Showing posts with label Nirguna upasana. Show all posts
Showing posts with label Nirguna upasana. Show all posts

January 19, 2018

Lalitha Sahasranama (152 - 163) தமிழ் விளக்கத்துடன்




NirguNa upasana

NishkaaraNa;
NishkaLanka;
Nirupaadhi;
Nireeshwara;
Niraaga;
Raaga-mathani;
NirMadha;
MadhaNashini;
Nishchintha;
NirAhankaara;
NirMoha;
MohaNashini;


() kaaraNa = reason - cause
# NishkaaraNa = She who is without cause - Primary origin who needs no cause

() kaLanka = stain - dishonour
# NishkaLanka = Who is flawless

() upaadhi = quantification - qualification - limitation - attribute
# Niroopaadhi = Who is infinite - who is limitless - who cannot be defined

() ishwara = Supreme being - superior - the Master - Lord
# Nir-Ishwara = She who has none superior - ie. She who is the Supreme power

() raaga = desire - sense gratification - colored
# Niraaga = Who is beyond desire or gratification of desires

() Mathana = to destroy
# RaagaMathani = Who destroys the passion ie. wordly attachment/desires (of her devotees)

() Madha = Pride - arrogance
# NirMadha = She who is without pride

# MadhaNashini = she who destroys pride
() Chintha = worry - anxiety

# Nishchintha = Who is without anxiety or worry
() Ahankaara = Ego (arising from senses and three gunas)

# Nirahankara = Who is devoid of Ego
() Moha = distraction - confusion - delusion
# NirMoha = Who is free from illusions - who is un-clouded

# Mohanaashini = Who destroys deceptions and delusions of her devotees

* Note: It is to ber undestood her NirguNa qualities are spoken from the highest state of prescence equating her state of existence as to that of parabrahman or root-cause.

(to continue)

லலிதா சஹஸ்ரநாமம் (152 - 163)

நிர்குண உபாசனை

நிஷ்காரணா;
நிஷ்களங்கா;
நிரூபாதி;
நிரீஷ்வரா;
நீராகா;
ராகமதனீ;
நிர்மதா;
மதநாசினீ;
நிஷ்சிந்தா;
நிர்அஹங்காரா;
நிர்மோஹா;
மோஹநாசினீ;


() காரண = காரணம் - ஆதாரம்
#152 நிஷ்காரணா = முதன்மையானவள் - மூலமாக திகழ்பவள் ( இருப்புக்கான காரணம் அற்றவள் )

() களங்க = மாசு - கறைபடிதல்
#153 நிஷ்களங்கா - குறைபாடற்ற முழுமைத்தன்மை உடையவள்

() உபாதி = தகுதி - நிர்ணயம் - வரம்பு - பண்பு - ஏற்றிக்கூறல்
#154 நிரூபாதி = வரையரறையற்றவள் - எல்லையற்று எல்லாமாகவும் விளங்குபவள்

() ஈஷ்வர = தலைவன் - முதலானவன் - இறைவன்
#155 நிரீஷ்வரா = தனக்கு அப்பாற்பட்ட தலைமை இல்லாதவள்

() ராக = ஆசைகள் - அபிலாஷைகள் - புலனின்பத்திற்கு உரியவை
#156 நிராகா = புலன்களின் இச்சைகளுக்கு கட்டுப்படாதவள்

() மதன = அழித்தல் - நாசமாக்குதல்
#157 ராகமதனீ = லோகாபிலாஷைகளை அழித்து ரக்ஷிப்பவள்

() மதா = தற்பெருமை - ஆணவம் - கர்வம்
#158 நிர்மதா = செருக்கு அற்றவள்

#159 மதநாசினீ = கர்வத்தை அழித்தொழிப்பவள்

() சிந்தா = கவலை - பதட்டம்
#160 நிஷ்சிந்தா = உளைச்சலற்ற தெளிந்த சிந்தனையுடையவள்

() அஹங்கார = மமதை
#161 நிரஹங்காரா = அஹங்கார மமகாரங்கள் அற்றவள்

() மோஹ = மாயை - குழப்பம் - கவனச்சிதறல்
#162 நிர்மோஹா = மாயைகளுக்கு அப்பாற்பட்டவள்

#163 மோஹநாசினீ = மோக-மாயைகளை நாசம் செய்பவள் (தன்னை சரண் புகுதவர்களுடைய)

* குறிப்பு: நிர்குணப் பெயர்கள், அம்பாளின் உயரிய இருப்பு நிலை, தெய்வ நிலை இருப்பை உணரந்து சொல்லக்கூடியவை. அவளே பரப்ப்ரம்ம ரூபிணி, காரண காரியமாக விளங்குபவள் என்ற நிலையில் உணரப்படுபவை.

(தொடர்வோம்)

December 29, 2017

Lalitha Sahasranama (132 - 140) (தமிழ் விளகத்துடன்)




Nirguna Upasana

Niraadhara;
Niranjana;
Nirlepa;
Nirmala;
Nithya;
Nirakara;
Nirakula;
NirguNa;
Nishkala;

() Adhaara = Support - foundation

# 133 Niradhara = She who is without support (self-sufficient) - She who is not dependant

() Ranjana = colored - painted

# 134 Niranjana = Who is unshaded (i.e. beyond shades of creation and resultant raaga-dvesha)

() lepa = stain - impurity

# 135 Nirlepa = Who is spotless

() mala = dirt

# 136 Nirmala = Who reflects blemishless purity

#  137 Nithya = Who is permanent in nature

() aakar = form-shape and size

# 138 Niraakara = Who has no appearance or features- who is formless

() aakula = agitated - anxious

# 139 Nirakula = She who is non agitated

() GuNa = possessing qualities or conditioned by three guNas (sathwa - rajas - Tamas)

# 140 NirguNa = She who is Beyond characteristics or traits - who is unconditioned

() kala = part of the whole, part of something bigger

# 141 Nishkala = She who is the undivided totality

Note: 'Nir or nis' when it is used as prefix to any word mostly negates to mean "away from" or "out of" the attributes which follows the syllable. 

லலிதா சஹஸ்ரநாமம் (132 - 140)

நிர்குண உபாசனை

நிராதாரா;
நிரஞ்சனா;
நிர்லேபா;
நிர்மலா;
நித்யா;
நிராகாரா;
நிராகுலா;
நிர்குணா;
நிஷ்கலா;

() ஆதார = பிடிப்பு - அஸ்திவாரம்

# 132 நிராதாரா = சுவாதீனமானவள் - தன்னிரைவுற்றவள்

() ரஞ்சனா = வண்ணங்கள் - நிறங்களால் சாயம் பூசப்பட்டவை (புலன்களை ரஞ்சிக்க செய்பவை)

# 133 நிரஞ்சனா = புலங்களுகளின் பேதங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் - வர்ண / உருவ / மனோ பேதங்களுக்கு புலப்படாதவள்

() லேபா = களங்கம்

# 134 நிர்லேபா = களங்கமற்றவள்

() மல = அழுக்கு

# 135 நிர்மலா = தூய்மையானவள்

# 136 நித்யா = நிரந்தரமானவள்

() ஆகார் = உருவம் / வடிவம்

# 137 நிராகாரா = வெளிதோற்றத்திற்கு அப்பாற்பட்டவள் - அருவமானவள்

() ஆகுலா = உளக்குழப்பம் - பதட்டம்

# 138 நிராகுலா = ஆரபாட்டமற்றவள் - தெளிந்தவள்

() குணா = முக்குணங்களைக் குறிப்பது (சத்வம்- ரஜஸ்- தமஸ்)

# 139 நிர்குணா = முக்குணங்களுக்கு ஆட்படாது அதற்கு அப்பாற்பட்டவள்

() கலா = முழுமையின் ஒரு கூறு

# 140 நிஷ்கலா = முழுமையின் வடிவம் - பூரணத்தின் தத்துவமானவள்

குறிப்பு: "நிர்"- நிஷ் போன்ற பதங்கள் முற்சேர்க்கைகளாக (prefix) வரும் பொழுது, தொடர்ந்து வரும்  பெயரடை அல்லது வினைச்சொற்களின் பொருளை 'இல்லை' என மறுக்கும் கூற்றாக உணரப்படுகிறது.