May 09, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (572 - 582) (with English meanings)

Image result for Supreme mother lalitha beautiful 

விபூதி விஸ்தாரம் 

பரா-ஷக்தி;
பரா-நிஷ்டா;
ப்ரக்ஞான கண ரூபிணீ;
மாத்வீ பான லசா;
மத்தா;
மத்ருகா வர்ண ரூபிணீ;
மஹா கைலாச நிலயா;
ம்ருணால ம்ருது தோர்லதா;
மஹானீயா;
தயா மூர்த்தி;
மஹா சாம்ராஜ்ய ஷாலினீ;

() 
பரா = அதி உன்னத - மிக உயர்ந்த 

#572 பரா-ஷக்தி = ஒப்புயர்வற்றவள்-  உன்னத சக்தியாக விளங்குபவள் - இறைவி 

()
நிஷ்டா = ஆதாரம் - மூலம் 
நிஷ்டா = உறுதியான பக்தி

#573 பரா-நிஷ்டா = ஜகத்தின் ஆதாரம் - அடையக்கூடிய லக்ஷியத்தின் சிகரம் 
#573 பரா-நிஷ்டா =  உறுதியான பக்தியால் அடையக்கூடியவள்

()
ப்ரக்ஞான = ஞானம் 
கன = செறிவான- கனமான
ப்ரக்ஞான கன = அடர்ந்த ஞானம் - ஞானத்தையன்றி வேறொன்றுமிலாத

#574 ப்ரக்ஞான-கன ரூபிணீ = சம்பூரண  ஞானவடிவானவள் 

() 
மாத்வீ = உற்சாகம் தரக்கூடியது - மதுபானம் போன்ற... * 
(இவ்விடத்தில் மது என்பது களிப்பத் தரக்கூடியதான அம்ருத நிலையைக் குறிக்கும்)
பான = பானம் - பருக்ககூடியது
லசா = களிப்பு - பெருமகிழ்ச்சி 

#575 மாத்வீ பான லசா =  பெருமகிழ்ச்சி   நிலையான ஆனந்தானுபவத்தினால் களிப்படைந்திருப்பவள் *
(இவ்விடத்தில் அம்ருதத்திற்கு ஒப்பான பெருமகிழ்ச்சி நிலையில் நிலைத்திருப்பவள் என்று கொள்வதே தகும்) 

() 
மத்தா = ஆனந்தத்தில் மிதத்தல் ( போதை என்ற புரிதில் இங்கு பொருந்தாது) 

#576 மத்தா = பெருமகிழ்ச்சிக் களிப்பில் ஆழ்ந்திருப்பவள்  (ஆனந்தானுபவம்)
(இவ்விடத்தில் இப்பொருள் கொள்ளுதல் தகும்) 

()
மாத்ரிரு)கா = அம்பிகை - பெண் கடவுள் 
மாத்ரு(ரி)கா  =  எழுத்து - அகரவரிசை
வர்ண =  நிறம் - இயல்பு

#577 மாத்ருகா வர்ண ரூபிணீ = அன்னையின் வடிவினள் - அம்பாள்- அம்பிகை
#577 மாத்ருகா வர்ண ரூபிணீ =  அகர எழுத்துக்களாகியிருப்பவள் (எழுத்து, சொல் அதன் சப்தம் .`ie. சப்த ப்ரம்மம்) 
#577 மாத்ருகா வர்ண ரூபிணீ = ஆதாரம் ஆகியவள் - பிரபஞ்சத்தின் ஆதாரம்; அன்னை
#578 மஹா கைலாச நிலயா = கைலாசத்தில் நிலை கொண்டிருப்பவள் (தனது நாதனுடன்) 

()
ம்ருணால= தாமரைத் தண்டு
ம்ருது= ம்ருதுவான
தோர்லதா = கொடி போன்ற கை

#579 ம்ருணால ம்ருது  தோர்லதா = தாமரைத் தண்டினையொத்த ம்ருதுவான கொடி போன்ற இளங்கரங்களை உடையவள் 

#580 மஹானீயா = போற்றுதற்குறியவள் 

#581 தயா மூர்த்தி = பரிவே வடிவானவள்

ஷாலினி =  உரிமையுடைய - சொந்தம் கொண்டாடும்

#582 மஹா சாம்ராஜ்ய ஷாலினீ = பிரபஞ்சமெனும் பெரும் சாம்ராஜ்யத்தின் பேரரசி - அதனை தனதாக்கியவள் 

( தொடரும்) 



Lalitha Sahasranama (572 - 582) 

Vibhoothi Visthaaram

Para-Shakthi;
Para-Nishta;
Pragnaana ghana roopiNi;
Maadhvee paanaa lasaa;
Maththa;
Mathruka varNa roopini;
Mahaa Kailasa Nilayaa;
MriNala mrudhu dhorlatha;
Mahaaneeya;
Dhaya moorthi;
Maha Saamrajya Shalini;

()
Paraa =Highest point or degree -  Supreme 


#572 Paraa-Shakthi = Who is the Supreme power
#572 Paraa-Shakthi = Who is the Supreme Goddess - Supreme driving force

()
Nishta = Firm Devotion 
Nishta = grounded or resting on - the source 

#573 Paraa-Nishta = She who is attainable by unswerving devotion 
#573 Paraa-Nishta = She who is the attainable Supreme goal

()
Pragnaana = knowledge - wisdom
ghana = dense - mass
Pragnaana-Ghana = nothing but knowledge 

#574 Pragnaana-Ghana roopiNi = Who is the quintessence of pure Wisdom 

()
Maadhvi = Intoxicated drink *
(here to be taken as nector of bliss i.e. amrut) 
paana = drink - beverage
lasaa = dancing - playing -sporting

#575 Madhvee pana lasaa = She who is in the state of  bliss ( i.e Samaadhi )
(here to be taken as state of bliss i.e. nector or amrut of bliss)

#576 Maththa = Who is intoxicated - overjoyed  - blissful

()
Matrka = The Divine Mother
Matrka = Alphabets
varNa = colour - nature 

#577 Matruka varNa roopiNi = Who is the Divine Mother
#577 Matrka varNa roopiNi = Who is in the form of alphabets (and its sound..
ie. shabhdha brahmam) 
#577 Matrka VarNa roopiNi = Who is the foundation the basis i.e the Supreme mother 
of universe


#578 Mahaa Kailasa Nilaya = Who resides in Great Maha Kailash (with her lord) 

()
MriNaal = Root of Lotus 
mrudhu = Gentle - soft
Dhorlathika = arm creepers (arms like creepers) 

#579 MriNaala Mrudhu Dhorlatha = Whose arms are as tender and soft as lotus-stalks 

#580 Mahaaneeya = Who is praiseworthy 

#581 Dayaa Moorthi = Personification of Mercy 

()
Shalini = endowed - possessing 
Maha Saamrajya = Greatest empire 

#582 Mahaa Samrajya Shalini = She who is the empress of the universe 
(which is the greatest empire) 

(to Continue) 

A humble effort  to understand word by word - ShakthiPrabha 

May 03, 2019

தாயன்பு




ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருப்பையில் பச்சிளம் மேனியை பதவிசாய் மார்பில் நீராட்டி சீராட்டி மிருதுவாய் முன்னங்கால்களில் துணியிலே தூளியிட்டு நெடுந்தூரம் முதுகில் மழலை மொழிகேட்டு முத்தமிட்டு மடியில் இமைபொழுதும் நீங்காத சிந்தனை சுவடுகளில் உயிருள்ள வரையிலும் உறையும் நினைவுகளில் உயிரற்று உதிர்ந்தாலும் தொடரும் உணர்வுகளில் புன்னகை விரித்து பொழுதெல்லாம் ரசித்து கனமென்று சிறு கணம் கூட கருதாமல் தாயுள்ளம் தாங்கும் சுமையற்ற சுகங்கள்

(வல்லமை படக்கவிதைப் போட்டி) (16-6-18)

கழற்சிங்கர்

Image result for கழற்சிங்கர்

பல்லவ குறு-நில மன்னராக சிறப்புடன் அரசாண்டு வந்த கழற்சிங்க நாயனார். பரமசிவனின் நாமத்தையும் அவர் புகழ்பாடுதலையுமே தலையாய கடமையாக கொண்டு வாழ்ந்தவர்.
திருத்தொண்டு புரிதற் பொருட்டு, பல சிவஸ்தலங்கள் தரிசித்து , திருவாரூர் கோவிலை அடைந்தார். அவருடன் அவர் தேவியானவளும் உடன் வந்திருந்தார். கோவிலை வலம்
வந்தவள் பூஜைக்கு வைத்திருந்த மலரொன்று நிலத்தில் வீழ்ந்திருந்ததை பார்த்து, அதன் அழகில் மயங்கி அதனை ஆவலோடு முகர்ந்தாள்.
இதனை கண்ணுற்ற செருத்துணை நாயனார் எனும் பக்தர், இறைவனுக்கு அளிக்கவிருந்த மலரை முகர்வதா, என வெகுண்டு, முகர்ந்த மூக்கை அறுத்தார். அரசியார் வலியின் மிகுதியால் துடித்துப் புலம்ப அதனை கேட்டு வெளியே வந்த கழற்றி நாயனார், இக்கொடுஞ்செயலை செய்தவர் எவரென வினவ, மூக்கை அறுத்த சிவனடியார் காரணத்தை உரைத்தார். உடனெ நாயனார், "பூவை எடுத்த கையைத் தானே முதலில் வெட்டியிருக்க வேண்டும்" எனச் சொல்லி, உடைவாளை உருவி அரசியாரின் கைகளை துண்டித்தார். இத்தகைய அரிய பக்திக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர் கழற்சிங்க நாயனார்.
திருத்தொண்டு புரிந்த வண்ணம் சிவநெறி தழைத்தோங்க கழற்சிங்க நாயனார் நெடுங்காலம் ஆட்சி புரிந்தார். அவர் பக்தியின் நெகிழ்ந்த எம்பெருமான் அவருக்கு சிவபதம் அருள, திருக்கையிலாயம் அடையும் பெறு பெற்றார்..

ஓம் நமச்சிவாய

லலிதா சஹஸ்ரநாமம் (561 - 571 ) with English meanings



விபூதி விஸ்தாரம்

ம்ருகாக்ஷீ;
மோஹினீ;
முக்யா;
ம்ருடானி; (ம்ரிடானி)
மித்ர ரூபிணீ;
நித்ய த்ருப்தா;
பக்த நிதி;
நியந்த்ரீ;
நிகிலேஷ்வரீ;
மைத்ர்யாதி வாசனா லப்யா;
மஹாப்ரளய சாக்ஷிணீ;

()
ம்ருக = மான்
அக்ஷி = கண்கள்

#561 ம்ருகாக்ஷீ = மானையொத்த கண்களை உடையவள் *

அம்மையை நோக்கிய ஸ்துதி என்பதால், பெண்மானின் அழகிய கண்களை உருவகப்படுத்துவது பொருத்தம்

#562 மோஹினீ = வசீகரிப்பவள்

#563 முக்யா = பிரதானமானவள்; முதன்மையானவள்.

()
ம்ருடா = சிவனாரைக் குறிப்பது
ம்ரிடதீ / ம்ருடதீ = மகிழ்வூட்டுதல்

#564 ம்ருடானீ(ம்ரிடானீ) = இறைவன் சிவனின் பத்தினி 

#564 ம்ருடானீ = மகிழ்ச்சியளிப்பவள்

()
மித்ரா = தோழமை - நட்பு

#565 மித்ர ரூபிணீ = நட்பே வடிவானவள். பிரபஞ்சத்தின் ஜட - ஜீவன் அனைத்திருக்குமான உற்ற தோழி .

() 
த்ருப்தி = திருப்தி - போதுமென்ற மனம்

#566 நித்ய-த்ருப்தா = மாறாத நித்தியமான மன-நிறைவை உடையவள்

()
நிதி = செல்வம்

#567 பக்த நிதி = பக்தர்களுக்கான (மாபெரும்) பொக்கிஷம்

()
நியந்த்ரண = ஆளுதல் - கட்டுப்படுத்துதல்

#568 நியந்த்ரீ = புவனத்தை ஆளுபவள்

() 
நிகில = புரணமான - முழுவதும்

#569 நிகிலேஷ்வரீ = சர்வேஸ்வரீ - ஜகத்தின் இறைவி / அரசி

()
மைத்ர = நட்பு - தோழமை
ஆதி = முதலிய - போன்றவை
வாசனா = ஆசை - இயல்பு - குணம்
லப்யா = அடையக்கூடிய (அவள் கருணையை பேறத் தகுந்த)

#570 மைத்ர்யாதி வாசனா லப்யா = மேன்மையான நற்பண்புகளால் அடைய  எளிதானவள்

()
மஹாப்ரளய = பேரழிவு - பிரபஞ்சத்தின் ஒடுக்கம் 
சாக்ஷி = சாட்சி - கண்கூடான சான்று

#571 மஹாப்ரளய சாக்ஷிணீ = பிரபஞ்சத்தின் ஒடுக்கத்தை காணும் சாக்ஷியாக (ஒரே சாக்ஷியாக)  விளங்குபவள் *

பிரபஞ்சத்தின் துவக்கமும் ஒடுக்கமும் நியதிப்படி மாறி மாறி நிகழும் நிகழ்வுகள்.  ஒடுக்கத்தின் போது மும்மூர்த்திகள் ( பிரம்மா விஷ்ணு மஹேஸ்வரன்) , காலம், கர்மா உட்பட அனைத்தும், ஒடுங்கி ப்ரபஞ்சப் பேராற்றலான பரப்பரம்மத்தில் இரண்டற கலந்து விடுகின்றன. மாயா எனும் பிரக்ருதியாளவள் மட்டுமே இப்பிரளயத்தை காணும் ஒரே சாக்ஷி.

(தொடரும்)

Lalitha Sahasranama (561 - 571)


Vibhoothi-Visthaaram

Mrgakshi;
Mohini;
Mukhya;
Mridaani;
Mithra RoopiNi;
Nithya Truptha;
Bhaktha Nidhi;
Niyanthri;
Nikhileshwari;
Maithriyadhi vaasana Labhya;
MahapraLaya Sakshini ;

()
Mrga = deer 
Akshi = eyes

#561 Mrgakshi = Who is doe eyed (eyes resembling doe ie female of the deer) *          * doe eyes are considered adorable.

#562 Mohini = She who fascinates

#563 Mukhya = She who is primary (the first, the important)

()
MR(i)da = Lord Shiva (also) 
Mrdathi = To make happy

#564 Mridani = Wife of Lord Shiva 

#564 MRidani = Who bestows happiness

()
Mithra = Friend

#565 Mithra RoopiNi = Who is the friend (of everyone/everything)

()
Thrupthi = Contentment

#566 Nithya Thruptha = Who is eternally contented (ever contented)

()
Nidhi = Treasure

#567 Bhaktha Nidhi = Who is the (biggest) treasure of the devotees

()
Niyanthrana = control

#568 Niyanthri = She who Governs i.e Rules (the universe)

()
Nikhil = entire

#569 Nikhileshwari = Who is the Queen ; Sovereign

()
Maithra = Friendly - Amicable - Friendship 
aadhi = et caetera - and so on 
Vasana = inclinations - desire
Labhya = can be procured - acquirable (her grace)

#570 Maithrayadhi vaasana labhya = Who becomes approachable with 
polite or good natured attributes

()
Mahapralaya = Great dissolution
Sakshini = Witness

#571 Mahapralaya Sakshini = She who is the witness (only witness) of the 
Great dissolution *

It is believed when everything including trinities (Brahma, vishnu, Maheshwara)
dissolves into the Singularity (Parabrahma), Maya or prakruthi (shakthi) is the 
only other witness of this Mahapralaya/ Great dissolution.

(to Continue)

Humble effort from my side  to  analyse word by word   - Shakthiprabha














































































































































பேரிளம்பருவம் (மொழியாக்கம் 3)



மடியில் தவழ்ந்து
உன்னடியின்   நிழலில் 
மகிழ்ந்திருந்த குழவிகள்
நயந்த நட்பை  வெடுக்கென்றே கத்தரித்து  
பொல்லாநாக்கைச் சுழற்றி 
கடும் விமர்சகர்களாகி - உன்மேல்
கொடும் குற்றச்சாட்டை குவிக்கும் காலத்தில், 
பேரிளம்பெண்  நீயென்ற
பெரு உண்மை உணர்வாய்.
.
கூட்டுப்புழுக்கள் கூடுகளை துளைத்தெழும்பி 
விடலைப் பருவத்தின் வலிய சிறகை விரித்தே
உயரப் பறக்கும் தருணம்;
அவர்கள் தேடும் அத்தியாவசியங்களில்  - நாடும்
அன்றாட தேவைகளின் சேவைகளில் முடங்கிவிடும் ...
உனக்கான அடையாளம்!
.
மாற்றமேதுமிலா உனது சின்னஞ்சிறு உலகிலோ 
பிள்ளைகளின் அவசியம் மென்மேலும் பெருகி, 
அவர்கள்  உடைமைகளை தடவிப்பார்த்து
சிந்தும் ரகசிய நீர்த்துளிகளில் 
கசியும் உனது தனிமை.
.
கொஞ்சுமொழி பேசும் பிஞ்சுகளின்
மழலை உலகில் மகிழ்ந்திறங்கி;
வனவிலங்குகளின் வண்ண விருந்துக்கு 
ஜிகினாக்கள் ஒட்டி ;
தங்க மையினால் ஒளிகூட்டி;
அணிற்குஞ்சுகளுக்கு அழைப்பிதழ் அனுப்பியவளுக்கு;
"கற்பனையில் காலமெல்லாம் கடத்திவிட்டாய், 
விழித்தெழும் தருணமிது!
அம்மா!!   இனிமேலும் நீ யுவதியல்ல தெரியுமா!"  
பருவமெய்திய  பதின்மவயதினன்  
திடுக்கென்று பிறந்த  ஞானத்தால்
சுருக்கென்றே சொல்லால் தைத்து
நறுக்கென்ற பாடம் புகட்டும் காலம்..
உனது நடுப்பிராயம்!


  Middle Age - Kamala Das                                                                                                               
  தமிழ் முயற்சி- ஷக்திப்ரபா 

[ Middle Age is a fantastic poetry by Kamala Das (Kamal Surayya). I read the poem in my teens, however, I could comfortably take the seat of a Middle aged woman and understand the "mother" who couldn't muster the courage to accept transformation.

 As next in the queue of transliterated poetries, I tried my best to bring out the conconction without losing much of its flavour. I hope in that process I didn't spoil the temper of my favourite ode.

Poetry sympathises with the "Mother" who finds it hard to confront her Middle-Age, when her children starts fluttering their wings ready to face the world all by themselves. ] 



Middle Age 

 Middle age is when your children are no longer
Friends but critics, stern of face and severe with their tongue.

It is the time when, like pupae, they burst their cocoons and
Emerge in harsh adult glory, and they no longer
Need you except for serving tea and for pressing clothes.
But you need them all the same, and badly, too, 
So that when left alone, you touch their books and things 
And weep a little secretly.

Middle age is when your son, to whom you had sent
Once upon a time, the squirrel’s invitation to their jungle feast
Writing in golden ink and posting it a night, turns around in disgust
Crying, “you have lived in a dream world all your life, 
It’s time to wake up, Mother, you are no longer so young you know!”

-Kamala Das (Kamala Surayya)