March 19, 2019

விழியில் விழுந்த விதை (ரியாத் கவிதை போட்டி)


ரியாத் கவிதை போட்டிக்காக சென்ற வருடம் எழுதியது:  பதினைந்து போட்டிக்குறிய தலைப்பில் நான் எழுதிய தலைப்பு  "விழியில் விழுந்த விதை"




**************************
விழியில் விழுந்த விதை
**************************

பிறப்பு முதல் இறப்பு வரை
பாலுண்ணும் போது துவங்கி
நிலம் கொள்ளும் வரை
பதிவுக் காட்சிகளாய் நடப்படும் நாற்று

துன்பம் சேர்த்து புடம் போடும் வித்துக்கள்
இன்பம் பெருகி
இதமாய் மணம் பரப்பி
இதயத்தில் தூவப்படும் நெல்மணிகள்

வாழ்வின் பயணத்தை மேலேற்றும் உந்துதல்
தாழ்விலும் நலம்சேரும் என நம்புதல்
இறுகப் பற்றும் நட்பின் கரங்கள்
இறுக்கிப் பிடிக்கும் பணிச் சுமைகள்

மாற்றுத் திறனாளிகளின் தளரா உழைப்பு
மாந்தர்கெல்லாம் பயன் தரும் சேவகர்
துளி நீரை சேமித்து
செடிகட்க்கு உயிரூட்டும் விவசாயி

கற்ற பாடங்கள் அதனை
விற்கும் மோசங்கள்
ஊழலில் புரளும் ஆசாமிகள் - கடும்
சூழலிலும் கொள்கை காக்கும் வீரர்கள்

தாய் தந்தை பரிவு
நோய் தந்த பிரிவு
இறையை நோக்கிய பயணம்
இல்லார்க்கு ஈயும் பெருங்குணம்

துளித் துளியாய் சேமித்த பதிவுகள்
எதிர்மறையாய் சில
நேர்முகமாய் பல

விழியில் தெறித்து உள் விழுந்த விதைகள்
வேரூன்றி அழியா காட்சியாய்
படமாக்கப்பட்டவை;
பாடமாக்கபட்டவை.
ஒவ்வொரு விருட்சமும் வளரும்..
அனுதினமும் பரந்து விரியும்..


March 14, 2019

லலிதா சஹஸ்ரநாமம் (429 - 435) (with English meanings)





பீடங்களும் அங்க தேவதைகளும்


நி:ஸ்ஸீம மஹிமா;

நித்ய யௌவனா;

மத ஷாலினீ;

மத கூர்ணித ரக்தாஷீ ;
மத பாடல கந்தபூ: ;
சந்தன த்ரவ திக்தாங்கி;
சாம்பேய குசுமப் ப்ரியா;
()
நி:ஸ்ஸீம = எல்லையில்லாத
மஹிமா = மகிமை

#429 நிஹ்ஸ்ஸீம மஹிமா = அளவற்ற மகிமையுடையவள்

#430 நித்ய யௌவனா = நித்திய இளமையுடன் திகழ்பவள்

()
மத = களிப்பு - குதூகலம்
ஷாலினீ = ஷாலதே என்றால் மின்னுதல் - (ஷாலினீ என்ற பெயர் ஷாலதே என்ற வார்த்தியிலிருந்து தோன்றிய பிரயோகம்) or
ஷாலினீ = அடைதல் - கொள்ளுதல். ( முன் பிரயோகிக்கும் சொல்லைப் பொருத்து பொருள் வேறுபடும்)


#431 மத ஷாலினீ = பெருமகிழ்ச்சியில் மிளிர்பவள்


() 
கூர்ணித = சுழற்றுதல் - உருட்டல் - நகர்த்தல்
ரக்த = சிவந்த நிறம்
அக்ஷி = கண்கள்


#432 மத கூர்ணித ரக்தாஷீ = பிரம்மானந்தத்தின் உவப்பு மேலிட, சிவந்த கண்களை சுழற்றுபவள்


()
பாடல = இளஞ்சிவப்பு
கந்த = கன்னங்கள்
பூ: = இருக்கபெற்ற - உடைய


#433 மத பாடல கண்டபூ = பேருவகையினால் மெருகேறிய ரோஜா-நிறக் கன்னங்களை உடையவள்

()
திரவ = களிம்பு / திரவம்
திக்த = தடவியிருத்தல்
அங்க = உடலின் ஒரு பாகம்

#434 சந்தன த்ரவ திக்தாங்கீ = சந்தனத்தை மேனியெங்கும் பூசியிருப்பவள்

()
சாம்பேய = சம்பக மரம்
குசும = மலர்

#435 சாம்பேய குசுமப்ரியா = சம்பக மலர்களை நேசிப்பவள்

(தொடரும்)



Lalitha Sahasranama (429 - 435)


Peetas and Anga Devatas


Nihseema Mahima;
Nithya Yowvana;
Madha shaalini;
Madha ghoornitha Rakthakshi;
Madha paatala ghandhabhu: ;
Chandana Drava dhigdhangi;
ChampEya kusuma priya;


()
Nisseema = unbounded
Mahima = greatness

#429 Nisseema Mahima = Whose glories are vast and infinite


#430 Nithya Yauvana = Who is eternally youthful


()
Madha = passion - excitement
Shalini = Shalathe is to shine (shalini derived from shalith) ...or
Shalini = to have, possess ( meaning varies depending on the word that precedes)


#431 Madha Shalini = Who shines with ecstasy / Who is filled with joy (ecstasy) *

()
ghoorNith = moving to and fro, roll about
Raktha = red
akshi = eyes


#432 Madha GhoorNitha Raktha-akshi = Whose eyes whirl (inward) in bliss *


()
Paatala = pale red
Khandha = cheeks
bhuh = being - becoming


#433 Madha paatala ghandhabhu: = whose joy is radiated in her rosy cheeks


()


Chandana = sandalwood
Drava = fluid - liquid
Dhigdha = anoint - smear
anga = part of the body


#434 Chandana Drava Dhigdhaangi = Whose body is smeared with sandal paste

()
ChaampEya = champangi plant
Kusuma = flower


#435 ChampEya Kusuma Priya = Who is fond of Champaka flowers


(to Continue)

லலிதா சஹஸ்ரநாமம் (421 - 428) (with English meanings)





பீடங்களும் அங்க தேவதைகளும்


வியாஹ்ருதி: ;
சந்த்யா ;
த்விஜ-வ்ருந்த நிஷேவிதா ;
தத்வாசனா ;
தத் ;
த்வம்: ;
அயி: ;
பஞ்ச கோஷந்த்ர ஸ்திதா ;

()
வியாஹ்ருதி = வார்த்தைகள் - உரை - பேச்சு
வியாஹ்ருதி = ஏழுலகங்களின் திவ்யப் பெயர்களின் உச்சரிப்பு
(பூ: புவ: சுவ: மஹ ஜன: தப: சத்யம்)

* முதல் மூன்று உலகங்களின் பெயர்களே காயத்ரி மந்திரத்தின் முதல் மூன்று வார்த்தைகள்) ("ஓம் பூர் புவ: சுவஹ என்பது காயத்ரி மந்திரத்தின் துவக்கம்)

#421 வியாஹ்ருதி: = காயத்ரி மந்திரத்தின் தெய்வீக உச்சரிப்பில் உள்ளுரைபவள்


#421 வியாஹ்ருதி: = தெய்வீக சொற்களின் ஆற்றாலாய் திகழ்ந்து சிறப்பிப்பவள்

()
சந்த்யா = அந்தி அல்லது சந்தி எனும் பொருள் வழக்கு . இவ்விடத்தில், சந்தித்தல் - கூடுதல் - கலப்பு என்று கொள்ளலாம்


#422 சந்த்யா = ஜீவ-பரமாத்ம ஐக்கியத்தின் சாரமாகியவள் *
( ஜீவ-பரமாத்ம சங்கமத்துக்கு காரணமாக விளங்குபவள். )


()  
த்விஜ = இரு பிறப்புடையோர்
வ்ருந்த = கூட்டம்
நிஷேவிதா = கௌரவிக்கப்படுதல் - உபசரிக்கபடுதல்

#423 த்விஜ வ்ருந்த நிஷேவிதா = உயர்ந்தோரால் துதித்தேற்றப்படுபவள் *
( த்விஜ என்பது இரு பிறப்புடையாரை குறிக்கும் சொல். ஒரு ஜீவன் பூவுலகில் கொணரும் ஸ்தூல உடலுக்கான பிறப்பை முதற் பிறப்பென்றும், பின்னர் இறைப்பாதையை நிர்ணயித்து அதன் வழி நடக்குங்கால் அதனை இரண்டாம் பிறப்பென்றும் கொள்வது மரபு. த்விஜ-வ்ருந்த எனும் சொல், பிறந்து பின் ஆன்மீகப் பயணத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெரியோர்கள் அத்தனை பேரையும் குறிக்கும். )
()
தத்வ = தத்துவங்கள்
ஆசனா - இருத்தல்

#424 தத்வாசனா = தத்துவங்களில் நிலைபெற்றிருப்பவள் *


( பஞ்ச பூதங்கள் , ஐந்து ஞானேந்திரியங்கள் , ஐந்து கர்மேந்திரியங்கள் , பஞ்ச-தன்மாத்திரைகள் அந்தகரணம் நான்கு ( மனம், புத்தி, அகங்காரம், சித்தம்) இவையே 24 ஆன்ம தத்துவங்களாக சொல்லப்படுகிறது )


()
தத் = அது

#425 தத் = அது(வும்) ஆனவள் - அதுவாக இருப்பவள் * (உயர் தத்துவமான பிரம்மம்)

( * அது என்பது சுட்டிக்காட்டபடும் "எதையும்" சார்த்தவள் - எல்லாமுமானவள் - உயர்ந்த தத்துவமான பரப்பிரம்மத்தை குறிக்கும் )


() த்வம் = நீ

#426 த்வம் = உன்னிலும் உள்ளொளிர்பவள் - நீயாகவும் இருப்பவள் *

( * உன்னிலிருப்பவள் . ' நீ ' எனும் சொல் அனைத்து ஜீவராசியையும் விளிக்கும் சொல். ஆகவே அனைத்துமானவள் )

()
அயி = மாதா

#427 அயி = பிரபஞ்சத்திற்கு அன்னையாகி அருள்பவள் *

(* பிரபஞ்சமே அவளிலிருந்து புறப்பட்ட துகளென்பதால், அனைத்திற்கும் தாய் )

()
பஞ்ச = ஐந்து
கோஷ = உறை - கோசம்
அந்தர = உள்ளில்
ஸ்திதா - நிலைபெற்று

#428 பஞ்ச கோஷாந்தர ஸ்திதா = பஞ்ச கோசங்களை ஊடுருவி உறைபவள் *

( *அன்னமய கோசம் (ஸ்தூல சரீரம்) ப்ராணமய கோசம், மனோமய கோசம் (சூக்ஷ்ம சரீரம்) விஞ்ஞானமய கோசம் , ஆனந்தமய கோசம் (காரண சரீரங்கள்) என்பனவாம். _

(தொடரும்)


Lalitha Sahasranama (421 - 428)

Peetas and Anga Devatas


Vyahruthi;
Sandhya;
Dwija Vrinda Nishevitha;
Tatwasana;
Tat;
Tvam;
ayi;
Pancha Koshaanthra Sthitha ;

()
Vyaahruthi = words - speech
Vyaahruthi = mystical utterances of the name of seven worlds
(bhur bhuvah suvah mahah janah tapa sathyam)

(* Great Vyaahruthi are the first three worlds (bhur bhuvah suvah mentioned in Gayathri mantra))


#421 Vyaahruthi = Who presides the mystical utterances in Gayathri mantra


#421 Vyaahruthi = Who presides the sacred words - who is the power of sacred words

()
Sandhya = generally twilight. Here it may mean, union - juncture - meeting point

#422 Sandhya = She is the union of Jiva-Paramatma. *
(* Who forms the Integration of Jiva and Ishwara. Who is the cause of Mukthi of Bonded Jivas.)

()
Dwija = Twice born
Vrinda = bunch - cluster
Nishevitha = honoured -served

#423 Dvija-vrinda Nishevitha = Who is worshipped by the group of sacreds and the wise *

(* Dvija here means 'twice-born' Jivas. A Jiva is born once in the physical plane and born again when it moulds its path to seek the higher. Therefore Dvija-Vrndas are those who attune themselves to spiritual walk of life.)

()
Tatva = principles
aasana = abiding - stays

#424 Tatvasana = Who dwells or is present in the principles

(* five basic elements, five subtle elements (pancha thanmatras)
Gnaanendriyas, Karmendriyas, Antahkarana ( mind, intellect, ego and chit together called antahkarana) forms the 24 tatva elements)

#425 Tat = She who is That *

 (*That embraces "everything" that can be referred / objectified )

()
Tvam = you

#426 Tvam = Who is you *
(* who resides in you. Everybeing is referred as "you"; who resides in every being. )

()

Ayi = Mother

#427 Ayi = Who is The Mother *
(* Mother of the entire universe; from whom everything sprung )

()
Pancha = five
KoSha = sheath
anthara = inside
Sthita = present

#428 Pancha Koshaanthara Sthitha = Who pervades the five sacred sheaths *

(* Aanandhamaya Kosha, (relating to Causal body) vigyaanamaya kosha, praanamaya kosha, manomaya kosha (corresponding to subtle body) and finally annamaya kosha (gross body))

(to continue)

March 11, 2019

ஏனாதி நாதர்

Image result for ஏனாதி நாதர்


வாள்படை பயிற்ச்சியாளராய் பணிபுரிந்தவர் ஏனாதிநாத நாயனார். சோழப் பெருநாட்டிலுள்ள எயினனூரில் பிறந்தார். போர் பயிற்ச்சியளித்து பெறும் வருமானத்தை சிவ கைங்கரியங்களில் செலவிட்டு அடியார்களை போற்றினார்.

ஓருவனின் வெற்றி இன்னொருவனின் தோல்வி. ஒருவனின் திறமை இன்னொருவனின் வறுமை. இது தானே உலக இயல்பு ! ஏனாதிநாதரின் தாய்வழி உறவனிரான அதிசூரனும் அதே தொழில் செய்து வந்தாலும், பலரும் ஏனாதியாரையே நாடியதால் அதிசூரனின் வருவாய் குறைந்தது. வன்மம் பெருகியது.

பெருஞ்சேனை திரட்டி போருக்கு அரைக்கூவல் விடுத்தான் அதிசூரன். இருபெரும் சேனையுடன் போர் புரிந்து இறுதியில் வெல்வாரே வாட்பயிற்சி அளிக்க வல்லார், மற்றார் தோல்வியை ஒப்புக்கொண்டு அரசரின் சேனைக்கு பயிற்றுவித்தலை கைவிட வேண்டும் என்று முழங்கினான். அவ்வாறே இருபெரும் படைகள் போரிட்டன. அதிசூரன் தோற்றுப் பின்வாங்க, ஏனாதிநாதர் சிறப்புற பெருவெற்றி பெற்றார்.


தோற்றவனுக்கு ஆத்திரமும் அவமானமும் அதிகம் சூழ்ந்து கொண்டது. வஞ்சம் தீர்த்தேனும் வெற்றி பெறும் நோக்கில் துணையேதுமின்றி தனியே இருவரும் போரிட்டு பார்க்கலாம் என மறுபடி அழைத்தான்.


சிவனடியார்களுக்கு தலைவணங்கி நிற்பவரல்லவா நாயனார்! திருநீறு பூசிய நெற்றி கண்டால் கரம் கூப்பி மரியாதை செலுத்துவாரேயன்றி கொல்லத்துணிய மாட்டார். அதை கருத்தில் கொண்டு எப்பொழுதும் திருநீறு அணியாத அதிசூரன் நீறணிந்த நெற்றியினனாக போர் புரியச் சென்றான். சிவனுக்கு அடிமையாகிவிட்ட அதிசூரனை கொல்லத் துணியாத ஏனாதி நாதரும் அவனை தாக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். இருப்பினும், ஆயுதமில்லாதவனை கொன்ற பாபத்திலிருந்து அதிசூரனை காக்கும் நல்லெண்ணத்துடன், ஆயுதமேந்தி போர் புரிபவரைப் போல் கேடயமும் வாளும் கையிலேந்தி நிற்க இதுவே சரியான தருணமென வெட்டிச் சாய்த்தான் அதிசூரன்.

ஈசன் ஏனாதிநாதர் முன் தோன்றி, நீறணிந்த நெற்றியைக் கண்டதுமே, போர் துறந்து வாளாயிருந்த பக்தியை மெச்சி தம் திருவடியில் இடமளித்து நற்கதி அருளினார்.

நீறில்லா நெற்றி பாழ் என்பர் ஆன்றோர். திருவெண்ணீற்றின் மகிமை உணர்ந்தேத்துவோம்.


ஓம் நமச்சிவாய 

March 07, 2019

ஏயற்கோன் கலிக்காம நாயனார்.

Related image


திருப்பெருமங்கலம் என்ற சோழத் திருவூரில், ஏயற்குடியில் பிறந்த் வேளாளர். சிறந்த சிவபக்தி செய்து அடியார் தொழுவதை தவமென்று ஏற்றிருந்தார். அவருக்கேற்ற குணவதியை மணந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவரே சுந்தரமூர்த்தி நாயனார்.

சுந்தரமூர்த்தி நாயனார்,இறைவனை பரவை நாச்சியாரிடம் தூது அனுப்பியதை கேட்ட கலிக்காமனார் மிகுந்த சினம் கொண்டு இறைவனை ஏவுதற்கும் பக்தனுக்கு ஏற்புண்டாகுமோ என்று வெதும்பினார். கடவுளே இசைந்தாலும் பக்தன் அவரை ஏவலாமா, இப்படிப்பட்ட பக்தனை நேரே கண்டால் சினம் மேலிட்டு தகாத செயல் செய்யவும் துணிந்துவிடும் அளவிற்கு பெரும் கோபம் கொண்டிருந்தார்.

இச்செய்தி அறிந்த சுந்தரர், இறைவனிடம் கலிக்காம நாயனாரை சமாதனம் செய்து தங்கள் இருவரின் நட்புக்கும் வழி வகுக்குமாறு வேண்டினார். திருநீலகண்டன், தீரா சூலை நோயை கலிக்காம நாயனாருக்கு உண்டு பண்ணி, அது தீரும் பொருட்டு சுந்தரரை தரிசிக்க வலியுறுத்தினார். சுந்தரரால் தான் இந்த நோய் தீரும் என்பதானால், அந்த நோய் தீராமல் தொடர்ந்து வாட்டட்டும் என்று சொல்லிவிடுகிறார். சுந்தரரிடத்திலும் சிவனார் இது பற்றி உரைத்து ஏயற்கோனின் நோய் தீர்க்கப்பணித்தார்.

சுந்தரர் வருவதை அறிந்த கலிக்காம நாயனார், அவரால் தன் நோய் தீருமென்றால் அதற்கு மரணமே மேலெனக் கருதி தன்னை மாய்த்துக்கொண்டார். அவர் மனையாளும் உடன் உயிர்விடத் துணியும் நேரம், சுந்தரர் வந்து விடுகிறார். சிவனடியாருக்குறிய மரியாதை செய்வித்து, தன் கணவன் இறந்ததை மறைத்து, அவர் நலமுடன் இருப்பதாக மனைவி உரைத்தாலும், அதனையே தாமே நேரில் காண விழைகிறார் சுந்தரர். உள்ளே கலிக்காமனாரின் சடலத்தைக் கண்ட சுந்தரர், மனம் மிக வருந்தி தானும் உயிரைப் போக்கிக் கொள்ள எத்தனிக்கிறார். அனைவருக்கும் இறைவன் காட்சி தந்து, கலிக்காம நாயனாரின் பகையறுத்து அருளி, அன்பு மேலிடச் செய்தமையால், மிகுந்த அன்பு கொண்டு இருவரும் ஆரத்தழுவி நண்பர்கள் ஆனதாக வரலாறு.

தமது இன்னுயிர் உள்ளவரை இறைவனை வழுவாது பக்தி செய்து, திருத்தொண்டுகள் புரிந்து, பின் சிவலோகப் பதவி அடைந்தார் கலிக்காம நாயனார்.


ஓம் நமச்சிவாய 

March 05, 2019

எறிபத்த நாயனார்



Image result for எறிபத்த நாயனார்


சிவனடியார்களுக்கு இடர் நேரா வண்ணம் காத்தருள்வதை தம் பணியாக்கிக் கொண்டிருந்தார். கருவூரில் பிறந்த இவர், அவ்வூர் தெய்வமான திருஆனிலைக் கோவில் பசுபதீஸ்வரரை தினம் தொழுது அடியவர்களுக்கு தொண்டும் செய்து வந்தார். அடியவர் எவருக்கேனும் தீங்கு நேர்ந்தால் அவ்விடத்தில் உடன் முன்னின்று இடர் களைவதை முதல் கடமையாக செய்து வந்தார். சிவனடியார்க்கு தீங்கி விளைவிப்போரை தண்டிக்கும் பொருட்டு கையில் மழுவுடன் இருப்பார்.

அந்த ஊரிலே சிவனுக்கு சேவை செய்த சிவகாமியாண்டார் என்ற அடியவர், நீராடி, பூக்களை பூக்கூடையில் சேகரித்து ஆண்டவனுக்கு அற்பணிக்கும் பொருட்டு வந்து கொண்டிருந்தார். பு\கழ்சோழன் என்ற அரசரின் பட்டத்து யானை மிகுந்த அலங்காரத்துடன் பவனி வரும் வேளையில் மதம் கொண்டு பாகனுக்கு அடங்காமல் ஓடி, சிவகாமியாண்டாரின் கையிலுள்ள பூக்கூடையை தரையில் வீசியது. அதனை அலட்சியம் செய்த யானைப் பாகரும், அவ்விடத்தே விட்டு நகர, தம் இயலாமையால் வருந்தினார் சிவகாமியாண்டார். இதனை கண்ணுற்று துணுக்குற்ற எறிபத்த நாயனார், இறைவனுக்கு சூட்ட வேண்டிய மலரும், அவன் அடியவரும் மண்ணில் வீழ்ந்திருப்பதை காணச் சகியாமல், யானையையும் அதன் பாகரையும் வெட்டிச் சாய்த்தார்.

இச்செய்தி அறிந்த புகழ்சோழன் மிகுந்த சினம் கொண்டு தம் பட்டத்து யானையையும் பாகர்ககளுக்கும் தீங்கு செய்தவர் எவர் என்று தேடி அறிந்து திகைத்தார். அங்கே சிவனடியார் இருவர் நின்றிருப்பதைக் கண்டு நடந்தனவற்றை கேட்டறிந்து மனம் வெதும்பினார். சிவனடியார்களுக்கு தீங்கிழைத்த எம் யானையும் பாகனும் தவறு செய்தவர்களே ஆவர். இந்த சிறு தண்டனை போதாது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தானும் மடிந்து போக வேண்டுமெனக் கருதி , எறிபத்தரிடம் தமது வாளைக்கொண்டு தம்மையும் வீழ்த்தும்படி பணித்தார்.

இதைக் கேட்ட எறிபத்தர் துடித்தார். இப்படிப்பட்ட சிவபக்தனான புகழ்சோழனுக்கு தீங்கிழைத்தேனே என்று மிக்க மனம் வருந்தி, அவரது வாளால் தமது உயிரை எடுக்கத் துணிந்தார். இனியும் வாளாயிருப்பானோ இறைவன் ? உடன் தரிசனம் தந்து, உயிரிழந்த அனைவரையும் உயிர்ப்பித்து, சிவனடியார்களின் புகழ் சிறக்க தாம் ஆடிய விளையாடல் என்று அருள் கூர்ந்தார்.

இறைவனின் அடியவர்க்கொரு துயரெனில் அது இறைவனுக்கே நேரும் இழுக்கு என்றெண்ணி அங்கெல்லாம் தமது பங்களிப்பை தவறாது செய்து வந்து, சிறந்த தொண்டாற்றி, வினை முடிந்த பின் இறைவனடி சேர்ந்தார்.

யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
( எங்கெல்லாம் தர்மம் குறுகி அதர்மம் ஓங்குகிறதோ அங்கெல்லாம் நான் என்னை சிருஷ்டித்துக் கொள்வேன் )

ஓம் நமச்சிவாய 

March 03, 2019

உருத்திர பசுபதி நாயனார்


Image result for உருத்திர பசுபதி நாயனார்


சோழ வளநாட்டில் திருத்தலையூர் எனும் நல்லூரில் அந்தணர் குலத்தில் பிறந்த நாயன்மார், சிவனை சிந்தையினால் தழுவியிருத்தலும், அவன் நாமம் ஓதியிருத்தலுமே பெரும் செல்வமெனக் கருதி வாழ்ந்தார். வேத சாஸ்திரங்களிலும் அற நெறிகளிலும் புலமையும் அறிவும் பெற்றிருந்தவர் ஸ்ரீருத்ரத்தை மிகுந்த சிரத்தையும் அன்பும் மேவ ஓதி வந்தார். ஸ்ரீருத்திரம் ஜபித்து வந்ததால் இவர் உருத்திர-பசுபதி என்ற காரணப்பெயரால் சிறப்புற்றார்.


அனுதினமும் இரவென்றும் பகலென்றும் கருதாது தாமரைத் தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்று, கைகளை உயர்த்திக் குவித்து ஈசனைத் தவிர வேறெவரையும் வேறொண்றையும் மனத்தினாலும் தீண்டாது, ஸ்ரீருத்திரம் ஜபித்து வந்தார். பெரும் கருணை கொண்ட ஈசன், மகிழ்ந்துருகி இவருக்கு சிவலோகப் பிராப்தியருளி, இறைவனின் திருவடி நிழலில் தங்கியிருக்கும் பெரும் பேற்றை நல்கினார்.


ஓம் நமச்சிவாய