Showing posts with label Nirguna. Show all posts
Showing posts with label Nirguna. Show all posts

January 22, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (164 - 175) (with English Meanings)




நிர்குண உபாசனை


நிர்மமா;
மமதாஹந்த்ரீ;
நிஷ்பாபா;
பாபநாசினீ;
நிஷ்க்ரோதா;
க்ரோதஷமனீ;
நிர்லோபா;
லோபனாசினீ;
நிஸ்ஸம்ஷயா;
சம்ஷயக்னீ;
நிர்பவா;
பவநாசினீ;

() மம / மமதா - சுயம்-சுயம் சார்ந்தது- தன்னலம் - தான் /தனது

# 164 நிர்மமா = தன்னலமற்றவள் ie. இருமையற்ற ஒருமைப்பாட்டின் தத்துவமாக விளங்குபவள் என்பதால் 'மமகாரங்கள்' அர்த்தமற்றதாகிறது.

() ஹந்த்ரீ = அழித்தல்

# 165 மமதாஹந்த்ரீ = மமகாரங்களை ஒழிப்பவள்

() பாபா = பழி-பாவம் - குற்றச்செயல்

# 166 நிஷ்பாபா = பாபங்களுக்கு ஆட்படாதவள்

# 167 பாபநாசினீ = பாவங்களை நசுக்குபவள்

() க்ரோதா = கோபம் - ஆத்திரம்

# 168 நிஷ்க்ரோதா = சினத்திற்கு ஆட்படாதவள்

() ஷமன = சாந்தபடுத்துதல் - தணிவித்தல் - (மேலும்) - நிறுத்துதல் - அழித்தல்

# 169 க்ரோதஷமனீ = சினத்தை தணிப்பவள் - அல்லது - சினத்தை அழிப்பவள்

( * ஷமன என்றால் அமைதிப்படுத்துதல் அல்லது சாந்த்தபடுத்துதல், ஷமன என்பது நிறுத்துதல் அல்லது அழித்தலையும் குறிக்கும், அவரவர் கோணத்தில் அர்த்தம் மாறுபடலாம் )

()  லோபா  =  பேராசை

#   170  நிர்லோபா = பேராசைக்கு உட்படாதவள்

# 171 லோபநாசினீ = பேராசையை நாசமாக்குபவள் (பக்தர்களின் தவறான ஆசைகளை முறைப்படுத்துபவள்)

() ஸம்ஷயா = சந்தேகம் - நம்பகமற்ற

# 172 நிஸ்ஸம்ஷயா = ஐயங்களுக்கு அப்பாற்பட்டவள்

( * இந்த நாமத்தை பக்தர்களின் கண்ணோட்டதிலிருந்து புரிய முற்படும் போது அம்பாள் சந்தேகத்திற்கு இடமின்றி நித்ய-தத்துவமாக தன் இருப்பை நிலை நிறுத்துவதாக அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம் )

# 173 ஸம்ஷயக்னீ = ஐயங்களை தகர்ப்பவள் ( ஐயங்களை தகர்த்து தெளிவை உண்டு செய்பவள் )

()  பவ  = மூலம் - ஆரம்பம்

#  174  நிர்பவா - ஆரம்பமும் முடிவும் அற்றவள் - அனாதியானவள்

# 175 பவநாசினீ - பிறப்பு-இறப்பு சுழற்சியை தகர்ப்பவள் ( பிறப்பு இறப்பின் காரணமான கர்மாவை தகர்ப்பவள் )

(தொடர்வோம்)


Lalitha Sahasranama (164-175)


Nirguna Upasana


Nirmamaa;
Mamathaa-hantri;
Nishpaapaa;
PaapaNashini;
NishkrOdha;
KrodhaShamani;
NirLobha;
LobhaNashini;
Nihsamshaya;
Samshaayagnee;
Nirbhava;
Bhava-nashini;


() mama / mamatha = sense of ownership - me and mine - self interest


# 164 Nirmamaa = Selfless - Associated as "the whole" *There is no duality but perception of only unity


() hanthri = destroy - kill


# 165 Mamatha-hantri = She who slays self-oriented discriminations


() paapa = misdeed - unholy


# 166 Nishpaapaa = Who is without vice i.e who is virtuous


# 167 Paapa-nashini = Who is the destroyer of sins


() Krodha = wrath - anger


# 168 NishKrodha = She who is without anger i.e who is calm and peaceful

() Shamana = to ease - appease - (also) stop

# 169 KrodhaShamani = Who tames / quietens or destroys anger

( *shamana means to quieten or pacify, it also means to put an end. We can understand the name as per our vision. )

() Lobha = covetous - greed

# 170 Nirlobha = Who is without avarice

# 171 Lobha-nashini = Who destroys greed (in devouts)

() samshaya = hesitant-dubious in nature-doubt

# 172 Nihsamshaya = She who is without doubt

( *We can also understand the name as realization of a devotee towards her. She whose prescence is certain. Whose existence is without doubt. )

# 173 samshayaghni = Who destroys uncertainty ( grants clarity)

() Bhava = origin

# 174 Nir-bhava = Who is without origin (who is the prime cause -Anaadhi)

# 175 Bhava-Nashini = Who destroys the origin of birth i.e. cycle of birth and death (destroys never ending karmic cycle or samsara)

(to continue)


January 11, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (141-151) (with English meanings)





நிர்குண உபாசனை


ஶாந்தா ;

நிஷ்காமா;
நிருபப்லவா;
நித்யமுக்தா;
நிர்விகாரா;
நிஷ்ப்ரபஞ்சா;
நிராஷ்ரயா;
நித்யசுத்தா;
நித்யபுத்தா;
நிரவத்யா;
நிரந்தரா;


141 # ஶாந்தா = சாந்தம் பொருந்தியவள்

() காம = அபிலாஷைகள் - இச்சை

142 # நிஷ்காமா = ஆசைகளின் பிடிகளுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் - தன்னில் நிறைவு காண்பவள் *

() உபப்லவா = நாசம் - பேரழிவு

143 # நிருபப்லவா = அழிவற்ற தன்மையுடையவள்

() முக்தா = விடுதலை - சுதந்திரம்

144 # நித்யமுக்தா = சாஸ்வத நிலைபேறுடைய முக்தியில் (உலக இச்சை ஆசாபாசங்களினின்று ) நிலைத்து நிற்பவள்

() விகார = வடிவம், தன்மை இயல்பு முதலியவற்றின் மாறுதல்

145 # நிர்விகாரா = பேதமற்றவள் - மாறுதலுக்கு உட்படாதவள்

() ப்ரபஞ்ச = விஸ்தரிப்பு - விரிவாக்கம் - அவதரிப்பு - உருவாக்கம்

146 # நிஷ்ப்ரபஞ்சா = ப்ரபஞ்ச தோற்ற-விரிவுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் (அதனை தன் வசம் வைத்துள்ளவள் என்று புரிந்து கொள்ளலாம்)

() அஷ்ரய = சார்பு நிலை - சார்ந்திருத்தல் - ஆதாரமான

147 # நிராஷ்ரயா = சுயம்புவானவள் - எதனையும் சாராதிருப்பவள் - சுவாதீனமானவள்

() ஷுத்த = நிர்மலமான - சுத்தமான

148 # நித்யசுத்தா = என்றென்றும் அப்பழுக்கற்று விளங்குபவள்

() புத்தா = ஞானம் - அறிவு

149 # நித்யபுத்தா = நிரந்தர ஞானி = அறிவாகி நிற்பவள்

() அவத்யா = குறைபாடு - தரம்தாழ்ந்த

150 # நிரவத்யா = உயர்வானவள் ; மேம்பட்டவள் ; முழுமையானவள்

() அந்தரா = பிரிவு - பிரிவுக்குட்பட்ட - காலகதிக்கு உட்பட்ட - கால இடைவெளிக்கு உட்பட்ட

151 # நிரந்தரா = எங்கும் நிறைந்திருப்பவள்

குறிப்பு: நிஷ்காமா, நித்யசுத்தா, நிரவத்யா முதலிய பல பெயர்களின் அடிப்படை அர்த்தங்கள் , ஆழ்ந்த கருத்துக்கள் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவை.  அன்னையானவள் ஆசைகளுக்கும் பாசங்களுக்கும் கட்டுப்படாதும் அதன் தன்மைகளை சாராதும் தனித்திருப்பவள் . சுத்தம்-அசுத்தம் போன்ற இரட்டைகளுகளுக்கு எட்டாது விளங்குபவள் . நேர கால கதிகளின் ஓட்டத்துக்கு அப்பால் திகழ்பவள். அவள்  தனித்துவத்தை, இயல்பை சில பெயர்களில் அடக்கி விட சாத்தியமற்றது. அம்பிகையின் பூரணத்துவத்தை எவ்வித சார்பு நிலையுடனும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. அவள் தாங்கும் நுண்மைத் தன்மையை எப்பெயர்களிலும், வார்த்தைகளிலும் வர்ணித்திட இயலாது.


(தொடர்வோம்) 



Lalitha Sahasranama (141 - 151 )


NirguNa upasana



Shantha;
Nishkaama;
Nirupaplavaa;
Nithya Muktha;
Nir-vikaara;
Nishprapancha;
Niraashrayaa;
Nithya-Shuddha;
Nithya Buddha;
Niravadhya;
Nirantharaa;


141 # Shantha = She who is serene-tranquil

() Kaama = desire

142 # Nishkaama = Who is beyond desires - who is fulfilled or contained in herself *

() upaplava = devastation - calamity

143 # Nir-upaplava = She who is indestructible

() Muktha = free - liberated

144 # Nithyamuktha = She who is ever liberated from worldly ways

() Vikaar = To change form structure or nature

145 # NirVikaara = Who is constant and consistent (un varying)

() Prapancha = expansion-manifestation

146 # Nishprapancha = Who is beyond manifestation or creation of universe i.e. who is the very root cause

() ashraya = base- dependance- parent

147 # Nir-ashraya = Who is not resting on anything - independant

() Shuddha = pure - clean

148 # NithyaShuddha = Who is eternal purity

() Buddha = enlightened

149 # NithyaBuddha = The ever enlightened - embodiment of gyaan

() avadhya = imperfect - inferior (with defects)

150 # Niravadhya = Who is exemplary - flawless

() antara = division, interval space or timegap

151 # Nirantharaa = Who is all-pervading

Note: It might help to understand that, Names like Nishkaama, Nithyashudha, niravadhya etc talks about her attributes which are beyond human nature to comprehend. She is beyond desire, beyond dualities like 'impurity-purity',  beyond perfection, beyond time. She is "absolute" and will not be compared to any relative terms. She cannot be completely described in even in thousand Names. Some abstract attributes of hers cannot be contained in any words or names.