July 12, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (322 - 333) (with English Meanings)



பஞ்ச பிரம்ம ஸ்வரூபம் 

காமகலா ரூபா;
கதம்ப குசுமப்ரியா;
கல்யாணீ;
ஜகதீ கந்தா;
கருணா ரஸ சாகரா;
கலாவதீ;
கலாலாபா;
காந்தா;
காதம்பரீ-ப்ரியா;
வரதா;
வாம நயனா;
வாருணீ மத விஹ்வலா;

#322 காமகலா ரூபா = காதல் கலையின் உருவகமானவள் *
* ஆசை மற்றும் காமங்களின் உருவகம் என்றும் உணரலாம். காமம் ஆசை இச்சை முதலியவையே ஜகத்தின் சிருஷ்டிக்கு காரணம். அதனை சூக்ஷ்ம வடிவில் தன் கர்பத்தில் சுமந்திருப்பவள்.

() கதம்ப = கதம்ப மரம் 
   குசும = மலர்
#323 கதம்ப-குசும ப்ரியா = கதம்ப மலர்களை நேசிப்பவள்

() கல்யாண = அதிர்ஷ்டம் - நன்மை நிறைந்த
#324 கல்யாணீ = சுபீஷமும் நல்வளமும் நல்கக்கூடியவள்

() ஜகத் = உலகம் - உலகங்கள் - பிரபஞ்சம்
   கந்தா = முடிச்சு = குமிழ்வடிவான வேர் - வேர்
#325 ஜகதீகந்தா = ஜகத்துத்தின் துவக்கத்திற்கு காரணமானவள்; அதன் படைப்புக்கு வேரானவள்

() சாகர = கடல்
   ரச = 'பாவம்' (bhavam) அல்லது பொருள் நயம் என்று கொள்ள வேண்டும்
#326 கருணாரச சாகர = கருணைக் கடலாக விளங்குபவள்

() கலா = கலை
   வத் = ஒற்றுமை - ஒன்று போல - அதே வகை
#327 கலாவதீ = அனைத்து கலைககளின் சாரமானவள் - அனைத்து கலைகளையும் தன்னகத்தே கோண்டவள்

() ஆலாப் = உரை - பேச்சு
#328 கலாலாபா = கலைநயத்துடன் உரையாடுபவள் (மனதுக்கு ரம்யமாக- அலங்காரமாக- இசையாக)

() காந்த = வனப்பு நிறைந்த - அழகான
#329 காந்தா = வசீகரமானவள்

() காதம்பரீ = கலைவாணி - பெண் தெய்வம்
   காதம்பரீ = கதம்ப மலர்களிலினின்று வடிக்கப்பட்ட மது
#330 காதம்பரீப்ரியா = கலைவாணியினிடத்து அன்பு கொண்டவள் - கதம்ப மலர்களின் மதுவை விரும்புபவள் *

* இந்த நாமம் கலைவாணியை குறிப்பதாகக் கொள்ளலாம். முந்தைய நாமங்கள் கலைகளைப் பற்றியும், கலைவடிவாக அன்னையே விளங்குவதாகவும் குறிப்பிடிவதால், கலைகளின் பிரதிநிதி, ஞானம், இசை, வாக்கு மேலும் அனைத்து கலாவடிவங்களாகவும் திகழும் சரஸ்வதினியிடத்தில் அன்பு கொண்டவள் என்று அர்த்தம் உணர்ந்து கொள்ளலாம்.
() வரத = ஆசி வழங்குதல் - பிரார்த்தனைக்கு செவி சாய்த்தல்
#331 வரதா = வரமருள்பவள்

() வாம = அற்புதமான
#332 வாம நயனா = எழில் விழியாள்

() வாருணீ - ஒரு வகை மது (அமிர்தம்)
   விஹ்வலா = உணர்ச்சி வேகத்துக்கு உட்பட்டு - பரவசம்
   மத = தன்னிலை மறந்த உற்சாகம்
#333 வாருணீ மத விஹ்வலா = வாருணீ என்ற அமிர்தத்தினால் தன்னிலை மறந்த உற்சாகத்திற்கு உட்படுபவள் *

* பேரானந்தம் என்ற அமிர்த நிலையை குறிப்பிட்டு, அதனால் வரும் பரவச நிலை உணர்த்தப்படுகிறது. பரவசமும் பேரானந்தமும் உணர்ச்சிக்கு உட்பட்டது. அன்னிலையின் உணர்ச்சி மிகுதியினால் பெருகும் உற்சாகம் பேசப்பட்டுள்ளது. ஞானத்தின் படிக்கட்டுகளில் உணர்ச்சி மிகுதியால் பெருகும் உவகையும், அன்னிலையே பிரபஞ்ச அன்பின் பெருக்கினால் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் பேரமைதியில் நிலைக்கிறது. அதன் பின் அன்னிலையே உவகையும் அமைதியும் கலந்த வீடுபெறு நிலை என்ற சிலரின் புரிதல்.

இது பற்றி விரிவாகவும், தெளிவாகவும் படிக்க :
(தொடரும்)


Lalitha Sahasranama (322 - 333)

Pancha Brahma Swaroopam

Kaamakala Roopa;
Kadhamba Kusumapriya;
kalyaaNi;
Jagathi Kandha;
Karuna rasa saagara;
Kalaavathi;
Kalaa laapa;
Kaantha;
Kaadhambari priya;
Varadha;
Vaama Nayana;
VaaruNi madha Vihvala;

#322 Kaamakala Roopa = She who personifies the 'art of love' *

* Can be deciphered as personification of 'totality of desire'. Desire and Will are the primary requisites for creation. She represents the subtle form of totality of Desires (of Jiva).

() Kadamba = Kadamba tree 
   Kusuma = flower

#323 Kadamba Kusuma priya = She who is fond of Kadamba flowers

() Kalyana = luck - beneficial

#324 Kalyani = She who bestows fortune and prosperity

() Jagath = world - worlds - cosmos
    Kanda = knot - bulbous root

#325 Jagathi Kandha = She who is the beginning and cause of the world

() Sagar = ocean
Rasa = here to mean 'flavour'

#326 Karuna-Rasa Saagara = Who is the ocean of benevolence

() Kala = art
vat = likeness - resemblance

#327 Kalavathi = Who is quintessence of all forms of art

() aalaap = talk - speech

#328 Kala-aalaapa = Whose talk is artistic (musical-sweet-decorative-pleasing)

() Kanth = lovely - beautiful

#329 Kaanthaa = She who is alluring

() Kadambari = Wine distilled from flowers of kadamba tree -
Goddess - Goddess Saraswathi

#330 Kadambari Priya = Who is fond of Saraswathi - Who is fond of Wine (distilled from kadamba flowers) *

* We can assume this name to mean Goddess Saraswathi, as it talks on art and forms of art. Goddess Saraswathi represents knowledge, talk, speech and all other forms of art.

() Varada = grants boon - answers prayers

#331 Varadhaa = Who readily confers boon

() Vaama = splendid - pretty

#332 Vaama Nayana = She who has adorable eyes

() VaaruNi = Wine
   Vihwala = agitated
   Madha = intoxication

# Vaaruni madha vihwala = Who is intoxicated by VaaruNi(ambrosial drink)*

We may wonder, why would she be agitated with intoxication when in spiritual one-ness. Ecstasy may not be termed as peace. Ecstasy is excitement, emotions of heightened happiness. When in ecstacy, there is more turbulence or disturbance than quietness or tranquility. During spiritual oneness there can be intense ecstasy depending upon changing waves of compassion or love and at one point, culminating into peace, so intently that peace and ecstasy cease to be different.  

( Try reading the following link on peace and ecstasy by aurobindo

( to continue)

No comments:

Post a Comment