விற்றுப் போகாத பொருட்களுடன்
அதே வீதியில் தான்
அவளும் அமர்ந்திருந்தாள்
நுகர்வோரெல்லாம்
முட்டி மோதி
அவரவர் ஆசைக்கு ஆடை அணிவித்து
களி நடனமாடியபடி
மாடிகளில் வழிந்து
தரையெங்கும் தட்டிமுட்டி
வெவ்வேறு கோணங்களில்
பளபளக்கும் கண்ணாடி மாளிகைகளுக்கே
முந்திக்கொண்டிருந்தனர்.
பண்புள்ள பழஞ்சரக்கோ
எழிலாடையின்றி கிழிந்திருந்தது
அவள் விற்றுப்போகா குவியலின் பக்கம்
ஒரு தலையும் திரும்பவில்லை.
-ஷக்திப்ரபா
பல நேரங்களில் பதிவுகளும் கொள்வாரின்றி சீண்டுவார் இன்றி இருப்பதை நினைவு படுத்தியது
ReplyDeleteஆமாம். சார். அதுவும் தான். அதிக நேரமின்மையால் பதிவு மட்டும் இட்டு விட்டு செல்லும் பலருக்கும் வாசகர்களும் வெகு சொற்பம். நாம் அவர்களின் பதிவுகளை வாசித்தால் அதற்கு பிரதி உபகாரமாக நம் பதிவை வாசித்து செல்வோரே அதிகம்.
ReplyDelete