Showing posts with label அதிகாலை. Show all posts
Showing posts with label அதிகாலை. Show all posts

August 17, 2010

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (3)

இன்னும் அஞ்சே நிமிஷம்
________________________


ஒளிகீற்றின் முதல் முத்தம்
சலனத்துடன் அணுகும் முன்பே
பதறியடிக்கும் அவசரமில்லை.
வெளிக்காற்றின் குளிச்சிக்கு
வெதுவெதுப்பாய் பதுங்கி
நிலா முகத்திற்கு முக்காடு பூட்டி
உலா வரும் கோடூரத்திற்கு
இன்று மட்டும் விடுமுறை.
கதிரவனின் அலறல் கட்டில் வரை ஒலித்தாலும்
அலட்சியமாய் உதறித் தள்ளி
துயில் கலைந்த பின்னும் முரண்டு பிடித்து
புரண்டு சுகித்து
காதல் கணவன் கையில்
காபியுடன் சிரிக்கும் வரை
எழாமல் இருப்பதே
சுகமானதொரு காலையின் அகராதி விளக்கம்।

-ஷக்திப்ரபா