காலையிலேயே வீடு பரபரப்பை உடு த்திக் கொ ண்டிருந்தது. ஆதித்யா இன்று குடும்ப சகிதம் வீட்டிற்கு வருகிறான். பத்து முறை ஒத்திகை பார்த்தாகி விட்டது இருந்தாலும் வனிதாவுக்கு முகமெங்கும் பதட்டம் ஒட்டியிருந்தது.
. க்கத் தான் கேட்டோம். நாங்களும் அதையேசின்ன குடும்பத்தை ஏற்றிக்கொண்டு சிக்கென வந்து இறங்கியது கார். எல்லோரும் வளவளவென்று பேசினார்கள். ரசித்து சிரித்தார்கள். ஆதித்யாவுடன் பேச ஒன்றுமில்லை. ஆறு வருடங்களாக என்னவெல்லாம் பேச வேண்டுமோ அத்தனையும் பேசியாகிவிட்டது. திருமணம் முடிந்த பிறகு, பேச ஒன்றுமேயில்லாமல் மோட்டுவளையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விட நேர்ந்தாலும் நேரலாம். . பரஸ்பர பேச்சுக்கள் முடிந்ததும், மெல்ல ஆரம்பித்தாள் ஆதித்யாவின் அம்மா. என்ன நகை-நட்டு சீர் செனத்தி என்ற கேள்வியை நாசூக்காக இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் பட்டும் படாமலும் கேட்டாள். . சீர் செஞ்சாத்தான் கல்யாணம் என்று இல்லை சும்மா தெரிஞ்சு வாங்கிட கூடாதுல்ல. கலத்தன. வந்திருந்த உறவுகள் எல்லாம், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிம்மதி. சின்னவள் ரோகிணியும் அக்காவுக்கு கல்யாணம் என்று குதித்தோடிக் கொண்டிருந்தாள். . ****** அப்பா சீர் கேட்டாங்களாப்பா? , இல்லடா சும்மா தெரிஞ்சுக்கத் தான் கேட்டாங்க. நாம என்ன செய்யறோம்னு சொல்றது நம்ம கடமை இல்லையா? , அவங்க எவ்வளவு செய்யறாங்கப்பா? , என்னம்மா இது! அவங்க என்னத்துக்கு செய்யணும்? , எனக்கும் ஆதித்யாவுக்கும் கல்யாணம். நாம எப்படி செய்வோம்னு அவங்க எதிர்பார்க்கறாங்க. அதான் அவங்களும் என்ன செய்வாங்கன்னு கேட்டேன். , நீ இப்படி வாய் துடுக்கா பேசக்கூடாதும்மா. , ஆகட்டும்ப்பா. எனக்கு ஆஃபிஸ் டைமாச்சு அப்புறம் பேசலாம். , ***** அலைபேசியில் அன்றைக்கெல்லாம் ஆதித்யா தன் அம்மாவுக்கு உள் நோக்கம் ஏதுமில்லை என சத்தியம் செய்தான். இதுக்காக கல்யாணமெல்லாம் நிக்காது. அப்படியே நின்னா என்னை கடத்திட்டு போயிடு. உன் கூடவே வந்திடறேன் என்று சிரித்தான். . சேச்சே...அதுக்கெல்லாம் அவசியமிருக்காது உன்ன அப்படியே ஊர் பார்க்க.... , அய்யய்யோ! ஊர் பார்க்க? , கட்டி இழுத்துட்டு வந்துடுவேன்னு சொன்னேன் என்று கலகலத்தாள். , ***** , அப்பா இதுவரை எத்தனப்பா செல்வாகியிருக்குது. , ஏண்டா கண்ணு இதெல்லாம் கேக்குற? , சொல்லுங்கப்பா... , அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்ல. முன்னமே சில நகைங்க கூட சேர்த்து வச்சிருந்தோம். சாமான் செட்டு வகையறா, சத்திரம், வந்தவங்களுக்கு பரிசு, அலங்காரம், துணிமணி, சாப்பாடு எல்லாமே எதிர்பார்த்த செலவுல முடிஞ்சிடும்மா. . நான் பையனா பொறந்திருந்தா படிக்க வெக்கற செலவோட நின்னிருக்கும்....மொத்த செலவும் நம்முதா?.இது என்னப்பா நியாயம்! . அதெல்லாம் பரவாயில்ல. அவங்க ஒண்ணும் வற்புறுத்தல. உலகம் ரொம்ப மாறிப்போச்சும்மா, முன்ன மாதிரி இல்லை. , **** பூக்கள் எங்கும் அலங்காரமாய் தோரணம் அமைக்க, மணக்கும் விருந்து, ஜொலிக்கும். உடைகள் என குறைவின்றி திருமணம் சிறப்புற நடந்தது. தண்ணியாக ரூபாய் நோட்டுக்கள் செலவழிந்தன. சுபயோக தினத்தின் காலை முகூர்த்தத்தில் ஆதித்யா வனிதாவை சொந்தமாக்கிக் கொண்டான். இல்லை. அவள் தான் அவனை தனதாக்கிக் கொண்டிருந்தாள். . ***** சில தினங்கள் சிரிப்பும் சந்தோஷமுமாக இரு வீடும் கல விடை பெற்று பொன பின், து சாமானோடு சாமானாக கட்டினாள்.போகலாமா ஆதித்யா? என்றாள் . எங்க? . என் செலவுல வீடு பார்திருக்கேன். பக்கத்துல தான். பயப்படாத. அதிர்ந்து போயிருந்தனர் அனைவரும். இவன நான் வாங்கிருக்கேன். லட்சங்கள் செலவு பண்ணி எனக்கே சொந்தமாக்கிட்டேன். . என்னம்மா இப்படி பேசுற? உங்கள ஒண்ணும் செலவு செய்ய நாங்க வற்புறுத்தலையே! . ரொம்ப சிக்கனமான திருமணம் கூட செலவு செய்யாம நடக்காது அத்தை. நாங்க விழாவை சிறப்பாயில்ல செஞ்சிருக்கோம். உங்க மகனுக்கும் திருமணம் தானே, நீங்க இதுவரை எவ்வளவு செலவு செஞ்சிருப்பீங்க? உங்க மகன் திருமணத்துக்கும் சேர்த்து நானே தான் ஆபிஸ்ல லோன் போட்டிருக்கேன். . பதிலில்லை. . அவன் எனக்குத் தான் சொந்தம். என்னுடைய பொருள். என் உடைமை. நான் விலை கொடுத்து வாங்கியிருக்கேன். . யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென அவனை இழுத் . டாச்சு, கார்லையும் கட்டி போட்டா சரியாகிடும். நியாயப்படி நான் உனக்கு தாலி கட்டிருக்கணும்.என்னடி வனிதா இது. . சும்மா வாடா. உனக்கு கால்கட்டு போட் .
இந்த ராக்ஷசியை எப்படி சமாதானப்படுத்துவது என்று விழிபிதுங்கியபடி ஆதித்யா காரில் கட்டுண்டான். . பாதிக்கு பாதி செலவை ஏற்றுக்கொண்டால் தன் மகனை கண்ணில் காட்டுவாளா என்று கேட்க தூது அனுப்பியிருக்கிறாள் ஆதித்யாவின் அம்மா. அனேகமாக சுமூகமாக முடியலாம். . சுபம்.
குறிப்பு: கணேஷ்பாலா அவர்கள் நடத்திய ஓவியப் போட்டிக்கு எழுதியது
நன்றி: கணேஷ் பாலா. |
சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
June 19, 2020
எனக்கென்றும் நீயே சொந்தம் (ஓவியப் போட்டிக்காக எழுதிய சிறுகதை)
Labels:
சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
அடுத்து நான்வைக்கு ம் நாடகத்தை முடிக்க ஒருபோட்டி கலந்து கொள்ள வேண்டுகிறேன்
ReplyDelete