ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழர். வாணிபத்தில் பெரும் பொருளீட்டி அப்பொருளையெலாம் சிவனடியார்கள் தொண்டில் செலவிட்டார். சிவனடியார்க்கு அமுதும், ஆடையும் கோவணமும் அளித்தருளி சேவை செய்தார்.
சோதித்த பிறகே அருள் சுரக்கும் பெருமானும், திருவிளையாடல் புரிந்தார். சிவனடியாராகத் தோன்றி அவர் கோவணத்தை பாதுகாப்புடன் வைத்திருக்கக் கோரி நீராடச் சென்றார். கோவணத்தை மறையச் செய்து நாயன்மாரை பரிதவிக்கச் செய்தார். அவர் இழப்பிற்கு ஈடுசெய்யும் பொருட்டு, தராசில் அவர் கொணர்ந்த கோவணத்திற்கு இணையாக வேறு ஆடைகள் மற்றும் கோவணங்கள் வைத்தும் தட்டு சமன்படவில்லை. பொன்னும் பொருளும் கொட்டியும் தட்டு சமன்படவில்லை. அமர்நீதி நாயனார் அவர் மனைவி மகனையும் தராசில் வைத்தார். தட்டு அசைந்து கொடுக்கவில்லை. இறுதியாக சிவநாமத்தை ஜபித்து அவரே தராசில் ஏறி அமர்ந்தார். தட்டு இளகிக் கொடுத்து சமநிலைப் பட்டது. வந்திருந்த உமாபதி, உமையவளுடன் காட்சி தந்து, தராசையே விமானமாக்கி அடியாரின் குடும்பத்திற்கு சிவலோகப் பிராப்தியருளி முக்தியளித்தார்.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment