April 14, 2018

Lalitha Sahasranama (286) VarNashrama Dharma (Caste System) (தமிழிலும்)



Pancha Brahma Swaroopam

Varna-ashrama vidhayini;

() VarNa-Ashram = stages of life - (also) - caste and order
    Vidhayini - causing - prescribing

#286 Varna-ashrama vidhaayini = She who has prescribed Varnashrama as way of life **


* Varna is caste. Caste is attributed to a person based on the individual's passion, interest, aptitude, capablity and attitude. Four types of caste mentioned, which consisely covers basic professions and paths that are generally tread. Tagging a caste to a person should be based on individual's mind and attitude.
Caste however are equal and no divisions or acknowledgements need to be given for any caste's superiority over another. Every caste is sacred and vital, if an individual performs his dharma according to his inherent nature.
* Brahmins includes all those who meditates on Brahman i.e. seek truth. It may include reflecting upon truth, unravelling secrets of universe, meditating, praying, educating those who are interested about things which are beyond sensual perceptions. Qualities mandatory for this class includes humility, truth, simplicity, non-violence etc.
* Kshatriya includes all those who are interested in welfare of others. They are lofty souls who work for the progress of others, fight for their rights and ensure security and protection. Qualities mandatory would be valour, courage, impartiality, fair-mind and the likes.
* Vaishya tags you all those activities which includes trade, agriculture and other necessities of life without which livelihood becomes impossible. These people are life providers for other classes. Dedication, being ambitious, talent, honesty are some of the virtues needed.
* Shudras include those activities which includes service to others. Without them there would be no compassion and hospitality. Without them there is no mercy and selflessness. They feel "Service to humanity is service to god". Quality which decides this class would be compassion, kindness, selflessness and sacrifice.
We all understand every human being has all of these qualities and nature within him. What decides his caste is his predominant interest. No class or clan is less than any other. Every class is vital, without which society and creation would collapse. It is interesting to notice that we all belong to every class at different point of time. Dont we all include all these activities in our daily life in different degrees?
We shall now see the other meaning: (VarNa-Ashram = stages of life )
Varna-ashrama also means four stages of human life.

Brahmacharya - Learner-student- Bachelor
Gruhastha - A householder
Vanaprastha - Retirement and rest
Sanyasa - Renunciation and search for truth

Human birth is precious, and some of us dont do well in any stage of life. Almost all do not enter the final stage at all, before which death awaits and drags him to a different realm.
It can be assumed that while 'varna' talks on caste, 'ashrama' talks on walks or stages of life.
This is posted as a seperate post for clarifications on VarNashrama which is hugely subjected to critism and misunderstanding.

லலிதா சஹஸ்ரநாமம் (286)

பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்

வர்ணாஷ்ரம விதாயினீ;

() வர்ணாஷ்ரம = குல வேற்றுமை (அல்லது) வாழ்வின் நிலைகள் 
விதாயினி = ஏற்படுத்தியிருத்தல் - நியமித்தல்


#286 வர்ணாஷ்ரம விதாயினீ = வர்ணாசிரம முறைகளை வகுத்திருப்பவள் **

வர்ணம் என்றால் குலம். குலப் பிரிவுகள், தனிமனிதனின் ஆர்வம், திறன், புத்தி, குணம், நாட்டம் முதலியவற்றால் ஏற்படுகிறது. நான்கு பிரிவுகள் தோராயமாக அவரவர் ஆற்றும் கடமைகளையொட்டியும், வாழ்கை முறைகளையொட்டியும் விவரிக்கப்பட்டுள்ளன.
தனி மனிதனை குலத்தின் அடிப்படையில் பிரிப்பதற்கு அவரவர் நாட்டம் ஆர்வம், திறன் போன்றவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.


குலப்பிரிவுகள் எந்தவித ஏற்றத் தாழ்வுக்கும் உட்படுத்தப்படுவது இல்லை. எக்குலமும் உயர்குலமே. எக்குலத்தின் பங்களிப்பும் சமுதாயத்திற்கு இன்றியமையாதது. அவரவர் தம் கடமைகளை தமது மனவிருப்பப்படியும் தர்மப்படியும் செய்வதொன்றே அத்தியாவசியம்.


* பிராம்மணர்கள் என்ற பிரிவில அடங்குபவர்கள், மெய்ப்பொருளைப் பற்றிய தேடலில் ஈடுபட்டவராகவும் அதற்கான தாகம் கொண்டவராகவும் இருப்பர். தியானம், பூஜை பிரார்த்தனை யாகங்கள் முதலியவற்றில் நாட்டமுடையவராக இருப்பது இயல்பு. பிரபஞ்ச உண்மைகளை உணர்பவர்களாகவும், அதனை தெளிவுற விரும்பியோருக்கெல்லாம் எடுத்துரைப்பவராகவும் இருப்பவர்கள். உண்மை, எளிமை, அஹிம்சை முதலியவைகளை
இவர்கள் குண நலன்களாக பெற்றிருப்பர்.


* க்ஷத்திரியர்கள் பிறர் நலனிலும் பொது நலனிலும் அக்கறை கொண்டவர்கள். பிறர் நலனுக்கும், அவர்கள் உரிமைக்கும் போராடும் உன்னத நல விரும்பிகள். தைரியம், பாகுபாடு அற்ற சம-நோக்கு, வலிமை முதலியவை அமையப்பெற்றிருப்பர்.


* வைசியர்கள் வியாபாரம், வெளாண்மை, உழவு, நெசவு, கலை முதலியவற்றை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள். இவர்களின் பங்களிப்பின்றி உணவு உற்பத்தி முதல் அன்றாட வாழ்விற்குறிய எதுவும் சாத்தியமில்லை.  திறமை, இலட்சியம், உழைப்பு, நேர்மை முதலியவை அத்தியாவசிய குண நலன்கள்.


* சூத்திரர்கள் என்ற பிரிவில் வருபவர்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டவராக இருப்பர். பிறருக்கு உழைப்பதிலும், பிறருக்காக தம் வாழ்வை அற்பணிக்கும், உயர் குணம் கொண்டவராக இருப்பர். பிறர் துன்பம் தாளாதவராகவும் அவர்கள் துயர் துடைப்பவராகவும் இருப்பது இவர்கள் இயல்பு. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கூற்றுக்கு இலக்கணம் ஆகுவர். இவர்களின் கருணையும், பரோபகாரமும், உபசரிப்புமின்றி இவ்வுலகம் அன்பும் அர்பணிப்பும் இழந்து வாடும் வரண்ட வாழ்வுக்கு தள்ளப்படும். கருணை, அன்பு, தன்னலமற்ற சேவை மனப்பான்மை, தியாகம் முதலியவை அடிப்படை குணங்களாக கொண்டவர்கள்.



ஆழ்ந்து யோசித்தோமேயானால், ஒவ்வொரு மனிதனும் இவ்வத்தனை குணங்களையும் ஒருங்கே பெற்றிருப்பான்.  அவனிடம் எக்குணமும் எதன் ஈடுபாடும் அதிகம் என்பதைப் பொருத்தே குலம் வரையறுத்து கூற இயலும். எக்குலமும் மற்ற குலத்தினின்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. ஒவ்வொருவரின் பங்களிப்பும் சமூகத்தின் சுமூகமான ஓட்டத்திற்கும் ஊட்டத்திற்கும் இன்றியமையாதது. நம் அன்றாட வாழ்வில் அனைவரும் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு குலத்திற்குறிய குணங்களை பிரதிபலிக்கிறோம் என்பதே சுவாரஸ்யமான உண்மை. 



வர்ணாசிரமம் என்ற சொல்லுக்கு மற்றொரு பொருளை சிந்திக்கலாம்.

வர்ணாசிரமம் வாழ்கையின் நான்கு நிலைகளை குறிக்கும் சொல்.

பிரம்மச்சரியம் =  மாணவன் - கல்வி கற்பவன் - பிரம்மச்சாரி
கிருஹஸ்தம் = இல்லம் கொண்டு மண வாழ்கையில் ஈடுபட்டுள்ளவன்
வானப்ரஸ்தம் =  ஒய்வு பெற்றுவிட்ட பருவத்தில் உள்ளவன்
சன்னியாசம் = அனைத்து விருப்பு வெறுப்பையும் துறந்து, சத்தியத்தை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுதல்


மனிதப்பிறவி போற்றுதற்குறியது, அதனை நல்வழியில் பயன்படுத்தாமல், நம்மில் சிலர், எந்த பருவத்திலும் சரியாக கடமையாற்றாமல் தோற்றுவிடுகிறோம். நம்மில் பலரோ கடைசி பருவமென்ற  விருப்பு வெறுப்பற்ற  துறவு நிலைக்கு எத்தனிப்பதே இல்லை. அதற்கு முன் மரணம்  நம்மை வரவெற்று வேறு பரிணாமத்திற்கு இழுத்துச் சென்றுவிடுகிறது.


'வர்ண' என்ற சொல் குலத்தை குறிப்பதாகவும் 'ஆசிரம' என்ற சொல் வாழ்கை நிலைகளை குறிப்பதாகவும் புரிந்துணரலாம்.


வர்ணாசிரமத்தை பற்றிய புரிதலுக்காக இந்த நாமாவை தனிப்பதிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

LikeShow More Reactions
Comment

2 comments:

  1. வர்ணாசிரம தர்மம் குறித்து நானும் எழுதி இருக்கிறேன் அணுகு முறையில்தானெத்தனை வேறுபாடு சுட்டி இதோ உங்கள் பார்வைக்கு
    http://gmbat1649.blogspot.com/2016/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார். விஸ்தாரமான அலசியிருக்கிறீர்கள்.

      Delete