சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
July 04, 2015
June 16, 2015
குரு வந்தனம் - மஹாபெரியவா சரணம்.
1993 ஆண்டு பெரியவாளைப் பார்க்கவும் என் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வாங்கவும் நான் என் பெற்றொருடன் சென்றிருந்தேன். பல ஆண்டுகள் கழித்து அன்று தான் அவரை அருகில் காணும் பாக்கியம் கிடைத்தது. சிறுமியாய் இருந்த பொழுது இரு முறை கண்டிருக்கிறேன். பெரிதாக எதுவும் பேசியதில்லை. பேசும் பக்குவமும் இல்லை.
ஆனால் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வாங்க சென்ற பொழுது, அவரைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது உண்மை. இத்துனை வயதாகி விட்டதே இவருக்கு. நினைவு இருக்குமோ தெரியவில்லை. அவர் பார்ப்பதும் ஆசீர்வதிப்பதும் அவருக்கு உணர முடியுமோ புரியவில்லை. 'உடல் தளர்ச்சி-மூப்பு' போன்ற விஷயம் எத்தனை பெரிய மனிதரையும் பொம்மையாக்கிவிடுகிறதே என்று நினைத்து வருந்தினேன்.
ஆசீர்வாதம் செய்து பொழுதும் கூட அவர் 'தன்- நினைவில்' பூர்ணமாய் இருப்பாரோ இல்லையோ என்றே என் மனம் பரிதவித்தது.
இத்தனை வருடங்கள் கழித்து இந்த மரமண்டைக்கு உரைக்கிறது, அவர் வயதையும் மூப்பையும் கடந்தவர் என்று. வெளித் தோற்றத்தை மட்டுமே கண்டு ஒரு ஞானியை உணர முடியாத முட்டாளாகவே என் மதிப்பிற்குறிய குரு முன் இறுதியாக நின்றிருந்தேன்.
அவரைப் பற்றி பெரிய குரு பக்தி கூட இருந்ததில்லை. அப்பாவும் தாத்தாவும் எங்கள் வீட்டில் ஆச்சார்யரின் படம் வைத்திருந்தனர். அதை எல்லாம் பக்தியுடன் பார்த்ததும் இல்லை.
அவரே என்னை ஆட்கொண்ட சம்பவம் நடந்த வரை...இப்படித் தான் இருந்திருக்கிறேன்.
என்னையும் ஒரு பொருட்டாய்க் கருதி அவர் தம் கடைக் கண் பார்வை செலுத்தி, அருள் சுரந்து என் மனதுள் குருவாய் உயர்ந்த என் ஆச்சார்யருக்கு கோடி வந்தனங்கள்.
April 05, 2015
நிரந்தர வரம்
கதைகளில்
கவிதைகளில்
வார்த்தைகளில்
வசனங்களில்
சொற்களில்
சொல்லாமலே சென்ற
முட்களில்
பாடல்களில்
ராகங்களில்
உணர்வுகளைத்
தேடித் திரிந்து
தேகம் நலிந்து
வருடங்கள் தொலைந்து
வருத்தங்கள் மெலிந்து விட்ட போதிலும்
மலிந்து விடவில்லை நம் காதல்
உன் நினைவுக் கிடங்குகளில்
புன்னகைத்து
பன்னீர்ப் பூச்சொரிகிறேன்
பிரார்த்தனைகளால்
பாலமிட்டு மிளிரும்
தெய்வீகக் காதல்
-ஷக்திப்ரபா
March 18, 2015
பிம்பங்கள்
நிலையாமையின் நிஜம்தன்னை
அறிவிக்கும் நிலைக்கண்ணடித்
தருணங்கள்.
^
நயமாய் உரைத்து
நிகழும்
உடல் பரிணாமத்தை
உரித்தே காட்டிடும்.
^
சுருக்கமாய் உணர்த்தும்,
உடலின் நிலைதன்னை...
நாளும் பலகிளைகள்
தாவிப் பரிதவிக்கும் மனம்தன்னை,
அகத்தின் எழில்தன்னை.
^
சேர்த்தே சேமித்து
ஒளியூட்டி கொக்கரிக்கும்
வண்ணத்தின் தொலைந்த
ஸ்ருங்காரங்கள்
எண்ணத்தின் சுருங்கிய
பிரதிபலிப்புகள்
அல்லது மலரென மலர்ந்த
முதிர்ச்சிக் கோடுகள்.
-ஷக்திப்ரபா-
November 20, 2014
புத்தர்கள் - zen poem - தமிழாக்க முயற்சி
Hakuin Ekaku ஜென் மதத்தில் பெரிதும் பேசப்பட்டவர். ஜென் மதத்தின் புகழ்மிக்க சீர்த்திருத்தவாதி.
அழகிய இளம் பெண் ஒருத்தி Hakuin வசிக்கும் நகரத்தில் வசித்து வந்தாள். ஒரு நாள், அப்பெண் கருவுற்றிருப்பதை அறிந்த பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கும் மன வருத்தத்துக்கும் ஆளானார்கள்.அவல நிலைக்கு காரணமான ஆண் மகனைக் காட்டிக்கொடுக்க அப்பெண் விரும்பவில்லை.
பெற்றோரின் வற்புறுத்தலை தாங்க இயலாமல் அவள் "hakuin ekaku"வைச் சுட்டிக்காட்டி, அவரே தன் பரிதாப நிலைக்கு காரணமென புகார் கூறினாள்.
கடும் கோபத்திற்கு ஆளான அவள் பெற்றோர் உடனே hakuin'ஐ சந்தித்து விளக்கம் கேட்க, hakuinன் "அப்படியா?" என்ற பதில் அளித்தார்.
நாட்கள் செல்லச் செல்ல அவர் செல்வாக்கும் மரியாதையும் வெகுவாக குறைந்தது. மக்கள் பேசிய அவதூறு மொழிகளை அவர் பொருட்படுத்தாது, "அப்படியா" என்று பதிலுரைத்தவாறு இருந்தார்.
குழந்தை பிறப்பின் பின்னர், அக்குழந்தையை hakuin பாதுகாப்பில் பெண்ணின் பெற்றோர் விட்டுச் சென்றனர். குழந்தையை பாலூட்டிச் சீராட்டி பெரிதும் அன்புடன் அவர் வளர்த்து வந்தார்.
ஒரு வருடம் பூர்த்தியாகும் தருவாயில் இளம் பெண்ணிற்கு தான் செய்த தவறு மிகவும் உறுத்தவே அவள் உண்மையை பெற்றோரிடம் ஒப்புக்கொண்டாள். Hakuin இதற்கு காரணம் அல்ல என்று விளக்கினாள்.
குழந்தையின் தந்தை மீன் சந்தையில் வேலை பார்க்கும் ஒரு சாதாரணன் என்று புரிந்த பெற்றோர்கள் தங்கள் செயலுக்கு மிகவும் வருந்தி, hakuin-னிடம் மன்னிப்பு கோர விரைந்தனர்.
அத்தனையும் கேட்டுக் கொண்ட Hakuin மீண்டும் புன்னகையுடன் "அப்படியா?" என்று முடித்தார்.
**
கவனிக்கத்தக்கதும் பெரிதும் பேசப்பட்டதுமான ஒரு நிகழ்ச்சியாக இது பதிக்கப்படுகிறது. அவர் அடைந்த "ஸ்தித ப்ரக்ஞ" நிலைக்கு நல்ல எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி திகழ்ந்தது.
அவர் பிறந்த ஊரான hara என்ற கிராமத்தில் ஜென் பயிற்சி மையத்தை உருவாக்கினர். தனது 83-ஆம் வயதில் இவ்விடத்திலேயே hakuin ekaku உயிர் நீத்தார்.
A zen poem by Hakuin Ekaku:
All sentient beings are essentially Buddhas.
As with water and ice, there is no ice without water;
apart from sentient beings, there are no Buddhas.
Not knowing how close the truth is,
we seek it far away
- what a pity!
- Hakuin Ekaku Zenji
சேதனம் அனைத்துமே புத்தத்தின் தத்துவம்.
பனிவடிவில் மறைந்துறையும்
பாயும் நீரைப் போல,
உள்ளுரையும் தத்துவம்;
நீரின்றி அமையாது பனித்துளி.
சேதனம் அனைத்துமே
புத்தர்களேயன்றி வேறில்லை.
சேதனத்தைத் தாண்டி
புத்தமென்று தனியெதுவுமில்லை
தன்னுள் உறங்கியிருக்கும்
உண்மையின் அண்மையை உணராது
தொலைவில் தேடித் திரியும்
இரக்கத்துக்குரிய மனிதம்...
(மூலம் - hakuin ekaku zenji)
-ஷக்திப்ரபா
(நன்றி wiki)
Labels:
மொழியாக்கம்
November 01, 2014
அன்புள்ள அப்பா.......
நீ இன்றி நான் இன்னும் வாழ்கிறேன். இதோ எழுதக் கூட துவங்கிவிட்டேன். நீ நலமாகவே இருப்பாய் என நம்புகிறேன். உன்னை இறைவனும், நம் குருவும் வழி நடத்திக் கொண்டிருக்கலாம்.
சொல்லாமல் கொள்ளாமல், ஓடியாடி சிரித்தபடியே, கணப்பொழுதில் நீ கடந்து சென்றுவிட்டாயே!.... எங்க்களுக்கு வலித்தாலும், மென்மையான உனக்கு மரணமும் பூ போன்று கொய்துச் சென்றது.
நொடிக்கொரு முறை உன் இருப்பிடத்திலிருந்து தொலைப்பேசிய நீ இன்னும் எப்படி என்னுடனும் அம்மாவுடனும் பேசாமலே இருக்கிறாய்?
உன்னை ஒரு நாள் காண்பேன் என நம்புகிறேன். அது வரை எங்கள் நினைவுகளையும் அன்பையும் நீயும் சுமந்திரு. உனக்கு கோடி முத்தங்கள்.
அன்புடன்,
.........
நீ இன்றி நான் இன்னும் வாழ்கிறேன். இதோ எழுதக் கூட துவங்கிவிட்டேன். நீ நலமாகவே இருப்பாய் என நம்புகிறேன். உன்னை இறைவனும், நம் குருவும் வழி நடத்திக் கொண்டிருக்கலாம்.
சொல்லாமல் கொள்ளாமல், ஓடியாடி சிரித்தபடியே, கணப்பொழுதில் நீ கடந்து சென்றுவிட்டாயே!.... எங்க்களுக்கு வலித்தாலும், மென்மையான உனக்கு மரணமும் பூ போன்று கொய்துச் சென்றது.
நொடிக்கொரு முறை உன் இருப்பிடத்திலிருந்து தொலைப்பேசிய நீ இன்னும் எப்படி என்னுடனும் அம்மாவுடனும் பேசாமலே இருக்கிறாய்?
உன்னை ஒரு நாள் காண்பேன் என நம்புகிறேன். அது வரை எங்கள் நினைவுகளையும் அன்பையும் நீயும் சுமந்திரு. உனக்கு கோடி முத்தங்கள்.
அன்புடன்,
.........
March 01, 2013
Subscribe to:
Posts (Atom)






