள் (எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவள்)

()
ப்ரத்யஞ்சா / ப்ரத்யக்ரா = உள்முகமாக - உட்புறம்
ரூப = ரூபம்

#781 ப்ரத்யக்ரூபா = உள்முகமாக விளங்குபவள் (ஆத்ம விளக்கமானவள்) ie அந்தர்யாமி

()
பரா = இன்னொன்று
பரம = உயர்ந்த
ஆகாஷ் = வெளி - ஆகாசம்

#782 பராகாஷா = பரவெளியாக இருப்பவள் ( அண்டத்தின் சூக்ஷ்ம வடிவாக)


()
ப்ராண = உயிர் சக்தி = மூச்சு
தா = வழங்குதல் - தருதல்

#783 ப்ராணதா = உயிரளிப்பவள் (அனைத்து ஜீவராசிக்கும்  உயிரளிப்பவள்; பிராணசக்தியாக விளங்குபவள்)


#784 ப்ராண ரூபிணீ = பிராண வடிவானவள்

()
மார்த்தாண்ட பைரவா = அறுபத்துநான்கு பைரவர்களுள் ஒருவர் *
ஆராத்யா = ஆராதிக்கப்படும்

#785 மார்த்தாண்ட பைரவ-ஆராத்யா = மார்த்தாண்ட-பைரவரால் துதித்தேற்றப்படுபவள்

*பைரவர்களை அஷ்டாங்க பைரவர்கள் என்று குறிப்பிடுவர்.  ஒரு பிரிவில் எட்டு பைரவர்கள் என எட்டு பிரிவுகளாக அறியப்படுகிறார்கள் (அறுபத்தி நாலு பைரவர்கள்) . வேறு சில விளக்கங்களும் ஆதாரங்களும் பைரவர்களைப் பற்றி வேதநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

()
மந்த்ரிணீ = மந்திரி - அன்னையின் மந்திரிகளில் ஒருவர்
ந்யஸ்த =  வரையறுக்கபடுதல்  
ராஜ்ய = ராஜ்ஜியம்

#786 மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதூ = பிரபஞ்சமெனும் ராஜ்ஜியத்தின் ஆட்சிக்கு மந்திரிணியை நியமித்திருப்பவள் 

()
த்ரிபுரா = மூன்று உலகங்கள்
ஈஷீ =  தலைவி

#787 த்ரிபுரேஷீ = மூவுலகை ஆளுபவள் (த்ரிபுரா) *

* த்ரிபுரா என்ற நகரம் அசுரர்களால் ஆளப்பட்டது. அதை சிவனார் அழித்து தர்மம் நிலைனாட்டினார். (அறியாமை என்பதன் உருவகமே த்ரிபுரா) . த்ரிபுரா பிரம்மா, விஷ்ணு, சிவனின் ஆளுதலுக்குட்பட்ட மூவுலகம் என்றும் கொள்ளலாம்

()
ஜயத் - ஜயதி = வெற்றி கொள்ளல் - ஜெயித்தல்
சேனா = சேனை

#788 ஜயத்சேனா = சதாவெற்றி முழக்கமிடும் சேனையுடையவள்

()
நிஸ் = புறந்தள்ளி - ஒதுக்கி
குணா = குணங்கள்
த்ரிகுணா = முக்குணங்கள் , ie சத்வ, ராஜஸ, தாமஸ

#789 நிஸ்த்ரைகுண்யா = முக்குணாங்களுக்கு அப்பாற்பட்டவள்; அவற்றால் ஆட்படாதவள்

()
பரா = உன்னத - அதிஉன்னத
அபரா = கீழ்மை

#790 பராபரா = பர தத்துவமாகவும் அபரமாகவும் இருப்பவள் (அபரம் என்பது ஞானம் மறைக்கப்பட்டிருக்கும்   அறியாமையைக் குறிக்கும்) 

#790 பராபரா = பராபர தத்துவமாக திகழ்பவள் *

* பரப்பிரம்மம் உயர்நிலையில்  ஞானத்தின் இருப்பாக  திகழ்வது பரம். அதுவே சிருஷ்டியின் படிநிலைகளில் இறங்கும் போது மட்டுப்படுகிறது. பரம் உயர் தத்துவம், அபரம் கீழான அஞ்ஞான நிலை ( ஜீவனின் நிலை)  . இரண்டுக்கும் இடையே  தேவதைகளின் நிலைகளில் 'பராபரமாக' இருக்கிறாள். படிநிலைகளில்  நடுவாந்திர நிலை, உயர்வுமற்ற தாழ்வுமற்ற, பெரும் அஞ்ஞானத்திலும்  உழலாத இடைபட்ட நிலை. 


()
சத்ய = உண்மை
ஞான =  ஞானம் - சுத்த அறிவு
ஆனந்த = பேரானந்தம்

#791 சத்ய ஞானானந்த ரூபா = சத்தியம், அறிவு மற்றும் ஆனந்தத்தின் உருவகமானவள்

()
பராயணா = மூழ்கியிருத்தல் - ஈடுபட்டிருத்தல்
சாமரஸ்ய = யோகம்  -   இணக்கத்துடன் சங்கமித்தல்

#792 சாமரஸ்ய பராயணா = யோகமெனும் ஐக்கிய நிலையில் மூழ்கியிருப்பவள் (சிவனுடன் சமநிலையில் இணைந்திருத்தல். புருஷ பிரக்ருதியின் ஐக்கிய நிலை) 


()
கபர்தின் = முடைந்த - சடாமுடி ie சிவன்

#793 கபர்தினீ = சிவனின்(கபர்தின்)  பத்தினி



()
கலா = கலைகள் (கலா வடிவங்கள்)
மாலா = மாலை

#794 கலாமாலா = கலாவடிவங்களையே மாலைகளாக தரிப்பவள் (கலையம்சங்கள் அனைத்தும் அவளையே ஆராதிக்கின்றன)

()
காமதுக் = ஆசைகளை அருள்பவள் (பூர்த்தி செய்பவள்)
காமதுக் = சுபீஷத்தின் (ஆசைகள்) ஆதாரம் 

#795 காமதுக் = அபிலாஷைகளை அனுக்கிரகிபவள்

#796 காம ரூபிணீ = (சித்த சங்கலபத்தினால்) விரும்பிய ரூபம் தரிப்பவள் 

()
நிதி = பொக்கிஷம் = ஊற்று

#797 கலாநிதி = கலைகளின் இருப்பிடமானவள் - ஊற்று  (அனைத்து கலைகளின் ஆதாரம்

()
காவிய = கவிதை - காப்பியம்
கலா = கலைகள்

#798 காவ்ய கலா =  கவி காவிய வடிவங்களின் மூலமாக விளங்குபவள்

()
ரச = சுவை - சாரம் - மனோபாவம் * 
க்னா =  ஞானம் - அறிவு


*சௌந்தர்ய லஹரி எட்டுவித மனோபாவங்களை (ரசம்) அறிவிக்கிறது. நாட்ய சாஸ்திரமும், சிருங்காரம், ஹாஸ்யம், கோபம், காருண்யம், வெறுப்பு, ஆச்சர்யம், வீரம், பயம் என்ற  எட்டு வகையான ரசங்களை அபினயிக்கிறது. 

#799 ரசக்ஞா = மனோபாவங்களின் தன்மையை அறிந்தவள் (அதனை தன் வயப்படுத்தியவள்)

()
ஶேவதி =  கருவூலம் 

#800 ரச ஷேவதி = மனோபாவங்களின் கருவூலமானவள்


(தொடரும்) 



No comments:

Post a Comment