Showing posts with label மாதவி. Show all posts
Showing posts with label மாதவி. Show all posts

October 30, 2009

ஒருவனுக்கு வேறொருத்தி


விலகி ஓடும் உறவை எட்டிப் பிடிக்க
பழுத்து உதிரும் பூவை தக்க வைக்க
கிழக்கில் உதிப்பதை மேற்கில் மாற்ற
இறைவியோ இவள் திருத்திப் பார்க்க

வேறொருத்தியை நாடியதால்
வேரறுந்து சாய்ந்த தாம்பத்திய மரம்
வேற்றுப் பூவை நுகரத்துடித்து
ஆட்டம் முடித்து அழுது களைத்து
ஒட்டிக்கொள்ள உயிர்த்தெழும் போது
தொடுவானமாய் துவண்ட உறவில்
தொலைதூரம் தொலைந்த தலைவி

நினைவு அவன் பாரம் சுமக்கலாம்
சுமக்காமல் மலடியாய் மரிக்கலாம்
அவன் தேடி வரும் வேளையில்
அவள் புள்ளியாய் பெயரின்றி கரைந்துவிடலாம்
திரும்பி வரும் கோவலனை
விரும்பி ஏற்கும் கண்ணகிகள்
இப்பொழுதெல்லாம் பிறப்பதில்லை