நிர்குண உபாசனை
நீல சிகுரா;
நிராபயா;
நிரத்யாயா;
துர்லபா;
துர்கமா;
துர்கா;
துக்க ஹந்த்ரீ
சுகப் ப்ரதா;
() சிகுரா = கேசம்
# 185 நீலசிகுரா = கருநீலவண்ண கேசமுடையவள் - i.e. ( கரு நீல கேசமுடையவளாக உருவகப்படுத்தபடுகிறாள்) *
# நீலசிகுரா = ஆக்ஞா சக்கரத்தின் உருவகம் ( பிரபஞ்சத்தின் சூஷ்ம தொடர்புகள் கருநீல வண்ணத்தில் உருவக்கப்படுத்தபடும் ஆக்ஞா சக்கரத்தின் மூலம் ஏதுவாகிறது ) *
** நிர்குண உபாசனையில் இப்பெயர் வரப்பெறுவதால், இதன் சூக்ஷ்ம ரூபத்தையும் அர்த்தத்தையும் கருத்தில் கொள்ளுதல் சிறப்பு
() ஆபயா = அபாயம் அல்லது அழிவுக்கு உட்படுதல்
# 186 நிராபயா = அழிவுக்கு ஆட்படாதவள் ...அழிவற்றவள்
() அத்யாயா = வரையரை தாண்டுதல் - மீறுதல் - இறுதி அல்லது விளிம்பு
# 187 நிரத்யாயா = வரையரையற்றவள் - எல்லையற்று நிரம்பியிருப்பவள்
* வேறு சிலர் இப்பெயரை "வரையரைகளை கடக்காதவள், அதாவது அவளே உருவாக்கிய சட்டங்கள் அல்லது எல்லைகளை மீறாதவள் என்றும் பொருள் கூறுகின்றனர். அத்யயா என்ற சொல்லுக்கு "இறுதி - விளிம்பு" என்றும் பொருள் உண்டு, அதனால் நிரத்யயா என்ற நாமத்தை வரையரையற்று நிரம்பியிருப்பவள் என்று நிர்குண உபாசனையாக பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
() துர்லப = அடைவதற்கு அரியது - கடினமானது
# 188 துர்லபா = அடைதற்கரியவள் ; வெல்வதற்கரியவள்
() துர்கம = தொடர்வதற்கு சிரமமானது
# 189 துர்கமா = அணுகுதற்கு கடினமானவள்
() துர்க = கோட்டை- அரண் - வலிமை வாய்ந்த பெண் தெய்வம்
# 190 துர்கா = பாதுகாப்பவள் - கவசமானவள் (பக்தர்களுக்கு) ; துர்கா தேவி
() ஹந்த்ரீ = அழித்தல்
# 191 துக்க ஹந்த்ரீ = துயர் தகர்ப்பவள்
() ப்ரதா = அளித்தல்
# 192 சுகப்ரதா = ஆனந்தம் வழங்குபவள்
( நிர்குண உபாசனை முடிந்தது . இனி சகுண உபாசனா நாமங்கள் தொடரும் )
Lalitha Sahasranama (185 - 192 )
NirguNa Upasana
Neela Chikura;
Niraapaya;
Nirathyayaa;
Dhurlabhaa;
Dhurgamaa;
Dhurgaa;
Dhuka Hanthri;
Sukha Pradhaa;
() chikura = hair
# 185 Neela Chikura = Who is personfied with dark-blue hair **
# 185 Neela Chikura = She who is the Ajna chakra ( personifying cosmic communion ) **
* * We are talking on "Nirguna upasana" which means attributeless and even formless aspects of parabrahma swaroopam of Lalithambika. Neela chikura hence would be rightly understood as ""Sahasra chakra or crown chakra reflecting indigo color"".
() aapaya = danger - annihilation
# 186 NirAapaya = She who can never be destroyed
() athyaaya = to go beyond - transgress - end **
# 187 NirAthyaaya = Who has no limits to trespass i.e. who is limitless ... ie. endless
* Some interpretors have interpreted this name as " Who does not transgress her limits i.e. laws which she created" . Atyaya has many meanings one of which also means "end" .,... Nirathyaya is therefore interpreted as "endless or limitless"
() Dhurlabha = Difficult to attain
# 188 Dhurlabhaa = She Who is difficult to grasp (to be won or understood)
() Dhurgama = difficult to be traversed - inaccessible
# 189 Dhurgamaa = Who cannot be approached or accessed easily
() Dhurga = Fortification - Fortress - a mighty goddess
# 190 Dhurgaa = Who is the protector (of her devotees) i.e. Who is goddess Dhurga
() Hanthri = slay - kill
# 191 Dhukka Hanthri = She who is the destroyer of grief
() Pradha = to confer - deliver
# 192 SukhaPradha = who grants happiness
( We complete NirguNa upasana . Next Name of Goddess Lalitha starts on Saguna Upasana )
Reference Credit: www.Sanskritdictionary.com , www.manblunder.com
No comments:
Post a Comment