May 05, 2018

பெயரிலி



நிறத்தைப் பாரத்து முகம் சுளிக்காதே;
எளிமையைக் கண்டு எள்ளி நகையாடாதே;
அமைதியாக இருப்பதால் அறிவுரைகள் அடுக்காதே;
அயலான் என்பதால் அத்துமீறிப் பேசாதே;

நான் கேளாமலே
எனக்கும் ஜாதிக்குறியிட்டு - உன்
சிறுமதியின் சிறையில் சீரழிக்காதே.

போதும் நிறுத்து
என்னைப் படச்சுருளில் புதைத்து விடாதே..
நான் அடையாளம் தொலைத்தவன்.

என்னைக் கேள்விக்கு உட்படுத்தாதே,
நான் சுதந்திரத்தை நேசிப்பவன்
தொல்லையின்றி திரிபவன்
எல்லைகள் கடந்தவன்
அவமானங்களுக்கு அப்பாற்பட்டவன்
அசாதாரணமானவன்,

நீயோ சராசரி பாதசாரி,
ஆகையால்...
எதையும் மதிப்பிடாமல்
சலனமின்றி கடந்து போ!
(வல்லமை படக் கவிதைப் போட்டிக்காக - April 30 2018 )

(இக்கவிதை அந்த வாரத்தின் சிறந்த கவிதையாக வல்லமை குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. மிக்க நன்றி வல்லமை குழுவிற்கு)

4 comments:

  1. அற்புதம். கவிதையை வாசித்து முடித்ததும் யார் எழுதியிருபார்கள் என்று பெயரைப் பார்க்கச் சொல்லும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நலமாக உள்ளீர்களா? உங்கள் பதில் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

      Delete
  2. அனாமிகா என்றும் கூறுவதுண்டு

    ReplyDelete
  3. நன்றி ஜீவி மற்றும் ஜி.எம்.பி சார்.

    ReplyDelete