October 24, 2018

பறந்து பறந்து திரிந்து




உயர உயரப் பறந்து
ஊரெல்லாம் சுற்றித் திரிந்து
ஓடுகளத்தின் மூலையில்
ஓசையின்றி ஒதுங்கியிருக்கிறேன்.
அங்கும் இங்கும் எங்கும்
வானளக்கும் ஊர்திகள்.
பறந்து, தனை மறந்து
மேகக் கோட்டை கட்டும்
காற்றடைத்த பொட்டலங்கள்.
என்னருகே மற்றோன்று
தாவிக் களைத்ததில்
மெதுவாய் மூச்சிரைத்து
தரையிறங்கித் தளர்கிறது.
தூரத்தில் வேறொன்று
காற்றில் கைகள் வீசி
வண்ணக் கனவுகள் நிரப்பி
மெருகேற்றி மின்னி...
சுழற்சி விசையின் முதல்படியில்..

2 comments:

  1. ஒரு வானூர்தி கிளப்பும் சிந்தனைகள்

    ReplyDelete
  2. ஆம். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete