December 31, 2018

திருமழிசை ஆழ்வார்




ஸ்ரீமன் நாராயணனின் சுதர்சனசக்கரத்தின் அவதாரமாக கொண்டாடப்படுகிறார் திருமழிசை ஆழ்வார். பார்கவ முனிவருக்கும் அவர் பார்யாளுக்கும் புத்திரனாக பிறந்தாலும் பிண்டமாக ஜனன உரு கொண்டிருந்து, பின்னர் இறையருளால் கைகால் வரப்பெற்று அழகிய குழந்தை உருவானது. திருவாளன் என்பவரால் வளர்க்கப்பட்டார். இவர் தம் பெருமை அறிந்த ஒரு வேளாளர் தம்பதியினர் அன்றாடம் பாலமுதளித்து வந்தனர். அன்புடன் அளித்த பாலமுதை உண்டு அவர்களின் முதுமை நீக்கி இளமையருளினார். அவர்கள் பிள்ளையான கணிக்கண்ணனை தம் சீடராக்கிக்கொண்டார்.

கணிக்கண்ணனை பல்லவ மன்னன் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க, சீடனில்லா ஊரில் தாமும் இருக்கவேண்டாமென அவருடன் புறப்பட்டார் ஆழ்வார். கூடவே அங்கு பள்ளி கொண்ட பெருமாளை நாகப்பாயைச் சுருட்டி தங்களுடன் வரப் பணித்தார். பின்னர் தவறிழைத்ததற்கு அம்மன்னனும் மிக்க வருந்தி இருவரையும் அழைக்கவே, கூடவே பெருமாளையும் தம்முடன் மீண்டும் அழைத்து வந்தார் வீட்டார். அவர் சொன்ன வண்ணம் பெருமாள் செய்ததால், சொன்ன வண்ணம் செய்த பெருமாள். ஒரு இரவு தங்கியிருந்த இடம் ஒர் இரவு இருக்கையாகி பின்னர் ஓரிக்கையானது.

சைவம், சமணம் பௌத்தம் என்ற வழிவகைகளையும் ஆராய்ந்தவர், இறுதியில் பேயாழ்வாரை தமது ஆசிரியர் ஆக்கிக்கொண்டு வைணவம் தழுவினார். மற்ற மூவரும் ஹரியையும் ஹரனையும் சமமெனக் கருதி பாடல் இயற்றியிருந்தாலும், இவரே பெருமாளை உயர்த்திப் பிடித்தவராவார். இவர் எழுதிய நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் திவ்யபிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள முத்துக்கள்.

1 comment:

  1. ஃபான்டசி கதைகள் நிறையவே கேட்கிறேன்

    ReplyDelete