February 25, 2026

கவிச் சின்னங்கள்

 



கவிதொகுத்த 
கற்றைப் பூச்செண்டின்
ஒற்றைச் சரத்தை
மெல்ல நிமிர்த்தி
மொட்டு விரியவே
மெல்லிசைக் கோர்த்து - புது
மெட்டமைத்து மேடையேற்றி
பட்டுவண்ண  நூல்நூற்று 
ஒளிப்பெருக்கி; 
பட்டித் தொட்டியெங்கும்
ஒலிப்பெருக்கியதில், 
அமுதென  எழுந்தது நாதம்
மெழுகென நெகிழ்ந்த நேயர்கள்
ஊனெனும் ஓலையில் 
உயிரெனும் -மைத்தொட்டு
உணர்வுகளால்
எழுதிச் சென்றனர்.
ஒரேயொரு கவிதைக்கு
ஒவ்வொரு முறையும்
ஆங்கே புனையப்படும்
ஓராயிரம் கவிதைகள்! 

           (ShakthiPrabha) 

February 23, 2026

சிவன் அடியவராகவே வாழ்ந்த அரசர் - கழற்றிற்று அறிவார்







Kazhatritru arivaar கழற்றிற்று அறிவார் Nayanmar, who was blessed to be an affectionate companion of Sundarar. His life is filled with Surreal episodes. He composed one of his final tribute to Lord Shiva, after reaching Kailash.
 

February 15, 2026

 




அண்டமே அகண்டமே

ஆனந்த ஜோதியே

ஆதியுமான பொருளே

ஆணுமல்லாத

பெண்ணுமல்லாத

ஆதாரமான நிலையே

..

திந்திமி திமிதிமியென

பிரபஞ்சம் விழித்தெழ

நாதமென எழும் நாதனே!

இடதுகாலைத் தூக்கி

இயக்கத்தை காட்டியே

நடமாடிடும் எம் ராஜனே!

..

பற்றற்ற வித்தின்

பரம்பொருள் ரூபமே

பரிபூரணானந்தனே!

பொன்னாபரணங்கள், 

மேற்பூச்சு வேண்டாத, 

பொன்னார் மேனியனே!

..

தனியனே! தலைவனே!

தாயுமானவனே..

உமைபாகனான  வரமே!

சிந்தையில் புகுந்த 

எந்தையே எழிலே

சித் அம்பரத்தின் அருளே!

..

மங்கலங்கள்  நிறைந்து  

உயிரெலாம் உயரவே 

அம்பலனே   அபயமென்று,

சங்கடங்கள் தீரவே

சங்கரனைப் பற்றினோம் ..

சிவமே! பவமே! எம் தவமே!

..

தவவிரதங்கள் ஏற்றே

அம்பிகை நாடிடும் 

அதிரூப சுந்தரனே! 

இன்னல்களைக் களைந்து

ஐயங்கள் போக்கிடும்

அத்தனே!  அன்பின் அமுதே!

..

காணும் காட்சியெலாம்

சின்மய ரூபமே....

ஹரஹர சிவசிவ  நமச்சிவாயமே

சிவசிவ ஹரஹர   நமச்சிவாயமே

-

எழும் ஓசையெல்லாம்

சின்மய ரூபமே 

ஹரஹர சிவசிவ  நமச்சிவாயமே

சிவசிவ ஹரஹர   நமச்சிவாயமே


ShakthiPrabha


February 14, 2026

அன்புள்ள எனது காதலர்களுக்கு



கண்டதை எழுதி
கணப்போழுது கழியாது
காதலர்தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
உள்ளமதை விரித்து
உனையே எங்கும் காணும்
உன்னத நிலையதனை
தேடிப் போகிறேன்
காதலர்தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
அபின்னமாகவே
அனைத்தயும் அளக்கும்
அற்புத கலைக் கண்ணை
நாடி போகிறேன்
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
ஆங்கோர் உலகில்
அனந்தமென நிலைத்து
ஆனந்த வெள்ளத்தை
சுவைக்கப் போகிறேன்
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
கண்டவர் மேல் கொள்ளும்
அன்பும் பாசமும்
காதலும் நேசமும்,
காலணா காசுக்கும்
காட்சிப் பெறாதே!
கண்ணனவன் நெஞ்சமதே
தஞ்சமெனப் போகிறேன்
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
கால வெள்ளத்தின் கரையில்
தொலை தூரத்தில்;
தூய மாடத்தில்;
தோரணம் நாட்டி
காத்திருப்பேன்..
உனை எதிர்பார்த்திருப்பேன்...
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
வந்து சேர்ந்துவிடு
வராமல் மறுப்பவரை
வருந்தி அழைத்துவிடு
கமலக் கண்ணனுடன்
காதலாகிக் கலந்திடுவோம்
சிறுசேவைகள் சாதித்து
பணி செய்திடுவோம்
மலர்களால் மாலைகட்டி
அணி செய்திடுவோம்
..
வாடித் துவளும்
பிறவியைச் சாடுவோம்
மாதவன் மட்டுமே
மாதவம் என்றே
பாடிப் பணிவோம்
ஆடிக் கொண்டாடுவோம்
.....
காதலர் தினத்துக்கெல்லாம்...
இதோ எனது கவிதை
உனக்கும்- எனக்கும்
அவனுக்கும் அவளுக்கும்
அன்னைக்கும் தந்தைக்கும்
பிள்ளைக் குலத்துக்கும்
அறிந்துமறியாத
அத்துனை உயிருக்கும்
புனைந்த கவிதை
💐 ShakthiPrabha 💐