Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

January 11, 2018

சுவடுகள்



இன்று நேற்று நாளை என கடந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை அங்கங்கு தெறிக்கும் வார்த்தைகளெல்லாம் அன்பாக பிரிவாக கூடலாக காதலாக பரிவாக பாடமாக பரிமளித்துக் கொண்டே நகர்கின்றன.
வெவ்வேறு பெயர்களைத் தாங்கி உறவுகளைத் தாங்கி நீரூற்றேன பொழிந்து கொண்டே இருக்கும் உணர்வுகள் நனைந்து கொண்டே நகரும் நாம்
எவரும் வெறும் நினைவுகளாக நின்று விடுவதில்லை ஊணில் உயிரில் அங்கமாகி தங்கிவிடுகின்றனர்.
துவைதம்-உதறி அத்வைதமென கலக்கும் வரையிலும் பயணமெங்கும் தொடர்கிறோம் விலகியும் நெருங்கியும் சில நேரம் விலகாமலும் நெருங்காமலும்