Showing posts with label general. Show all posts
Showing posts with label general. Show all posts

April 01, 2026

உப்புமாவிற்கு உண்டோ இணை?!

 




உயிரினும் மேலான உப்புமாவே!, (Please read it in Sivaji Ganesan's Socrates scene tone)

...
அது ஒரு காலம். சோஷியல் மீடியாவிற்கு முந்தைய அராஜக கற்காலம். தோசைக்கும் இட்லிக்குமே அரியணை என்று இருந்ததோடில்லாமல், scornful looks and distasteful comments on divine உப்புமா..
..
ஒடிசல் ரவையிலாடும்
ஊசி உப்புமாவே
ஓடிப்போ! ஓரம்போ!
ஒசையின்று தீர்ந்து போ!
தூரம்போ தூரம்போ - சிறு
தூக்கிலாடி தொலைந்து போ!
..
வலைதளங்களிலும் முகநூலிலும் இட்லி தோசைகளை கோபுரத்திலேத்தி , ஆராதனை செய்தது அதிகார உலகம்.
..
உப்புமா சட்னி சட்னியாக கண்ணீர் விட்டது.
எத்தனை விதவிதமாக நானும் என்னை அலங்கரித்துக் கொள்கிறேன்! என்னை சீந்துவாரில்லையே என்று அங்கலாய்த்தபடி உப்புமாதேவியை நோக்கித் தவமியற்றியது.
..
இட்லிக்கொரு காலமென்றால் அதை உதிர்த்த உப்புமாவுக்கு வந்ததொரு காலம். உப்புமாவின் உறவுகளான உப்பிட்டு, கிச்சடிகள் அவசரக் கூட்டம் கூட்டின. சத்தமின்றி ஒரு யுத்தம்.
..
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறியிருந்த உப்புமா உறவுகள் வலைப்பின்னலில் சிக்கி ஒன்று திரண்டனர். கடலெனத் திரண்டது உப்புமாவின் உயிரணி. உயரிய அணி.
..
இத்தனை காலம் நமக்கு அடிமை பூண்ட உப்புமாவுக்கோ உயர்வு?!! ஆச்சரியம் தாளாமல்
..
பொங்கியது பொங்கல்
தலை குனிந்தது, தட்டு-இட்லி
துவண்டது தோசை
சிந்தியது சாம்பார்
...
இட்லியும் தோசையும் அதிகார வர்கம். பிறரை அண்ட விடாமல் தனித்து நிற்கும் ஜாதிச் செருக்கு! கோஷங்கள் ஆவடி முதல் அண்டார்டிகா வரை முழங்கின. உப்புமாவின் பெயரிலேயே "அம்மா" இருக்கிறாரே. அதனால், அன்பு இருக்கிறது. கருத்துமழை
பொழிந்தது.
..
சன்ன ரவையால் சிங்காரித்திருந்த உப்புமாவுக்கு காய்கறிகளின் முழு ஆதரவு. ஆரஞ்சு காரட் ஆதரவளித்தது. பச்சைப் பட்டாணி இச்சையுடன் முத்தமிட்டது. குடைமிளகாய் அதன் தர்ணாவுக்கு குடை பிடித்தது. உப்புமாவின் நிலைகண்டு நெய் உருகியோடியது.
..
பத்து பத்து வகையில் பதவிசாக பரிமாரப்படும் சத்தான உப்புமாவுக்குண்டோ இணை!
ஜெய கோஷங்கள் உயர்த்தப்பட்டன. உப்புமாவின் ஒப்பனை முன் தலை குனிந்தது தனியாவர்த்தனம் பாடும் தோசை. உப்புமாவின் அசாதாரணமான அழகில் வெட்கியது சாதா இட்லி.
..
அரிசி முதல் சிறுதானியம் வரை ஆயிரம் அவதாரமெடுத்த ஆண்டவனென அனைவரும் உப்புமாவை தொழுதனர். இதுவரை மதியாதிருந்து அலட்சியம் செய்த பிழைக்கு அழுதனர்.
--
வென்றது உப்புமா
சென்றது எட்டுத்திக்கும்
தின்றது அழியாப் புகழ்;
பல்வகைக் காய்கள் புடைசூழ
நின்றது நிலைத்து .
..
இப்படிக்கு,
ShakthiPrabha
உப்புமா ரசிகர் மன்றத் தலைவி

March 26, 2026

திண்ணியம் முருகர்-Ancient thiNNiyam Murugar temple கல்வி, ஞானம்-திருமணதோஷம் விலக-Removes Obstacles



Ancient ThiNNiyam (திண்ணியம்) SuBramaNya swami temple, Temple has rich background promising multitude of auspicious blessings for those who believe in miracles of Murugar / ShaNmuka swami.

* Murugar as Guru blesses knowledge, wisdom and career growth. கல்வி, ஞானம், தொழில் முன்னேற்றம், உத்தியொக உயர்வு * Alleviates Navagraha dosha/ parihara for navagraha dosha. நவகிரக பரிகாரம் * Pariharam for mangal /sevaai dosha is done which removes marriage obstacles and bless the devotees with Happy Married life. திருமண தடை விலக்கும், செவ்வாய் தோஷ நிவரத்தி *Santhana gopalaswami temple, thinniyam
Follow: https://www.youtube.com/@AmirthathuLi
 

September 10, 2025

நான் ஏன் கூட்டிட்டு வரணும்?



அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் எழுதிய கீர்த்தனை - "நீ போய் அழைத்து வாடி" - இன்று காலை கேட்ட போது வாக்கேயக்காரருக்கு என்னே ஒரு அழகான சிந்தனை!! என்று தோன்றியது.
.
இந்த பாடலில் வரும் கோபிகா ஸ்த்ரீ, அவளுடைய தோழியை தூதனுப்புகிறாள். இவளே பகவானை அழைத்திருக்கலாமே! இவளுக்கு அந்தரங்கமான சியாமளன். நீல மேக வர்ணன்.
...
நீராடும் கரையில் நெருங்கிப் பேசி, நித்தமும் பிரியேன் என்று சத்தியமெல்லாம் செய்திருக்கிறான். இவளே போய் அழைக்கலாமே! அவன் என்ன சாதாரணனா? மானுடனா? பரப்பிரமம் இல்லையா, அவனுக்கு எதற்கு தூது ? என்றால்...
..
இங்கு "சகி" என்று சொல்லப்படும் கோபிகை, இன்னொரு ஜீவாத்மாவைக் குறிப்பதாக தோன்றுகிறது. அது பெண்ணாக இருக்க வெண்டுமென்ற அவசியம் இல்லை. Not gender based. எனக்கு நேர்ந்த பேரின்பமெல்லாம், அடியே சகி, உனக்கும் நேரவேண்டாமா? நீ போய் அழைத்து வாயேன்! ... 𝒶𝓷𝒹 ℯ𝔁𝓅𝓮𝓇𝓲ℯ𝓷𝒸𝓮 𝓽𝒽𝓮 𝓷ℯ𝓬𝓉𝓪𝓇 ℴ𝓯 𝓭𝒾𝓿𝓃𝓲𝓉𝔂... என்று பரோபகாரம் பண்ணுகிறாள். ஊருக்கு உபன்யாசம் செய்கிறாள்.
..
ராமானுஜர் தான் அடைந்த அனுபவத்தை ஊருக்கெல்லாம் உபதேசித்து, அவர்களும் க்ஷேமம் பெற வேண்டுமென காருண்யம் கொண்டாரல்லவா, அதை நினைவு படுத்துகிறது.
.
இந்த பாடலுக்கு நடனமணி அற்புதமாக அபிநயமும் செய்தார். இசை, நாட்டிய விருந்து.
..
அந்த நீலமேக சியாமளனிடம் கேட்க ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன. இரக்கமில்லாத நிகழ்வுகளுக்கு காரணம் கேட்டாலும், ஆயிரம் சமாதானம் சொல்வான், பத்தாயிரமே சொன்னாலும், மனம் புண்ணாகி இருப்பவர்களுக்கு, பக்குவமும் இல்லாத சாதாரணர்களுக்கு, சட்டென ஆறுவதில்லை.
..
Walking out of context....
..
அம்புஜம் கிருஷ்ணா என்று wikiல் தேடிப் பாருங்கள். "கருநாடக-பாடகியாம்". கர்னாடகம் என்றால் பழைய, தொன்றுதொட்டு, 𝖆𝖓𝖈𝖎𝖊𝖓𝖙 𝖘𝖙𝖞𝖑𝖊 𝖔𝖋 𝖘𝖎𝖓𝖌𝖎𝖓𝖌 என்று பொருட்படுத்தலாம். அது என்ன கரு-நாடகம்? உலகமே கருமையான நாடக மேடையன்றோ என்று சொல்ல வருகிறார்களோ?

August 21, 2024

பாசக்கூண்டு

அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கடைவீதிக்கு சென்ற நினைவுகள் இனியவை. பெரிய பெரிய வாகனங்கள் அவ்வப்போது விரைவதைக் கண்டு மிரண்டு, அம்மாவின் புடவைத் தலைப்பில் பாதுகாப்பு நாடிய நாட்கள். அம்மா விரைவாக நடப்பாள். அவள் பின்னே கால் நிலத்தில் பாவாமல் ஓடியிருக்கிறேன்.

.
விற்பனைக்கு வந்திருக்கும் நவீனப் பொருட்களைப் பற்றிய features அவளுக்கு அத்துப்படி. Electronic, electrical items முதல், தங்கம் வெள்ளி வரை வரை அத்தனைப் பொருட்களைப் பற்றிய அறிவும் விரல் நுனியில். அவளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று பெருமைப் பட்டிருக்கிறேன்.
..
அம்மா உனக்குத் தான் எல்லாம் தெரியும். நீயும் வாம்மா. இன்று அவளையும் கூட்டிப்போகிறோம்.
அம்மா காரிலிருந்து வெகு நிதானமாக இறங்குகிறாள். கதவைத் திறக்க சிரமப்படுகிறாள்.
அம்மா இரும்மா என கதவைத் திறக்க விரைகிறேன். மிக ஜாக்கிரதையாக இறங்குகிறாள். கடைவீதிகளில் என் கைபிடித்து அல்லது என் மகளின் கைபிடித்து தேர் போல் அசைந்து அழகாக வருகிறாள். தேடித் தேடி சில பாரம்பரிய பொருட்களை எங்களுக்காக வாங்கி பையில் திணிக்கிறாள்.
.
ஒவ்வொரு கடையும் சின்ன mall போல பிரம்மாண்டம் என்பதால், சற்று நேரத்திலெல்லாம் அயர்ச்சி அடைந்து விட்டாள்.
பாக்கிய நீங்களே வாங்கிண்டு வாங்கோ. நான் இங்கயே wait பண்றேன்.
கடையை விட்டிறங்கி விரைந்து வரும் வண்டிகளை பார்த்து மிரண்டு என் கையை இறுக்கிப் பிடிக்கிறாள்.
.
உடலெனும் பையை சுமக்கும் ஜீவன் நாம். பிறந்து வளர்ந்து க்ஷீணிக்கும் உடலுக்கு வலு குறையத் துவங்குகிறது.
பிறவிகளின் பாடங்கள் கற்றபின் அவரவர் பாதையில் பறந்துவிடும் நிலையற்ற பயணம்.
உறவுகளின் பெயர்களும் வடிவங்களும் தொடர்வது இல்லை.
..
பிறவிகள் தோறும் கணக்கற்ற அம்மாக்கள், அப்பாக்கள், வாழ்க்கைத் துணைகள், மகன்கள் மகள்கள் காதலர்கள், காதலிகள், அத்தைகள் மாமன்கள்... ... எவரும் அதே கூடுகளில் தங்களை அடைத்துக் கொண்டு நமைத் தொடர்வதில்லை. அவர்கள் தாங்கும், தாங்கப்போகும் வடிவங்களிலும் அதன் தரமும் நிரந்தரம் இல்லை.
.
இத்தனை தெரிந்தும் பந்தமும் பாசமும் குறைவதே இல்லையே!!!
.
அன்புக்குரியவர்களிடம்....நான் மீண்டும் மீண்டும் மீண்டும் தோற்றுவிடுகிறேன். அவர்களின் அன்புப் பிடியில் வகையாக சிக்கிக் கொண்டு விடுகிறேன். ஆத்மஞானத்துக்கான ஆன்மீகத்தேடலெல்லாம் சும்மா நடிப்பு,
மனதில் ஓரத்தில் ஏதேதோ நினைவுகள் ஈரமாக கசிந்து கண்களை நனைக்கிறது.
ShakthiPrabha