May 21, 2020

Black - 2005 movie




(என்றோ எழுதிய விமர்சனம். மிக நீண்ட விமர்சனம். வெகுவாக வெட்டியதிலேயே இவ்வளாவு மிச்சம்)


சஞ்சய் லீலா பன்சாலிக்கு மகுடம் சூட்டப் போகும் படம்.

காது கேளாத, கண்பார்வையற்ற சிறுமியின் போராட்டம். அவளின் ஆசைகள், உணர்ச்சிகள், வெற்றிகள், தோல்விகள். அவளுடன் பயணிக்கும் அவள் ஆசிரியர். தன் வாழ்நாளை அவளுக்காகவே அவளுடனே வாழ்ந்து நினைவிழக்கும் அவர்.

ஓமங் குமாரின் கலையியக்கத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு நுணுக்கத்தையும் சிரத்தையுடன் கவனித்து செதுக்கியிருக்கிறார். நுணுக்கமாய் பார்க்கும் பல காட்சிகளில், அதன் அழகும், செலுத்தப் பட்டிருக்கும் கவனமும் பாராட்டத் தக்கவை. மிஷைலின்(ஊனமுற்ற குழந்தை) வீட்டு உட்புற அலங்காரங்கள், கதாபாத்திரங்களின் உடைகளில் கவனம், என ஒவ்வொன்றிலும் தன் குழந்தையை அலங்கரிக்கும் தாயின் ஆர்வம் தெரிகிறது. சஹாயின்(அமிதாப்) வீட்டில் உறங்கிக் கிடக்கும் கருஞ்சுவற்றில்,


மிஷைல் ஆக நடித்த சிறுமி, நம் மனதில் அப்படியே பாத்திரமாய் பதிந்து விடுகிறாள். அபாரமான நடிப்பு. 


படத்தின் முதல் இரு காட்சிகளில் ராணி முகர்ஜியை ஜீரணிக்க முடியவில்லை. நிலைகுத்திய பார்வையும், ஒரு பக்கமாய் வெட்டிய முகமும், உணர்ச்சியற்ற பிழம்பான தோற்றமும், சற்றே நம்மைத் திகைக்க வைக்கும் அதே முகம், கதைக்குள் நம்மை இழுக்கவும் செய்கிறது.

மிஷைலின் அம்மாவாக ஷெர்னாஸ் படேலின் நடிப்பு திருப்தியாக இருக்கிறது. நந்தனா சேன் (மிஷைலின் தங்கையாக வருபவர்) தன் பங்கை நன்றாகச் செய்திருக்கிறார். சாராவாக வரும் நந்தனா தன் அக்காவைப் புரிந்து கொண்டாலும், அவளுக்கு இயல்யாய் இருக்கக் கூடிய சில துவேஷங்கள், என எந்த கோணத்தை விட்டுவைத்தார் இயக்குனர்? எல்லா கோணத்திலிருந்தும், இவ்வகை ஊனமுற்றோரின் வாழ்வை அலச மட்டும் செய்யாமல், அதற்குச் சரியான தீர்வு, நம்பிக்கை மற்றும் முயற்சியால் கிட்டும் வெற்றி என சரியான பாதையில் நடை போட்டிருக்கிறார்.

ஆசிரியர்-மாணவியின் நடுவில் பின்னப்பட்ட வலை, அதன் ஆழம் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதமாய் ஆழப் பதியும் கதை, கண்வழியே வழியும் உணர்ச்சிகள், சற்றும் மிகையில்லாத பேச்சுகள்.
ஒவ்வொரு வரியும், வசனமும் கவிதைகள். ஒவ்வொருவரின் நடிப்பும் மற்றவரின் நடிப்புடன் போட்டியிடுகிறது.

"நீங்களெல்லாம் 20 வருடத்தில் வாங்கும் பட்டத்தை நான் 40 வயதில் வாங்கியிருக்கிறேன். இருந்தாலும் என்ன.... "நான் பட்டம் வாங்கியிருக்கிறேன்!... அது போதும் எனக்கு" என்று மிஷைல் சொல்லும் பொழுது, RaniMukherjee யின் முகத்தில் தெரியும் பெருமை, நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

ஆல்சிமர்(alzheimer) எனும் மறதி வியாதியால் பின்னால் அவதிப்படுகிறார் சஹாய். இதை விளக்கும்படி சில காட்சிகள் வியாதியின் முதற்கட்டத்தில் காட்டும் பொழுது, மெல்ல பயம் நம் மனதுள் எட்டிப் பார்க்கிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது அந்த பயத்தின் மூல காரணம். தான், தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் மறந்து, எதையுமே மறந்து ஜீவிப்பது எத்தனை கொடியது!

தன்னைச் செதுக்கிய ஆசிரியரை, செதுக்க முற்படுகிறாள் 40 வயது மிஷைல். அவர் கற்கும் முதல் எழுத்தும் வாட்டரின் வரும் 'வா'. நம்பிக்கையுடன் நடந்து அடுத்த அடி எடுத்து வைக்கிறாள் மிஷைல். நாமும் தான். இரண்டரை மணி நேரப் படமும் ஒரு தனியுலகில் மிஷைலுடன், சஹாயுடன் அவர்களின் வெற்றி தோல்வியில் ஒன்றிவிடுகிறோம்.


இவ்வளவு எழுதியும், முடிவுறாமல் இருப்பது போன்ற பிரமை. சில விஷயங்கள் படிப்பதை விட, கேட்பதை விட பார்த்தால் இன்னும் புரியும். எனது பரிந்துரை இது தான், நீங்கள் 'ப்ளாக்' பார்க்கவில்லையெனில் நிச்சயம் பாருங்கள்.

May 14, 2020

பயணம்




சிறுதோல்வியில் தொடங்கி
பெருந்தோல்வியில் முடியும்
சுற்றுப் பயணம்...
சிரித்துக் கொண்டே தோற்கவும்
கொடுத்துக் கொண்டே வீழவும்
கற்றுத் தேர்ந்து
பயணக் களைப்பினால் நலிந்து
தோல்வி தரும் அயற்ச்சியில்
உறங்கி எழும்
மகத்துவமிக்கதொரு தருணத்தில்
அரவணக்ககும் பெருவெற்றின்
பெருஞ்சோதியை நினைந்தபடி...
பக்தியெனும் தீபம் ஏந்திபடி...
-ShakthiPrabha

May 04, 2020

Essence of love




You squeezed my heart,
dripping red...
dripping blood..
amidst my death,
I colored a rose,
a red rose
symbol of love
of purity
blood rose,
red and dead
Just for you!

அயர்வு




என்னைச் சுற்றி எல்லாமே புதிதாய்
ஆடை மாற்றிக் கொண்டிருக்கிறது.
-
நான் மட்டுமே பழையதாய்
ஊசிப் போனதாய்
இன்னும் புதைக்கப்படாமல்,
எரிக்கப்படாமல்,
நினைவுகளின் பிணவறையாய்
-
புதைக்கப்பட்டிருந்தால்
புதைகுழியின் மேலாவது
பூ பூத்திருக்கும்.

April 29, 2020

அப்பாவுக்காக எழுதிய வரிகள்






அதிர்ந்து பேச அறவே தெரியாத
அடுத்தவர் பற்றி அவதூறு கூறாத
தடுத்து ஏதேனும் தவறாய் பேசாத
சாந்தமதை சிந்தையில் சுமந்தவனே
முத்துகள் சிதறிவிடுமோவென
மௌனம் காத்த பொழுதுகளில்
சத்தமின்றி தமை எழுதிச் சென்றன
நீ புகட்டிய கீதை
பார்வையின் பரிவும்
சொல்லின் மென்மையும்
சொல்லா ஆழ அன்பும்
என் சொல்லிலும் சித்தத்திலும்
நின்று வழி காட்டும்
என்றும் ஒளி கூட்டும்
(Must have written Sometime around 2004 or 2005)

The Silence




An autobiography unwritten!
Comprising white, meaningless pages,
'cause you chose not to break the Silence,
you chose not to spill the words.
Your eyes convey dead messages.
Unyielding to solve the mystery,
leaving me with unanswered questions.
Words occasionally manage to tear your lips,
shocking the surrounding rhythm of quietude!
I had once yearned for your endearing calls..
Now Silence is my preference! My habit!
Before I succumb to mortality,
You would add color to my life
Paint my lips with smile.
And, I would wait for it...
Endlessly
IN SILENCE
-
ShakthiPrabha

முன்பொரு சமயம் எழுதியது

March 09, 2020

செருத்துணை நாயனார்




தஞ்சாவூர் மருகனாட்டில் பிறந்த சிவத்தொண்டர். உள்ளன்போடு சிவத்தை வழிபட்டு தொண்டுகள் புரிந்து வாழ்ந்திருந்தார். பல்லவ அரசரான கழற்சிங்கர் தனது பட்டத்து ராணியுடன் சுவாமி தரிசனம் செய்து சிவத்தோண்டுகள் புரிய திருவாரூர் கோவிலுக்கு வருகை தந்திருந்தார். சிவ பூஜைக்கென சேகரித்த மலர் விதிவசமாக கீழே விழுந்திருந்தது. அதை அறியாத அரசியார், கீழே விழுந்த மலரை எடுத்து அதன் எழிலிலும் நறுமணத்திலும் மனதைப் பறிகொடுத்து அதனை முகர்ந்தார். அதனை கண்டு சிவ அபராதம் நிகழ்ந்துவிட்டதென துடித்து அரசியாரின் மூக்கினை அரிந்துவிட்டார். சிவ அபராதம் பொறுகாத அபிரீமிதமான அன்பை இறைவன் பால் கொண்டிருந்து, மேலும் பல காலம் நெடிது வாழ்ந்து சிவபதம் அடைந்தார்.
(பல்லவ அரசரான கழற்சிங்கரும் ஒரு நாயன்மார். இவரது வரலாறு முன்னமே நினைவுகூர்ந்தோம்)
.
ஓம் நமச்சிவாய