பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்
நிஜாக்ஞா ரூப நிகமா;
புண்யா புண்ய ஃபலப்ரதா;
ஸ்ருதி சீமந்த சிந்தூரீ க்ருத பாதாப்ஜ தூலிகா;
சகலாகம சந்தோஹ ஷுக்தி சம்புட மௌக்திகா;
() நிஜ = உள்ளுரையும் - இயல்பான
ஆக்ஞா = ஆணைகள்
ரூப = ரூபம் கொண்டு
நிகமா = வேதங்கள் - வேத சாஸ்திரங்கள்
# 287 = நிஜாக்ஞா ரூப நிகமா = தன்னுள் உள்ளுரையும் ஆணைகளையே பிரபஞ்ச வேதத்தின் ரூபமாக்கியவள்
() அபுண்யா = பாபங்கள்
ஃபல = பலன்
ப்ரதா = வழங்குதல்
# 288 புண்யாபுணய ஃபலப்ரதா = புண்ய பாப கார்யங்களின் பலன்களை பங்கிட்டுக் கொடுப்பவள்
() ஷ்ருதி = வேதம் (வேத வடிவான வேத-மாதா)
சீமந்த = உச்சி வகிடு
சிந்தூர = குங்குமம்
க்ருத = பேறப்பட்ட
பாதாப்ஜ = தாமரைப் பாதம்
தூலிக = தூசி
# 289 ஷ்ருதி சீமந்த சிந்தூர க்ருத பாதாப்ஜ தூலிகா = தனது பாதத்தாமரைத் தூசியால் வேதமாதாவின் வகிட்டு சிந்தூரத்தை அலங்கரிப்பவள் *
* நான்கு வேதங்களை தேவதைகளாக உருவகப்படுத்தி, அவர்கள் அன்னையை தொழுதெழும்போது, அவள் பாதத்தின் தூசி (சிவந்த நிறம்) சிந்தூரமாக வேத-தேவதைகளின் வகிட்டை அலங்கரிப்பதாக நாமம் உரைக்கிறது.
() சகல = முழுவதும் - சர்வமும்
ஆகம = வேத சாஸ்திரங்கள்
சந்தொஹ = அபரீமிதம் - முழுமை - அனேகம்
ஷுக்தி = முத்துச்சிப்பி
சம்புட = உறை - தொகுப்பு
மௌக்திக = முத்து
# 290 சகலாகம சந்தோஹ ஷுக்தி சம்புட மௌக்திகா = சிப்பியென விளங்கும் ஆகம நியமங்களின் உள்ளுரையும் முத்தாக திகழ்பவள் *
* ஆகம நியமங்கள் அனைத்தும் முத்தை சுமந்து நிற்கும் சிப்பியைப் போன்றதே. அதனுள் உறையும் பரம்பொருளே சாரமானவள். பரம்பொருளை அடைவதற்கான வழிகளே நியம சாஸ்திரங்கள். பக்தியினாலும் ஞானத்தாலும் பரம்பொருளின் அருகாமையை உணர்ந்தவனுக்கு சாஸ்திரங்களும் ஆகம நியமங்களின் முக்கியத்துவமும் அதிக ஈர்புடையதாக இருக்காது.
(தொடரும்)
Lalitha Sahasranama (287 - 290)
Pancha Brahma Swaroopam
Nijaagnya roopa nigama;
punyaapunya phala pradhaa;
Shruthi seemantha sindhoori Krutha paadhaabhja dhoolika;
Sakala-agama sandhoha shukthi samputa maukthika;
() nija = inborn or innate
aagnya = order
roopa = form
nigama = vedas or vedic texts
#287 nijaagnya roopa nigama = She Whose inherent commands have become vedas
() apunya = wrong doings
phala = fruits - result
pradha = giver
#288 Punya-apunya phala pradha = Who apportions the fruits of sins and virtues
() Shruthi = veda (personified vedic goddess)
seemantha = parting of hair
sindhoor = vermilion - (kumkum)
krutha = obtained
paadhaabja = lotus like foot
dhoolik = dust
#289 Shruthi seemantha sindhoori Krutha paadhaabhja dhoolika = Dust from whose lotus feet has become the auspicious sindhoor(kumkum) of Vedic goddesses *
*Four vedhas who are personified as goddesses, prostrate mother lalitha and dust from mother's
feet settle down as sindhoor in their parted hair.
() sakala = all - total
aagama = guidelines on vedic rituals
sandhoh = abundance - multitude - totality
shukthi = pearl oyster shell
samputa = folder - package
mauthik = pearl
#290 Sakala-agama sandhoha shukthi samputa maukthika = Who is like the precious pearl, inside the shell of vedic doctrines *
* The naama reflects that she is the precious pearl inside the vedas or vedic rituals and scriptures. She is the susbtance, rest of it is only the path or guidelines which leads us in right direction. Even oyster or shell is done away with, when we get the pearl. Likewise if we reach her abode and grasp her with our undiluted bhakthi, doctrines and rituals are merely the path and hence is of no greater concern when we reach the destination.
( to continue)
No comments:
Post a Comment