April 20, 2018

வரவேற்பு



ஆடை வனப்பு அழகைக் கூட்டி 
அங்கமெங்கும் வர்ணம் பூத்திருக்க,
உற்றவரை உறவுக்கு உகந்தவரை
அங்குமிங்கும் படபடக்கும்
வண்டு விழிகளால் துழாவி
கண்மலர்களால் வரவேற்று
கோலாடிக் கொண்டாடினாள்.

உடன் தாவிய முத்துக்குழைகளும் ஆரங்களும் 
சட்டென இதழ் விரித்த வெண்முத்துக்களுடன்
கூடியாடி குதித்ததில்,
மேடையெங்கும் ஒரே முத்துச் சிதறல்கள் ! 

( வல்லமை போட்டி - 20-4-18 )

2 comments:

  1. ரிசெப்ஷன் அனுபவம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார். எங்கும் ஒரே வண்ண மயம். ஆட்டம் பாட்டம்.....வருகைக்கு மிக்க நன்றி.

      Delete