கலிய நாயனார் என்பவர் திருவொற்றியூரில் வணிகர் குலத்தில் தோன்றி செல்வந்தராய் வாழ்ந்தார். பெரும் சிவபக்தராக விளங்கினார். இவ்வுலக வாழ்வின் நிலையாமையையும், உடலை வெறும் கூடென்றும் உணர்ந்து சிவபதமே சிறந்தது என்று தெளிந்தமையால் அன்றாடம் திருவொற்றியூர் கோவிலில் உள்ளும் புறமும் திருவிளக்கு இடும் பணியை செய்து வந்தார்.
கொடிது கொடிது வறுமை. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பதெல்லாம் நமைப் போன்றோருக்கு. தொண்டிற் சிறந்த பக்தர்கள் இறைவனின் தொண்டே பெரிதென நினைப்பர். வறுமை வந்து சேரும்படி இறைவன் விதிக்க, வறுமையிலும் பணியை தொடர்ந்து விடாமற் செய்யும் பொருட்டு, மற்றவர் தரும் எண்ணையை வாங்கி விற்று அதில் சேர்ந்த செல்வத்தில் விளக்கேற்றி வந்தார். அத்தொழிலில் பெருகி வந்த போட்டியில் வாய்ப்பை இழந்தவர் செக்கு இழுத்து பொருளீட்டினார். நாளடைவில் அவரை கூலிக்கு அமர்த்திக் கொள்ளவும் யாருமின்றி போக மிக நொந்து தன் மனைவியை விற்று பணமீட்டி பணியை தொடர நினைத்தார். எனினும் வாங்குவார் யாருமில்லாமற் போனதால் திருவிளக்கு பணி தடைபட்டு விட்டதே என்ற ஆதங்கம் தாங்காமல் தமை அறுத்து அக்குருதியில் விளக்கேற்றத் துணிந்தார்.
தக்க சமயத்தில் பரமசிவனார் கருணைக் கண் திறந்து தடுத்தாட்கொண்டு ரிஷப வானகத்தில் காட்சி தந்து, திருக்கைலாயத்தில் ஒளிர்ந்திருக்க அருள் செய்தார்.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment