October 29, 2024

இருமொழிக் கவிதை

Pic Credit : Preethi Kannan 


தென்றலின்  தாலாட்டில்
தன்னை மறந்து இலைகள் 
மென் பண்ணிசைக்க
தன் வசமிழந்த 
செம்மாதுளை மொட்டுகள் 
மேடையேறி  மலர்ந்து
இருமொழிக் கவிதைகள் இயற்றி
கானகமெங்கும் கீதம் மீட்ட
வானகம்வரை பரவும்  ரோஜாவாசம்.
இந்த மொட்டுகளும் கூட
இதோ நாளையே மலர்ந்துவிடும்;
எனும் காத்திருப்பின் நம்பிக்கையை 
பனித்தூவி  வாழ்த்தி, 
பூமகுடம் சூட்டிச் செல்லும்
வனதேவதை!


ShakthiPrabha

No comments:

Post a Comment