இது போன்றதொரு காலை வேளையில்
உன் தெளிவான கேள்விக்கு
என் திமிரான பதில்.
உனக்கு நினைவிருக்கிறதா?
உன் சில்மிஷப் பார்வைகளில்
நான் எனை மறந்த பொழுதுகள்
உனக்கு நினைவிருக்கிறதா?
பாராமல் பார்த்த கணங்களில்
தொக்கி நின்ற வினாக்களும்..
விடையறியாமலே நாம்
விடைபெற்ற பொழுதுகளும்..
நினைவிருக்கிறதா?
வினாவுக்கான விடையாகவோ
தேடலுக்கான முடிவாகவோ
வலிக்கும் நினைவுகளின்
வலுக்கும் பாரங்கள்.
நினைவுகள் நிஜங்களாகும் வரை...
நீ சுவாசித்த காற்றை
நானும் ஸ்பரிசித்து,
நீ கூறிய வார்த்தைகளை
அலுக்காமல் அசைபோட்டு,
கனவுத் தொழிற்சாலையில்
கதை வசனம் எழுதியபடி..
தனியாக நான்.
***
wow is the word :) your writing is too good.
ReplyDeletebtw if you want your comments to be listed in thamizmanam.com, please enable moderation. or else it will not be collected there
This comment has been removed by the author.
ReplyDeletethanks azhagan for ur encouraging words.
ReplyDeleteI am finally made up my mind to list the blog :)
ம், இப்படியான அனுபவங்கள் எனக்கும் நேர்ந்திருக்கிறது, நீங்கள் அதை அழகாக கவிதை வடித்துவிட்டீர்கள்.
ReplyDeleteவினாவுக்கான விடையாகவோ
தேடலுக்கான முடிவாகவோ
வலிக்கும் நினைவுகளின்
வலுக்கும் பாரங்கள்.
excellent
நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா :)
ReplyDeletenice
ReplyDeletethanks prabhu. :)
ReplyDelete///பாராமல் பார்த்த கணங்களில்
ReplyDeleteதொக்கி நின்ற வினாக்களும்..
விடையறியாமலே நாம்
விடைபெற்ற பொழுதுகளும்..
நினைவிருக்கிறதா?///
காதலை எழுதுவதற்கு வார்த்தைகள் கோடானுகோடி இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டே இருக்கிறது!!
படு சூப்பர்!!!
தேவா...
//thevanmayam said...
ReplyDeleteகாதலை எழுதுவதற்கு வார்த்தைகள் கோடானுகோடி இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டே இருக்கிறது!!
படு சூப்பர்!!!
தேவா...
//
நன்றி தேவா :) நான் மிகவும் ரசித்து எழுதிய பதிவில் (என்னுதையெல்லாம் கவிதைன்னு நான் சொலுவதில்லை :embarassed: இதுவும் ஒன்று :)
நன்றி :)
This comment has been removed by the author.
ReplyDelete