சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
April 29, 2022
பாபத்தைக் களையும் நமஸ்காரம் (Deivathin kural)
April 27, 2022
எது செல்வம்? (Deivathin Kural)
அவர் பால ப்ரம்மசாரியாக இருந்த காலத்தில் ஒரு ஏழை ப்ராம்மண ஸ்த்ரீக்கு இரங்கி லக்ஷ்மியிடம் ப்ரார்த்தித்துக் கொண்டு ‘கனகதாரா ஸ்தவம்’ பாடின கதை தெரிந்திருக்கலாம்.
அவர் ப்ரார்த்தித்துக்கொண்டவுடன் லக்ஷ்மி வந்து கனக வர்ஷமாகப் பொழிந்துவிட்டாள். அவர் கேட்டுக்கொண்டாரே என்று வேறே யாருக்கோ வாரி வழங்கிவிட்டு, இதனை அழகான ஸ்துதி பண்ணின அவதாரக் குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் போவதற்கு?
‘வேறே யாருக்கோ தான் உன் அநுக்ரஹம் தேவைப்பட்டது; அதற்காக ப்ரார்த்தித்துக் கொண்டேன்; எனக்கு உன்னிடமிருந்து ஒன்றும் தேவையில்லை என்கிற மாதிரி இருந்துவிட்டால் அது மரியாதைக் குறைச்சல். அதனாலே நாம் சின்னவன் மாதிரி இருந்து மஹாலக்ஷ்மியிடம் நமக்காகவும் ஏதாவது கேட்டுக் கொள்ளவேண்டும்’ என்று தோன்றிற்று. ஆனால் அவருக்கு எந்த ஆசையும், எந்தத் தேவையும் வாஸ்தவத்தில் இல்லாததால் என்ன கேட்பது என்று தெரியவில்லை.
அவளையே நமஸ்காரம் பண்ணி “அவளிடம் வேறென்ன செல்வத்தைக் கேட்கவேண்டும்? இப்படி நாம் சின்னவராக நின்றுகொண்டு ஒருத்தரிடம் ப்ரியத்தோடு, அடக்கத்தோடு, நன்றியோடு நமஸ்காரம் செய்யும்போது மனஸுக்கு எவ்வளவு நிறைவாக இருக்கிறது? அதனால் இந்த நமஸ்காரமேதான் பெரிய செல்வம். ‘இந்த நமஸ்காரச் செல்வத்தை எனக்குக் கொடு’ என்றே ப்ரார்த்தித்துக் கேட்டு வாங்கிக்கொள்வோம்” என்று தோன்றிற்று. அதையே ச்லோகமாகப் பாடிவிட்டார்.
‘எப்போது பார்த்தாலும் உன்னை வணங்கிக் கொண்டிருக்கும்படியான இந்த நமஸ்கார ஸ்ரீயைத் தவிர வேறு எதுவும் நான் உன்னிடம் ப்ரார்த்திக்கவில்லை’.
“செல்வத்துட் செல்வம் அருட்செல்வம்* ” என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அருள் ஆண்டவன் செய்வது. ஆசார்யாள் சொல்லும் நமஸ்காரமோ நாம் செய்வது. நம்மைப் போன்றவர்கள் அவனுடைய அருட்செல்வத்தை வேண்டி நமஸ்காரம் செய்கிறோம்.
எப்போதும், இடையறாமல் – நமஸ்கார லக்ஷ்மி தன்னிடம் தங்கியிருக்கட்டுமென்கிறார்.
Chapter: நமஸ்காரமே செல்வம்: ஆசார்யாள் உணர்த்துவது :
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
December 16, 2021
Dear Diary
திருமணத்திற்கு முன்பு வரை நாட்குறிப்பு (diary) எழுதும் பழக்கம் இருந்தது. அது தொடர்பாக சில நிகழ்வுகளும் நிகழ்ந்தது. மறக்க முடியாதவையும் கூட. டைரி பக்கங்கள் சொல்ல மறந்த கதை நிறைய. சொல்ல முடியாத கதைகளும். என் வாழ்க்கையை மாற்றி அமைத்த முக்கியப் பங்கு டைரிக்கு உண்டு. இப்போதெல்லாம் என் டைரி... வெள்ளைக் காகிதங்களாகவே பல இனிய நினைவுகளை சுமந்திருக்கிறது.
பொக்கிஷமான சில நினைவுகளை நமக்காக சிலர் சுமக்கலாம்...அல்லது சுமை என விலக்கலாம். எவரும் நம் உள்ளாடும் உணர்வுகளை செவி மடுக்க்காவிட்டாலும்....Diary செவி மடுப்பாள். உற்ற தோழியவள்.
kOra kagaz tha
என்ற பாடல் கேட்கக் கிடைக்கும் போது diary பற்றிய நினைவுகளும் கோர்வையாக பல நிகழ்வுகளும் வந்து போகும். உடனிருந்த சில மனிதர்களும்.
பின் குறிப்பு: இப்பொழுதெல்லாம் டைரியில் "ஸ்ரீராமஜயம்" மட்டுமே எழுதுகிறேன். என்னைப் போலவே என் டைரியும் மாறிவிட்டாள்.
September 10, 2021
விநாயகர் ஸ்துதி
September 04, 2021
வணக்கத்துக்குரிய ....
என்னுடைய ஆசிரியர்களில் முதலில் நினைவுக்கு வருபவர், எனக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்த சுந்தரி அம்மாள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். தியாகராஜர் கிருதியாகட்டும், பஞ்சரத்ன கீர்த்தனைகளாகட்டும் முதலில் அதன் பொருளைக் கூறிவிட்டு, அதிலிருக்கும் பக்தியின் சாரத்தை மனதில் பதித்த பின்னரே பாட்டு வகுப்பைத் துவங்குவார். பாடலோடு ஊடே பக்தியையும் ஊட்டியவர் என்ற தனிமரியாதையும் பாசமும் அவரிடம் உண்டு.
.
அடுத்து என் ஆங்கில ஆசிரியை. Ms.Louward . Shakespeareல் துவங்கி, அவர் பாடம் எடுக்கும் ஒவ்வொரு கதையிலும் கவிதையிலும் இலக்கிய ரசனையை மாணவர்களுக்கு ஊட்டினார். எங்களை பாவத்துடன் நடித்தும் பேசியும் பழகச் செய்தார். ஆங்கில கவிதைகள் கதைகளின் பால் பெருந்தாக்கம் இந்த ஆசிரியையால் உருவானது. ஆங்கில வகுப்பு என்றாலே எங்களுக்கெல்லாம் அவ்வளவு சந்தொஷமாக இருக்கும்.
ஆசிரியர்களில் சிலர் என் மனதிலும் ஆன்மாவிலும் கலந்து நீங்கா இடம் பெற்றவர்கள்.
என்னுடைய அப்பாவும் அம்மாவும் கூடவே இருந்து வாழ்ந்து காட்டிய (காட்டும்) ஆசிரியர்கள். Contentment, Simplicity, Humility, Humanity, அத்தனைப் பேருக்காகவும் சந்தோஷப்படும் குணம், இன்னும் பலப்பல நற்குணங்களை போதித்தும், அதன்படி வாழ்ந்தும் என் மனதில் பதியவைத்தவர்கள். September ஐந்து என் பெற்றோர் திருமண தினம்.
இவர்கள் மட்டுமா!! நம்மைசுற்றி எத்தனை ஆசிரியர்கள்! தத்தாத்ரேயர் ஏற்கனவே வழிகாட்டியதைப் போல, பாரில் உள்ள ஒவ்வொன்றும் பாடம் கற்றுத் தரும். பறவைகளும், விலங்கும், புலன்களும், பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும், பேரண்டமும்,.. இன்னும் எத்தனை எத்தனை ஆசிரியர்கள்! பட்டியலிட்டு முடியுமா!
எனக்கு தெய்வமும், குருவும், ஆச்சார்யருமான மஹாபெரியவா "உபாத்யாயர்" என்ற ஸ்தானத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதால் இந்தப் பதிவில் அவரை சேர்க்கவில்லை.



