September 05, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (750-775) (with Tamil and English meanings)

பர்ணா - அபர்ணா ( ParNa - AparNa )


விபூதி விஸ்தாரம்

மஹாகாலீ;
மஹாக்ராஸா;
மஹாஷனா;
அபர்ணா;
சண்டிகா;
சண்ட-முண்டாசுர நிஷூதினீ;
க்ஷரா-அக்ஷர ஆத்மிகா;
சர்வ லோகேஷீ;
விஷ்வ தாரிணீ;
த்ரிவர்க தாத்ரீ;
சுபகா;
த்ரியம்பகா;
த்ரிகுணாத்மிகா;
ஸ்வர்க-அபவர்கதா;
ஷுத்தா;
ஜபாபுஷ்ப நிபாக்ருதீ;
ஓஜோவதீ;
த்யுதிதரா;
யக்ஞ ரூபா;
ப்ரிய-வ்ரதா;
துரா-ஆராத்யா;
துரா-ஆதர்ஷா;
பாடலீ குசுமப்ரியா;
மஹதீ;
மேரு நிலயா;


()
காலீ = துர்கையின் மற்றொரு பெயர் - அம்பிகையின் வடிவம் * 
(தமிழில் காளி என்று குறிப்பிடுகின்றனர்) 

மஹா = பெரிய - மகத்தான (மஹா என்ற சொல் மஹத் என்ற சொல்லிருந்து உருவானது) 

#751 மஹாகாலீ = அன்னை மஹாகாலீயாக (மஹாகாளி) விளங்குபவள் *

*   காலீ என்றால் கருமையான என்ற பொருள். அன்னை மஹாகாளி கருமை      நிறத்தவள் 

()
க்ராஸா =  கபளீகரம் செய்தல் - முழுங்குபவது 

#752 மஹாக்ராஸா = அனைத்தையும் விழுங்கிவிடுபவள் *


()
ஆஶனா = உணவு - உண்ணுதல் 

#753 மஹாஶனா = பெரு உணவு உண்ணுபவள் *

*            பிரபஞ்சத்தின் ஒடுக்க நிலையை குறிக்கிறது . உணவு என்பது      சிருஷ்டி.   ஒடுக்கத்தின் போது சிருஷ்டி அனைத்தும் அவளுள் அடக்கப்படும்.  அன்னை மஹாகாளி சிருஷ்டியின் லயத்திற்கு காரணமானவள். 


()
பர்ணா = இலைகளுடைய
அபர்ணா = இலைகள்  இல்லாத  

#754 அபர்ணா  = இலைகளற்ற கொடி போல் பரப்பிரம்மத்தை சுற்றி படர்ந்திருப்பவள் * 

அபர்ணா என்ற சொல்லுக்கு இந்த விளக்கம் காஞ்சி மஹாஸ்வாமிகளால் கொடுக்கப் பட்டிருக்கிறது. சதாசிவமான பரப்பிரம்மா (படைப்பு கடவுள் பிரம்மதேவன் அல்ல), இலைகளும் பூக்களும் கிளைத்த பசுமரமாக  இருக்கும் போது லலிதை இளம் தளிரென படர்ந்திருக்கிறாள். 

கிளைக்காத ஒடுக்க நிலையில் பார்வைக்கு பட்டமரம் போல் சிருஷ்டியின்றி அமிழ்ந்திருக்கும் போது, மூலசக்தியானவள் உறங்கு நிலையில் இலைகளற்ற கொடியாக பிரம்மத்தை சுற்றி படர்ந்திருக்கிறாள் என்பது புரிதல். 

#754 அபர்ணா = தேவி பார்வதி *

* பார்வதி தேவி சிவபெருமானை மகிழ்விக்க உண்ணாது தவமிருந்தார்.  சிறு இலையைக் கூட உண்ணாமல்  கடும் விரதமும் தவமும் கொண்டிருந்ததால், அவருக்கு அபர்ணா என்று பெயர். 

()
சண்ட =  கோபம்

#755 சண்டிகா = சண்டிகா தேவி  (துர்கையின் மற்றொரு வடிவம்) *

* சினம் மேலோங்கியிருக்கும் அன்னையின் இவ்வடிவம், தீஞ்செயல் புரிபவர்களை தண்டிக்கும் அவதாரம். 


()
சண்ட-முண்ட = அசுரர்களின் பெயர்கள் (சாமுண்டீஸ்வரியாக அன்னை வதம் செய்த அசுரர்கள்) 
நிஷூதித = கொல்லுதல்  - அழித்தல்

#756 சண்டமுண்டாசுர நிஷூதினீ = சண்ட முண்ட அசுரர்களை சம்ஹாரம் செய்தவள் *

* இருபெரும் அசுரர்களை வதம் செய்ததால் சாமுண்டீஸ்வரி என்று புகழப்படுபவள்

()
க்ஷர = அழியக்கூடிய - நிலையற்ற
அக்ஷர = அழிவற்ற - நிலையான
ஆத்மிகா = ஆதாரமான - அடிப்படையாக கொண்ட

#757 க்ஷர அக்ஷாரத்மிகா = நிலையற்றதும் நிலையானதுமான தன்மை கொண்டவள் ( நிலையற்றதான மாயா சக்தி, நிலையானதான பரப்பிரம்மம் இரண்டின் சாரம்ஸம் அவளே)


()
சர்வ = எல்லாமும்
லோக = லோகங்கள்
ஈஷீ = ஈஸ்வரீ

#758 சர்வ லோகேஷீ = அனைத்து புவனங்களிலும் தனது ஆட்சியை செலுத்தும் ஈஸ்வரீ. 



()
விஷ்வ = பேரண்டம் - அகிலம்
தாரண = தாங்கியிருத்தல்  

#759 விஷ்வ தாரிணீ = பிரபஞ்சத்தை தாங்கியிருப்பவள்;   ஆதாரமாக விளங்குபவள்.


()
த்ரி = மூன்று 
வர்க = குழு - பிரிவு 
த்ரி வர்க = மூவகை
தாத்ரீ = வழங்குதல் 

#760 த்ரிவர்க தாத்ரீ = மூன்று வகையான குறிக்கோளுக்கு துணை நின்றருள்பவள் * 

* நான்கு புருஷார்த்தங்கள் (இலக்கு) ஜீவர்களுக்கு சொல்லுவதுண்டு.  தர்ம, அர்த்த, காம மோக்ஷம் என்பதே அவை. மோக்ஷத்தை முந்தைய நாமங்களில் பார்த்துவிட்டதால் அதை விடுத்து மூவகை லட்சியத்தை  நல்குபவளாக அன்னை போற்றப்படுகிறாள். தர்மம் என்பது நல்வழிப்பாதை, செயல்பாடு சிந்தனைகளையும், அர்த்தம் செல்வ வளத்தையும் காமம் அபிலாஷைகளையும் குறிக்கும். 

()
சுபகா =    நன்மை நல்கக்கூடிய

#761 சுபகா =  செழிப்பு,  நலம், பெருவளம்  முதலியவற்றின் ஜீவநாடியாக திகழ்பவள் 

()
அம்பகா = கண்கள்
த்ரி-அம்பகா = மூன்று கண்கள் (உடைய)

#762 த்ரியம்பகா = முக்கண் உடையவள் (மூன்றாம் கண் என்பது  சச்சிதானந்த நிலையையும் ஞானத்தையும் வலியுறுத்தும்) 

()
த்ரிகுணா =  மூன்று குணங்கள்
ஆத்மிகா = ஆதாரமாகக் கொண்ட

#763 த்ரிகுணாத்மிகா = முக்குணங்களின் சாரமாக விளங்குபவள் *

* சாத்வீகம், ராஜசம் தாமஸம் ஆகிய மூன்று குணங்களின் சாரம். சாத்வீகம்- சாந்தம், தயை, கருணை, பொறுமை முதலிய குணங்கள் ராஜஸம் - சினம், பொறாமை, வேகம், ஆசை, புலனின்பங்கள் அனைத்தும் தாமஸம் - தூக்கம், சோம்பல், அசிரத்தை, மெத்தனம் முதலிய குணங்கள் அடங்கியது. 

() 
ஸ்வர்க = ஸ்வர்க லோகம்
அபவர்க = முக்தி- பரமானந்தம்
தா = தருதல்

#764 ஸ்வர்காபவர்கதா = சுவர்கலோகத்து இன்பமும்,  இறுதியில் முக்தியும் நல்குபவள் 

()
ஷுத்த =  சுத்தம் 

#765 ஷுத்தா = தூய்மை,  புனிதம் முதலியவற்றின் உருவகமானவள் 

()
புஷ்ப = பூ
ஜபாபுஷ்ப = செம்பருத்திப்பூ
நிப = ஒன்று போன்ற   - ஒரே சாயல்
ஆக்ருதி - தொற்றம் 

#766 ஜபாகுஸும நிபாக்ருதீ  = செம்பருத்திப்பூவைப்  போன்றவள் ( செந்நிறம் கொண்டவள் என்று தியான ஸ்லோகம் வர்ணிக்கிறது) 

()
ஓஜஸ் = வலிமை - ஆற்றல் - உயிர்சக்தி
ஓஜதி = வலிமையுடைய - ஆற்றல் நிறைந்த 

#767 ஓஜோவதீ = பேராற்றல்  பொருந்தியவள்


()
த்யுதி = காந்தி - பிரகாசம்
தர = உடைத்தாகி இருக்கும் - கொண்டிருக்கும் 

#768 த்யுதிதரா = சுடரொளியென மிளர்பவள் 


()

யக்ஞ = யக்ஞம் - அர்ப்பணிப்பு - யாகம்
ரூப = வடிவம் 

#769 யக்ஞரூபா = யாக யக்ஞங்களில் நடைபெறும் வழிபாடு, பூஜை, நிவேதனம்  மற்றும்  உயர்ந்த காணிக்கைகளின் வடிவானவள்

()
ப்ரிய = பிரியமான
வ்ரதா = விரதங்கள் - புனித அனுஷ்டானங்கள் 

#770 ப்ரியவ்ரதா = உயரிய விரதங்களினால் பிரீதியடைபவள்

()
துராராத்ய = துதிப்பதற்கு கடினமான
ஆராத்ய = துதித்தல் - போற்றுதல் 

#771 துராராத்யா = வழிபடுவதற்கு அரியவள் (கிரகித்தற்கு அரிதானவள் ; எளிதில் வசப்படாதவள்)

()
ஆதர்ஷா = ஆளுதல் 

#772 துராதர்ஷா = வெல்லுதற்கு அரியவள் (கட்டுப்படாதவள்) 

()
பாடலீ = பாதிரி  மரம்
குசும = மலர்
ப்ரியா = பிரியமான 

#773 பாடலீ குசுமப்ரியா = பாதிரி மலர்களை விரும்புபவள் - அம்மலர்களால் கவரப்படுபவள்

"Bignonia Suaveolens" என்று தாவரவியலில் அறியப்படும் மரம்/மலர். இம்மலரை பாதிரி மலர் என்றும் மரத்தை பாதிரி மரம் என்றும் தமிழில் குறிப்பிடுகின்றனர்.


#774 மஹதீ = பிரமாண்டமானவள் -அளப்பரியவள் * 

* சாங்கிய தத்துவத்தில், புருஷ பிரக்ருதியின் முதன்மை பரிமாணமாக "மஹத்" அறியப்படுகிறது. அன்னை, 'மஹத்' தத்துவமாகி நிற்பவள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

()
மேரு = மேரு மலை
நிலயா = நிலைபெற்றிருப்பவள் 

#775 மேரு நிலயா = மேரு மலையில் வாசம் செய்பவள் 

(wiki: Mount Meru (Sanskrit: मेरु), also recognized as Sumeru, Sineru or Mahāmeru, is the sacred five-peaked mountain of Hindu, Jain, and Buddhist cosmology and is considered to be the center of all the physical, metaphysical  and spiritual universes.) 

(தொடரும்) 


*********************************************************************
Image result for Padri tree
Padri Tree (flower) -பாதிரி புஷ்பம்
Lalitha Sahasranama (750-775) 


Vibhoothi Visthaaram 


Mahaa-kaalI;
Mahaa-graasA;
Mahaa-shanA;
AparNA;
ChandikA;
Chanda-Munda-asura NishoodhinI;
Kshara-akshara-athmikA;
Sarva LokEshI;
Vishva DharinI;
Thri-varga Dhathri;
SubhagA;
ThryambakA;
ThriguNaathmikA;
Swarga-apavargadhA;
ShuddhA;
Japaa-pushpa NibhaakruthI;
OjovathI;
DhyuthidharA;
Yagna RoopA;
Priya-vrathA;
Dhura-aaradhyA;
Dhura-adharshA;
PaatalI Kusuma PriyA;
MahathI;
Meru NilayA;

()
kaali = Another name of Durga - Another form of Divine mother 
Mahat =  great - huge (Word Maha derived from Mahat)

#751 Mahaa-kaali = She who is the Glorious Kaali (Divine Mother Kaali) 

()
graasa = to swallow -  swallow up

#752 Mahaa-grasA = Who consumes everything  - Who is Greatest devourer *

()
ashanaa = Food-Eating

#753 Maha-ashanA = Who is the greatest eater - Great consumer of food *

* Swallowing or eating refers to dissolution or merging of creation into singularity. Food refers to creation. All that is created is swallowed or eaten up. Maa kaali is the reason behind dissolution of the creation.

()
parna = consisting of leaves
AparNa = leafless 

#754 AparNA = Who is like the leafless climber holding onto parabrahma 
during the state of equilibrium. * 

* This Explanation is given by Kanchi Mahaswami Chandrasekara swamigaL. When Sadashiva (Parabrahma) takes the form of fully grown lustrously green, flowering tree, then Lalithambika becomes a tender beautiful green climber upon the tree. (creation with its wings) 

Similarly when Sadashiva (Parabrahma) is depicted as a 'seemingly lifeless tree' with dormant energy (primordial form) she spreads upon parabrahma like the climber without leaves (aparNa) 


#754 AparNA = Who is Goddess Parvathi *

*who took upon tough penance to please shiva, wihtout eating anything including even a  single leaf- hence she was praised as AparNa  

()
Chanda = angry 

#755 ChandikA = She who is Chandika (Form of durga) *

* Ferocious form of Divine mother, Who admonishes sinners.


()
Chanda-Munda = Asuras (Divine took the form of Chamundeshwari to kill these Asuras) 
Nishooditha = To kill - slay

#756 Chanda-munda-asura NishoodhinI = She who slayed Asuras Chanda and Munda 

()
Kshara = perishable 
Akshara = imperishable
aathmika = characterised by - is based upon 

#757 Kshara-akshara AthmikA = She who is of the nature of both perishable and imperishable. (of maaya (perishable) and brahmam (imperishable)


()
Sarva = every  (all) - each 
Loka = world / region 
Ishi(tha) = Goddess - commanding supremacy (Ishwari) 

#758 Sarva LokeshI = Who rules and exhibits supremacy every where. Who is the Eshwari of all worlds. 

()
Dharana = Holding - bearing 
Vishva = Universe

#759 Vishva DharinI = She who  supports i.e. protects the Cosmos

()
Tri = Three
Varga = Type- group - division * 
Tri varga = Three types * 
Dhathri = to give - bestow 

#760 Trivarga DhathrI = She who grants(fulfills) the three types of human pursuits. 

* Four primary goals  (purusharthas) sought by the jeeavs are Dharma artha kaama and mOksha. Moksha is excluded because it was mentioned in earlier naamas. Excluding Moksha
other three types are mentioned in this naama. Dharma is righteousness, ARtha relates to  wealth   and Kaama deals with wishes and desires.

Subhaga =  Fortunate - Pleasing - Prosperous

#761 SubhagA = Who epitome of Good fortune and prosperity.

()
Ambhaka = eyes 
Tri=ambaka = Three eyes 

#762 ThryambhagA = She who is three eyed (Third eye denotes higher consciousness ie Enlightened state) 


#
Tri-guNa = Three qualities (Sathva- Rajasa - Thamasa) 
Athmika = is based upon 

#763 TriguNathmikA = Who is the essence of three Gunas ie three nature of the jeeva (Sathvic, Rajasic and Thamasic) *

*Sathvic characteristics predominantly involves calmness, peace, love, virtue goodness and the likes 

Rajasic qualities are worldly pleasures, desires, restless mind, uncontrolled senses etc

Ignorance, lethargy, dullness, sleep,lack of enthusiasm etc can be categorised under Thamasic qualities.

()
Swarga = Heaven
apavarga = Final liberation
dha = granting - causing 

#764 Swargaapa-vargadhA = Who grants pleasures of heaven and the final ecstasy.

()
Shuddha = purity- clean - true

#765 ShuddhA = She who is the personification of all that is pure 


()
pushpa = Flower 
Japaa-pushpa = Hibiscus Flower 
nibha = similar = resembling 
akrithi = appearance - form 

#766 Japapushpa Nibhakrithi = Whose appearance is akin to Hibiscus flower ( Her complexion is crimsom red - refer to Dhyana verses) 

()
Ojas = Vitality - vigour
Ojayathi = having vital power - being strong

#767 OjovathI = Who is full of vitality 

()
Dhyuthi =  Gleam - shine 
dara = contain - possess

#768 DhyuthidarA = Who emits radiance - Who sparkles with lustre

()
yagna = Sacrifice - offering 

#769 Yagna RoopA = Who personifies Supreme sacrifices, offerings and worship. 

()
Vrathaa = undertaking Vows  - holy observances
Priya = is fond of

#770 Priya-VrathA = Who is fond of  pious practices and vows 

()
Aaradhya = to worship-rever
Dhuraaradhya =  is difficult to worship

#771 DhuraaradhyA = Who is difficult to worship (rare to grasp) 

()

Adharshaa = to control 

#772 Dhura-adarshA = Who is difficult to be conquered


()
PaatalI = paatali tree (Paadri tree) 
Kusuma = flower
Priya = is fond of 

#773 PaatalI kusumapriyA = Who is fond of  Patali flower*

*Botanical name is Bignonia Suaveolens is known as Paadhri in hindi and பாதிரி in tamil. 

#774 MahathI = She who is great, huge and unlimited *

* In samkya philosophy Mahat is one of the earliest evolution from purush and prakruthi. The nama can also be interpreted as who is in the form of "Mahat"



()
Meru = Mount Meru 
Nilaya = stays put 

#775 Meru NilayA = Who resides in Meru mountain


(wiki: Mount Meru (Sanskrit: मेरु), also recognized as Sumeru, Sineru or Mahāmeru, is the sacred five-peaked mountain of Hindu, Jain, and Buddhist cosmology and  is considered to be the center of all the physical, metaphysical and spiritual universes.) 

(to Continue) 

No comments:

Post a Comment